و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ قَالَ سَمِعْتُ أَبِي رَبِيعَ بْنَ سَبْرَةَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ:
أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ فَتْحِ مَكَّةَ أَمَرَ أَصْحَابَهُ بِالتَّمَتُّعِ مِنْ النِّسَاءِ قَالَ فَخَرَجْتُ أَنَا وَصَاحِبٌ لِي مِنْ بَنِي سُلَيْمٍ حَتَّى وَجَدْنَا جَارِيَةً مِنْ بَنِي عَامِرٍ كَأَنَّهَا بَكْرَةٌ عَيْطَاءُ فَخَطَبْنَاهَا إِلَى نَفْسِهَا وَعَرَضْنَا عَلَيْهَا بُرْدَيْنَا فَجَعَلَتْ تَنْظُرُ فَتَرَانِي أَجْمَلَ مِنْ صَاحِبِي وَتَرَى بُرْدَ صَاحِبِي أَحْسَنَ مِنْ بُرْدِي فَآمَرَتْ نَفْسَهَا سَاعَةً ثُمَّ اخْتَارَتْنِي عَلَى صَاحِبِي فَكُنَّ مَعَنَا ثَلَاثًا ثُمَّ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِرَاقِهِنَّ
மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ளுமாறு தம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நானும் பனூ ஸுலைம் குலத்தைச் சேர்ந்த என் நண்பர் ஒருவரும் புறப்பட்டுச் சென்று பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணைச் சந்தித்தோம். அவள் நீண்ட கழுத்துடைய இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்கள் இருவரிடம் இருந்த இரு போர்வைகளைக் காட்டி அவளை நாங்கள் பெண் கேட்டோம். அவள் (எங்களைக்) கூர்ந்து பார்த்தபோது, என் நண்பரைவிட நான் அழகனாக இருப்பதைக் கண்டுகொண்டாள். எனது போர்வையைவிட என் நண்பரின் போர்வை அழகானதாக இருந்ததையும் அவள் கண்டாள். சிறிது நேரம் அவள் மனத்திற்குள் யோசித்துவிட்டு, என் நண்பரை விடுத்து என்னை(த் துணையாக)த் தேர்ந்தெடுத்தாள்.
அவ்வாறு மணமுடிக்கப்பட்ட பெண்கள் எங்களுடன் மூன்று நாட்கள் இருந்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்களைவிட்டுப் பிரிந்துவிடுமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஸப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி)