و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْحَكَمِ عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ:
اسْتَأْذَنَ عَلَيَّ أَفْلَحُ بْنُ قُعَيْسٍ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَأَرْسَلَ إِنِّي عَمُّكِ أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِي فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ لِيَدْخُلْ عَلَيْكِ فَإِنَّهُ عَمُّكِ
அஃப்லஹ் பின் குஐஸ் (ரலி) (என் பால்குடித் தந்தையின் சகோதரர்) எனது வீட்டிற்குள் நுழைவதற்கு என்னிடம் அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அவர் (ஒருவரை என்னிடம்) அனுப்பி, “என் சகோதரரின் மனைவி உங்களுக்குப் பாலூட்டியிருக்கிறார்; நான் உங்களுக்குப் பால்குடித் தந்தையின் சகோதரன் ஆவேன் (எனவே நீங்கள் எனக்கு அனுமதியளியுங்கள்)” என்று கூறினார். அப்போதும் அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் இதைத் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “அவர் உன் வீட்டிற்குள் வரலாம்; ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)