அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2526

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏خَالِدُ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْهِ بْنِ وَهْبٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ ‏ ‏أَرَادَ أَنْ يُنْكِحَ ابْنَهُ ‏ ‏طَلْحَةَ ‏ ‏بِنْتَ ‏ ‏شَيْبَةَ بْنِ جُبَيْرٍ ‏ ‏فِي الْحَجِّ ‏ ‏وَأَبَانُ بْنُ عُثْمَانَ ‏ ‏يَوْمَئِذٍ أَمِيرُ الْحَاجِّ فَأَرْسَلَ إِلَى ‏ ‏أَبَانٍ ‏ ‏إِنِّي قَدْ أَرَدْتُ أَنْ أُنْكِحَ ‏ ‏طَلْحَةَ بْنَ عُمَرَ ‏ ‏فَأُحِبُّ أَنْ تَحْضُرَ ذَلِكَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏أَبَانُ: ‏

أَلَا ‏ ‏أُرَاكَ عِرَاقِيًّا ‏ ‏جَافِيًا ‏ ‏إِنِّي سَمِعْتُ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَنْكِحُ الْمُحْرِمُ

உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்), ஒரு ஹஜ்ஜின்போது தம் மகன் தல்ஹாவுக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினார். அப்போது ஹாஜிகளின் தலைவராக அபான் பின் உஸ்மான் (ரஹ்) இருந்தார். எனவே, உமர் பின் உபைதில்லாஹ், “நான் (என் மகன்) தல்ஹாவுக்குத் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்” என்று கூறி அபான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். அப்போது அபான் (ரஹ்), “உம்மை நான்  ஓர் இராக்கிய முரடராகக் கருதுகின்றேன். அறிந்து கொள்க! ‘இஹ்ராம் புனந்தவர் மணமுடிக்கக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)

Share this Hadith: