حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ سَعِيدِ بْنِ حَسَّانَ عَنْ عُرْوَةَ بْنِ عِيَاضٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ عِنْدِي جَارِيَةً لِي وَأَنَا أَعْزِلُ عَنْهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ ذَلِكَ لَنْ يَمْنَعَ شَيْئًا أَرَادَهُ اللَّهُ قَالَ فَجَاءَ الرَّجُلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْجَارِيَةَ الَّتِي كُنْتُ ذَكَرْتُهَا لَكَ حَمَلَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
و حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ حَسَّانَ قَاصُّ أَهْلِ مَكَّةَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ عِيَاضِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ النَّوْفَلِيُّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَى حَدِيثِ سُفْيَانَ
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். நான் அவளிடம் (செல்லும்போது) அஸ்லுச் செய்துகொள்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “அ(வ்வாறு அஸ்லுச் செய்வ)து அல்லாஹ் நாடியுள்ள எதையும் தடுத்து விடப்போவதில்லை” என்றார்கள். அவர் (சில நாட்களுக்குப் பின்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களிடம் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதரும் ஆவேன்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
ஸயீத் பின் ஹஸ்ஸான் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து …” என்று ஆரம்பமாகிறது.