و حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ أَبِي عُمَرَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ أَوْ يَتَنَاجَشُوا أَوْ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ أَوْ يَبِيعَ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا تَسْأَلْ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا أَوْ مَا فِي صَحْفَتِهَا
زَادَ عَمْرٌو فِي رِوَايَتِهِ وَلَا يَسُمْ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ
வெளியூரிலிருந்து (பொருட்கள் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும், அல்லது வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது (அதை இடைமறித்துத்) தமக்காகப் பெண் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு) வியாபாரம் செய்ய வேண்டாம் என்றும், ஒரு பெண், தன் (முஸ்லிம்) சகோதரியின் உரிமையைப் பறித்து(த் தனதாக்கி)க்கொள்ள, அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கேட்க வேண்டாம் என்றும் நபி (ஸல்) தடை விதித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
அம்ருந் நாகித் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம் (முஸ்லிம்) சகோதரன் விலை பேசிக்கொண்டிருக்கும்போது அதைவிட (அதிகமாக) விலை பேச வேண்டாம் என்றும் நபி (ஸல்) தடை விதித்தார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.