அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2529

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرُ بْنُ حَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو فَزَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ الْأَصَمِّ ‏ ‏حَدَّثَتْنِي ‏ ‏مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَزَوَّجَهَا وَهُوَ حَلَالٌ قَالَ وَكَانَتْ خَالَتِي وَخَالَةَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே என்னைத் திருமணம் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி)


குறிப்பு :

“மைமூனா (ரலி), என் தாயின் சகோதரியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியும் ஆவார்” என்று இதன் அறிவிப்பாளரான யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2528

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ زَيْدٍ أَبِي الشَّعْثَاءِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏

تَزَوَّجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் புனைந்த நிலையில் திருமணம் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு:

நபி (ஸல்) அவர்களை ஹலால் நிலையில் மணந்த அன்னை மைமூனா (ரலி) அவர்களின் கூற்று (ஹதீஸ் எண் 2529), பல தோழர்களின் வழியாக அறிவிக்கப்படுகின்றது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முரண்பாடுள்ள இந்த (2528) அறிவிப்பை, அவரைத் தவிர எவரும் அறிவிக்கவில்லை. எனவே, இது ‘ஷாத்’ வகை அறிவிப்பாகும். ‘ஷாத்’ அறிவிப்புகள் சட்டமியற்றுவதற்குப் பொருந்தாதவை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

 

அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2527

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَإِسْحَقُ الْحَنْظَلِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الشَّعْثَاءِ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَزَوَّجَ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ ‏


زَادَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏الزُّهْرِيَّ ‏ ‏فَقَالَ أَخْبَرَنِي ‏ ‏يَزِيدُ بْنُ الْأَصَمِّ ‏ ‏أَنَّهُ نَكَحَهَا وَهُوَ حَلَالٌ

நபி (ஸல்) இஹ்ராம் புனைந்த நிலையில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “இந்த ஹதீஸை நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். அப்போது அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையில்தான் திருமணம் செய்தார்கள் என யஸீத் பின் அல் அஸம்மு (ரஹ்) என்னிடம் தெரிவித்தார்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2526

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏خَالِدُ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْهِ بْنِ وَهْبٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ ‏ ‏أَرَادَ أَنْ يُنْكِحَ ابْنَهُ ‏ ‏طَلْحَةَ ‏ ‏بِنْتَ ‏ ‏شَيْبَةَ بْنِ جُبَيْرٍ ‏ ‏فِي الْحَجِّ ‏ ‏وَأَبَانُ بْنُ عُثْمَانَ ‏ ‏يَوْمَئِذٍ أَمِيرُ الْحَاجِّ فَأَرْسَلَ إِلَى ‏ ‏أَبَانٍ ‏ ‏إِنِّي قَدْ أَرَدْتُ أَنْ أُنْكِحَ ‏ ‏طَلْحَةَ بْنَ عُمَرَ ‏ ‏فَأُحِبُّ أَنْ تَحْضُرَ ذَلِكَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏أَبَانُ: ‏

أَلَا ‏ ‏أُرَاكَ عِرَاقِيًّا ‏ ‏جَافِيًا ‏ ‏إِنِّي سَمِعْتُ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَنْكِحُ الْمُحْرِمُ

உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்), ஒரு ஹஜ்ஜின்போது தம் மகன் தல்ஹாவுக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினார். அப்போது ஹாஜிகளின் தலைவராக அபான் பின் உஸ்மான் (ரஹ்) இருந்தார். எனவே, உமர் பின் உபைதில்லாஹ், “நான் (என் மகன்) தல்ஹாவுக்குத் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்” என்று கூறி அபான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். அப்போது அபான் (ரஹ்), “உம்மை நான்  ஓர் இராக்கிய முரடராகக் கருதுகின்றேன். அறிந்து கொள்க! ‘இஹ்ராம் புனந்தவர் மணமுடிக்கக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)

அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2525

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ بْنِ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْهِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبَانَ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ: ‏

يَبْلُغُ بِهِ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْمُحْرِمُ لَا يَنْكِحُ وَلَا يَخْطُبُ

“இஹ்ராம் புனைந்தவர் மணமுடிக்கவும் கூடாது; பெண் கேட்கவும் கூடாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2524

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَوَاءٍ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏عَنْ ‏ ‏مَطَرٍ ‏ ‏وَيَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْهِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبَانَ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَلَا يُنْكَحُ وَلَا يَخْطُبُ

“இஹ்ராம் புனைந்தவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2523

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نُبَيْهُ بْنُ وَهْبٍ ‏ ‏قَالَ ‏ ‏بَعَثَنِي ‏ ‏عُمَرُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ ‏ ‏وَكَانَ يَخْطُبُ بِنْتَ ‏ ‏شَيْبَةَ بْنِ عُثْمَانَ ‏ ‏عَلَى ابْنِهِ فَأَرْسَلَنِي إِلَى ‏ ‏أَبَانَ بْنِ عُثْمَانَ ‏ ‏وَهُوَ عَلَى الْمَوْسِمِ ‏ ‏فَقَالَ: ‏

أَلَا أُرَاهُ أَعْرَابِيًّا ‏ ‏إِنَّ الْمُحْرِمَ لَا يَنْكِحُ وَلَا يُنْكَحُ أَخْبَرَنَا بِذَلِكَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்), தம் மகனுக்கு ஷைபான் பின் ஜுபைர் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களின் மகளைப் பெண் கேட்டுக்கொண்டிருந்தார். எனவே, அப்போது ஹஜ் காலத்தில் இருந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் என்னை அனுப்பி(அத்திருமணத்திற்குச் சாட்சியாக இருந்து நடத்திவைக்க வருமாறு கோரி)னார்கள்.

அதற்கு அபான் (ரஹ்), “அவரை நான் விபரமில்லாத ஒரு பாமரானாகக் கருதுகிறேன். அறிந்து கொள்க! நிச்சயமாக இஹ்ராம் புனைந்தவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது; (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது” என்று சொன்னார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) எமக்கு அறிவித்தார்கள் என்றும் கூறி (மறுத்து)விட்டார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)

அத்தியாயம்: 16, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2522

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْهِ بْنِ وَهْبٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ ‏ ‏أَرَادَ أَنْ يُزَوِّجَ ‏ ‏طَلْحَةَ بْنَ عُمَرَ ‏ ‏بِنْتَ ‏ ‏شَيْبَةَ بْنِ جُبَيْرٍ ‏ ‏فَأَرْسَلَ إِلَى ‏ ‏أَبَانَ بْنِ عُثْمَانَ ‏ ‏يَحْضُرُ ذَلِكَ وَهُوَ أَمِيرُ الْحَجِّ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبَانُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏يَقُولُ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَلَا يُنْكَحُ وَلَا يَخْطُبُ

உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்), (தம்முடைய மகன்) தல்ஹாவுக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினார். எனவே, (அவ்வாண்டு) ஹாஜிகளின் தலைவராயிருந்த அபான் பின் உஸ்மான் பின் அஃப்பான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (அத்திருமணத்திற்கு) வரவேண்டுமென்று அழைத்தார்.

அப்போது அபான் (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இஹ்ராம் புனைந்தவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது’ என்று கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறி(மறுத்து)விட்டார்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)