அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2513

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏وَعَبْدِ اللَّهِ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِمَا :‏

‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏يَقُولُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏مُتْعَةِ النِّسَاءِ ‏ ‏يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏وَعَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الْإِنْسِيَّةِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபர் போர் நாளில் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணத்திற்கும் நாட்டுக் கழுதையின் இறைச்சியைப் புசிப்பதற்கும் தடை விதித்தார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி) வழியாக முஹம்மது பின் அலீ (ரஹ்)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2512

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏وَعَبْدِ اللَّهِ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِمَا ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ :‏

‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يُلَيِّنُ فِي ‏ ‏مُتْعَةِ النِّسَاءِ ‏ ‏فَقَالَ مَهْلًا يَا ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهَا يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏وَعَنْ لُحُومِ الْحُمُرِ الْإِنْسِيَّةِ

இப்னு அப்பாஸ் (ரலி) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் தொடர்பாக மென்மையான தீர்ப்பு வழங்குவதைக் கேள்விபட்ட (என் தந்தை) அலீ (ரலி), “இப்னு அப்பாஸே! நிதானம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபர் போர் நாளில், (அல்முத்ஆ) அதற்கும் நாட்டுக் கழுதையின் இறைச்சியை உண்பதற்கும் தடை விதித்து விட்டார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி) வழியாக முஹம்மது பின் அலீ (ரஹ்)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2511

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏وَعَبْدِ اللَّهِ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِمَا ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏نِكَاحِ الْمُتْعَةِ ‏ ‏يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏وَعَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ

நபி (ஸல்) கைபர் போர் நாளில் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2510

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَالْحَسَنِ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِمَا ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏مُتْعَةِ النِّسَاءِ ‏ ‏يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏وَعَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الْإِنْسِيَّةِ


‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جُوَيْرِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ ‏ ‏سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏يَقُولُ لِفُلَانٍ إِنَّكَ رَجُلٌ تَائِهٌ ‏ ‏نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يَحْيَى بْنِ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் போர் நாளில் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிப்பதற்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் அல்ளுபயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… நீர் நிலைகெட்ட ஒரு மனிதர்…” என்று ஒருவரிடம் கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று அலீ பின் அபீதாலிப் (ரலி) அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2509

‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَبْلَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏الرَّبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏وَقَالَ أَلَا إِنَّهَا حَرَامٌ مِنْ يَوْمِكُمْ هَذَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ كَانَ أَعْطَى شَيْئًا فَلَا يَأْخُذْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை செய்தார்கள். “அறிந்துகொள்ளுங்கள். இன்றைய நாளிலிருந்து மறுமை நாள்வரை அதற்குத் தடை விதிக்கப்படுகிறது. ஒருவர் (ஏற்கெனவே அல்முத்ஆ முறையில் மணமுடிக்கும்போது அப்பெண்களிடம்) எதையேனும் கொடுத்திருந்தால், அதை அவர் (திரும்பப்) பெற வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2508

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ: ‏

‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏قَامَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ نَاسًا أَعْمَى اللَّهُ قُلُوبَهُمْ كَمَا أَعْمَى أَبْصَارَهُمْ يُفْتُونَ ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏يُعَرِّضُ بِرَجُلٍ فَنَادَاهُ فَقَالَ إِنَّكَ لَجِلْفٌ جَافٍ فَلَعَمْرِي لَقَدْ كَانَتْ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏تُفْعَلُ عَلَى عَهْدِ إِمَامِ الْمُتَّقِينَ ‏ ‏يُرِيدُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏فَجَرِّبْ بِنَفْسِكَ فَوَاللَّهِ لَئِنْ فَعَلْتَهَا لَأَرْجُمَنَّكَ بِأَحْجَارِكَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏خَالِدُ بْنُ الْمُهَاجِرِ بْنِ سَيْفِ اللَّهِ ‏ ‏أَنَّهُ بَيْنَا هُوَ جَالِسٌ عِنْدَ ‏ ‏رَجُلٍ ‏ ‏جَاءَهُ رَجُلٌ فَاسْتَفْتَاهُ فِي ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏فَأَمَرَهُ بِهَا فَقَالَ لَهُ ‏ ‏ابْنُ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيُّ ‏ ‏مَهْلًا قَالَ مَا هِيَ وَاللَّهِ لَقَدْ فُعِلَتْ فِي عَهْدِ إِمَامِ الْمُتَّقِينَ قَالَ ‏ ‏ابْنُ أَبِي عَمْرَةَ ‏ ‏إِنَّهَا كَانَتْ رُخْصَةً فِي أَوَّلِ الْإِسْلَامِ لِمَنْ اضْطُرَّ إِلَيْهَا كَالْمَيْتَةِ وَالدَّمِ وَلَحْمِ الْخِنْزِيرِ ثُمَّ أَحْكَمَ اللَّهُ الدِّينَ وَنَهَى عَنْهَا


‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏رَبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏قَالَ ‏ ‏قَدْ كُنْتُ ‏ ‏اسْتَمْتَعْتُ ‏ ‏فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏امْرَأَةً مِنْ ‏ ‏بَنِي عَامِرٍ ‏ ‏بِبُرْدَيْنِ أَحْمَرَيْنِ ثُمَّ ‏ ‏نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَسَمِعْتُ ‏ ‏رَبِيعَ بْنَ سَبْرَةَ ‏ ‏يُحَدِّثُ ذَلِكَ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏وَأَنَا جَالِسٌ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) மக்காவில் (ஒருநாள் சொற்பொழிவாற்ற) எழுந்து நின்று, “அல்லாஹ், மக்களில் சிலருடைய கண்களைக் குருடாக்கியதைப் போன்று அவர்களின் உள்ளங்களையும் குருடாக்கிவிட்டான்; அவர்கள் அல்முத்ஆ திருமணம் (தற்போதும்) செல்லும் எனத் தீர்ப்பளிக்கின்றனர்” என்று கூறி, ஒருவரைச் சாடையாக விமர்சித்தார்கள். அப்போது, (விமர்சிக்கப்பட்டவர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை அழைத்து, “நீர் ஒரு விவரமற்ற முரடர்; என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) காலத்தில் அல்முத்ஆ திருமணம் நடைமுறையில் இருந்தது” என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), “உம்மை நீர் பக்குவப்படுத்திக்கொள்வீராக! (அது அப்போதே மாற்றப்பட்டுவிட்டது என்பதைத் தெரிந்த பின்பும்) அவ்வாறு நீர் (அல்முத்ஆ திருமணம்) செய்தால், (அது விபசாரக் குற்றம் என்பதால்) உம்மைக் கல் எறிந்து கொல்வேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) வழியாக அவர்தம் தம்பியான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)


குறிப்புகள் :

என்னிடம் காலித் பின் அல்முஹாஜிர் பின் ஸைஃபில்லாஹ் (ரஹ்), “நான் ஒருவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒருவர் வந்து, அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அவர் அதற்கு அனுமதியளித்தார். அப்போது (தீர்ப்பளித்த) அந்த மனிதரிடம் இப்னு அபீஅம்ரா அல்அன்ஸாரி (ரலி), “நிதானி(த்துத் தீர்ப்பளி)ப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், “அவ்வாறில்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (நபி (ஸல்) அவர்களது) காலத்தில் அது (அல்முத்ஆ திருமணம்) நடைபெற்றது” என்று கூறினார்.

அதற்கு இப்னு அபீஅம்ரா (ரலி), “அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம், இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவருக்கு மட்டும், செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டதைப் போன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அல்லாஹ் இந்த மார்க்கத்தை உறுதியாக்கியதும் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டான்” என்று கூறினார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

மேலும், “நான் பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்திருந்தேன். பின்னர், அல்முத்ஆ திருமணம் செய்யலாகாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள்” என்று ஸப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரலி) கூறினார்கள் என அவர்களுடைய புதல்வர் ரபீஉ பின் ஸப்ரா (ரஹ்) தம்மிடம் தெரிவித்தையும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

மேலும், “ரபீஉ பின் ஸப்ரா (ரஹ்) இந்த ஹதீஸை உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது நான் அங்கு அமர்ந்திருந்தேன்” என்றும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

‘அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் மிகச்சில நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் தடை செய்யப்பட்டதை அறியாதவராக அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் தர்க்கித்தவர் இப்னு அப்பாஸ் (ரலி)’ என்று இமாம் நவவீ (ரஹ்) குறிப்பிடுகின்றார் – அல் மின்ஹாஜ்.

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2507

‏و حَدَّثَنِيهِ ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏زَمَانَ الْفَتْحِ ‏ ‏مُتْعَةِ النِّسَاءِ ‏ ‏وَأَنَّ أَبَاهُ كَانَ ‏ ‏تَمَتَّعَ ‏ ‏بِبُرْدَيْنِ ‏ ‏أَحْمَرَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றியின் காலகட்டத்தில் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணத்திற்குத் தடை விதித்தார்கள். நான் இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் முடித்திருந்தேன்.

அறிவிப்பாளர் : ஸப்ரா அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2506

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الرَّبِيعِ بْنِ سَبْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى يَوْمَ الْفَتْحِ عَنْ ‏ ‏مُتْعَةِ النِّسَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி நாளில் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2505

‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الرَّبِيعِ بْنِ سَبْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏نِكَاحِ الْمُتْعَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2504

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏رَبِيعَ بْنَ سَبْرَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَبْرَةَ بْنِ مَعْبَدٍ: ‏

‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَمَرَ أَصْحَابَهُ ‏ ‏بِالتَّمَتُّعِ ‏ ‏مِنْ النِّسَاءِ قَالَ فَخَرَجْتُ أَنَا وَصَاحِبٌ لِي مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏حَتَّى وَجَدْنَا ‏ ‏جَارِيَةً ‏ ‏مِنْ ‏ ‏بَنِي عَامِرٍ ‏ ‏كَأَنَّهَا ‏ ‏بَكْرَةٌ ‏ ‏عَيْطَاءُ ‏ ‏فَخَطَبْنَاهَا إِلَى نَفْسِهَا وَعَرَضْنَا عَلَيْهَا بُرْدَيْنَا فَجَعَلَتْ تَنْظُرُ ‏ ‏فَتَرَانِي أَجْمَلَ مِنْ صَاحِبِي وَتَرَى بُرْدَ صَاحِبِي أَحْسَنَ مِنْ بُرْدِي ‏ ‏فَآمَرَتْ نَفْسَهَا ‏ ‏سَاعَةً ثُمَّ اخْتَارَتْنِي عَلَى صَاحِبِي فَكُنَّ مَعَنَا ثَلَاثًا ثُمَّ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِفِرَاقِهِنَّ

மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்துகொள்ளுமாறு தம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நானும் பனூ ஸுலைம் குலத்தைச் சேர்ந்த என் நண்பர் ஒருவரும் புறப்பட்டுச் சென்று பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணைச் சந்தித்தோம். அவள் நீண்ட கழுத்துடைய இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்கள் இருவரிடம் இருந்த இரு போர்வைகளைக் காட்டி அவளை நாங்கள் பெண் கேட்டோம். அவள் (எங்களைக்) கூர்ந்து பார்த்தபோது, என் நண்பரைவிட நான் அழகனாக இருப்பதைக் கண்டுகொண்டாள். எனது போர்வையைவிட என் நண்பரின் போர்வை அழகானதாக இருந்ததையும் அவள் கண்டாள். சிறிது நேரம் அவள் மனத்திற்குள் யோசித்துவிட்டு, என் நண்பரை விடுத்து என்னை(த் துணையாக)த் தேர்ந்தெடுத்தாள்.

அவ்வாறு மணமுடிக்கப்பட்ட பெண்கள் எங்களுடன் மூன்று நாட்கள் இருந்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்களைவிட்டுப் பிரிந்துவிடுமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி)