அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2500

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَبْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏

أَذِنَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏فَانْطَلَقْتُ أَنَا وَرَجُلٌ إِلَى امْرَأَةٍ مِنْ ‏ ‏بَنِي عَامِرٍ ‏ ‏كَأَنَّهَا ‏ ‏بَكْرَةٌ ‏ ‏عَيْطَاءُ ‏ ‏فَعَرَضْنَا عَلَيْهَا أَنْفُسَنَا فَقَالَتْ مَا ‏ ‏تُعْطِي فَقُلْتُ رِدَائِي وَقَالَ صَاحِبِي رِدَائِي وَكَانَ ‏ ‏رِدَاءُ ‏ ‏صَاحِبِي أَجْوَدَ مِنْ رِدَائِي وَكُنْتُ أَشَبَّ مِنْهُ فَإِذَا نَظَرَتْ إِلَى ‏ ‏رِدَاءِ ‏ ‏صَاحِبِي أَعْجَبَهَا وَإِذَا نَظَرَتْ إِلَيَّ أَعْجَبْتُهَا ثُمَّ قَالَتْ أَنْتَ وَرِدَاؤُكَ يَكْفِينِي فَمَكَثْتُ مَعَهَا ثَلَاثًا ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ كَانَ عِنْدَهُ شَيْءٌ مِنْ هَذِهِ النِّسَاءِ الَّتِي ‏ ‏يَتَمَتَّعُ ‏ ‏فَلْيُخَلِّ سَبِيلَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (மக்கா வெற்றியின்போது) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். நானும் மற்றொருவரும் ‘பனூ ஆமிர்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றோம். அவள் கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்களில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவளிடம் நாங்கள் கோரினோம். அவள், “நீங்கள் (மணக்கொடையாக) என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டாள். நான், “எனது மேலாடையை” என்றேன். என்னுடன் வந்திருந்தவரும் “எனது மேலாடையை” என்று கூறினார். என்னுடன் வந்திருந்தவரின் மேலாடை எனது மேலாடையைவிடத் தரமானதாக இருந்தது. ஆனால், நான் அவரைவிட (வயது குறைந்த) இளைஞனாயிருந்தேன். அவள் என்னுடன் வந்திருந்தவரின் மேலாடையைக் கூர்ந்து பார்த்தபோது, அது அவளுக்குப் பிடித்தது. அதே சமயத்தில், அவள் என்னைப் பார்த்தபோது, நானும் அவளுக்குப் பிடித்திருந்தேன். பிறகு அவள், (என்னைப் பார்த்து) “நீரும் உமது மேலாடையுமே எனக்குப் போதும்” என்றாள். நான் (அவளை மணமுடித்து) அவளுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்முத்ஆ முறையில் மணமுடிக்கப்பட்ட பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அப்பெண்ணை அவளது வழியில் விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி)

Share this Hadith: