حَدَّثَنَا أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا بِشْرٌ يَعْنِي ابْنَ مُفَضَّلٍ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ عَنْ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ:
أَنَّ أَبَاهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتْحَ مَكَّةَ قَالَ فَأَقَمْنَا بِهَا خَمْسَ عَشْرَةَ ثَلَاثِينَ بَيْنَ لَيْلَةٍ وَيَوْمٍ فَأَذِنَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مُتْعَةِ النِّسَاءِ فَخَرَجْتُ أَنَا وَرَجُلٌ مِنْ قَوْمِي وَلِي عَلَيْهِ فَضْلٌ فِي الْجَمَالِ وَهُوَ قَرِيبٌ مِنْ الدَّمَامَةِ مَعَ كُلِّ وَاحِدٍ مِنَّا بُرْدٌ فَبُرْدِي خَلَقٌ وَأَمَّا بُرْدُ ابْنِ عَمِّي فَبُرْدٌ جَدِيدٌ غَضٌّ حَتَّى إِذَا كُنَّا بِأَسْفَلِ مَكَّةَ أَوْ بِأَعْلَاهَا فَتَلَقَّتْنَا فَتَاةٌ مِثْلُ الْبَكْرَةِ الْعَنَطْنَطَةِ فَقُلْنَا هَلْ لَكِ أَنْ يَسْتَمْتِعَ مِنْكِ أَحَدُنَا قَالَتْ وَمَاذَا تَبْذُلَانِ فَنَشَرَ كُلُّ وَاحِدٍ مِنَّا بُرْدَهُ فَجَعَلَتْ تَنْظُرُ إِلَى الرَّجُلَيْنِ وَيَرَاهَا صَاحِبِي تَنْظُرُ إِلَى عِطْفِهَا فَقَالَ إِنَّ بُرْدَ هَذَا خَلَقٌ وَبُرْدِي جَدِيدٌ غَضٌّ فَتَقُولُ بُرْدُ هَذَا لَا بَأْسَ بِهِ ثَلَاثَ مِرَارٍ أَوْ مَرَّتَيْنِ ثُمَّ اسْتَمْتَعْتُ مِنْهَا فَلَمْ أَخْرُجْ حَتَّى حَرَّمَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
و حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ حَدَّثَنِي الرَّبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ عَنْ أَبِيهِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ بِشْرٍ وَزَادَ قَالَتْ وَهَلْ يَصْلُحُ ذَاكَ وَفِيهِ قَالَ إِنَّ بُرْدَ هَذَا خَلَقٌ مَحٌّ
என் தந்தை (ஸப்ரா அல்ஜுஹனீ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்கா வெற்றிப் போரில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மக்காவில் பதினைந்து நாட்கள் (முப்பது இரவு – பகல்கள்) தங்கியிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்த (என் தந்தையின் சகோரர் புதல்வர்) ஒருவரும் (பெண் தேடிப்) புறப்பட்டோம். நான் அவரைவிட அழகில் சிறந்தவனாக இருந்தேன். அவர் சுமாரான அழகுடையவராகவே இருந்தார்.
எங்களில் ஒவ்வொருவருடனும் ஒரு போர்வை இருந்தது. எனது போர்வை மிகப் பழையதாயிருந்தது. என் தந்தையின் சகோதரர் புதல்வரது போர்வை புதியதாகவும் மிருதுவாகவும் இருந்தது. நாங்கள் மக்காவிற்குக் கீழ்ப் புறத்திலோ மேற் புறத்திலோ இருந்தபோது, கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்ற (அழகான) கன்னிப் பெண் ஒருத்தி எங்களைச் சந்தித்தாள். அவளிடம் நாங்கள், “எங்களில் ஒருவரை அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ள இசைவு உண்டா?” எனக் கேட்டோம். அவள், “நீங்கள் இருவரும் (எனக்காக) என்ன செலவிடுவீர்கள்?” என்று கேட்டாள். எங்களில் ஒவ்வொருவரும் எங்களிடமிருந்த போர்வையை விரித்துக் காட்டினோம். அவள் எங்கள் இருவரையும் கூர்ந்து நோக்கலானாள். என்னுடன் வந்திருந்தவர் அவளது ஒரு பக்கத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, “இவரது போர்வை பழையது; எனது போர்வை புதியது; மென்மையானது” என்று சொன்னார். உடனே அவள், “இவரது போர்வையே பரவாயில்லை (அதுவே போதும்)” என இரு முறையோ மூன்று முறையோ கூறினாள். பிறகு அவளை நான் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொண்டேன். நான் (அங்கிருந்து) புறப்படுவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஸப்ரா அல்ஜுஹனீ (ரலி) வழியாக அவர்தம் மகன் ரபீஉ பின் ஸப்ரா (ரஹ்)
குறிப்பு :
வுஹைப் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் மக்கா வெற்றி ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டோம் …” என்று ஆரம்பமாகிறது. என்னுடன் வந்திருந்தவர் (என்னைச் சுட்டி), “இவரது போர்வை இற்றுப்போன பழைய போர்வை எனக் கூறினார்” என்றும் அவரைக் குறித்து அப்பெண், “அவர் (எனக்கு) சரிப்படுவாரா?” என்று கேட்டதாகவும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.