அத்தியாயம்: 17, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2623

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ: ‏

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ ‏ ‏تَنَوَّقُ ‏ ‏فِي ‏ ‏قُرَيْشٍ ‏ ‏وَتَدَعُنَا فَقَالَ وَعِنْدَكُمْ شَيْءٌ قُلْتُ نَعَمْ بِنْتُ ‏ ‏حَمْزَةَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّهَا لَا تَحِلُّ لِي إِنَّهَا ‏ ‏ابْنَةُ أَخِي ‏ ‏مِنْ الرَّضَاعَةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நம் (குடும்பத்துப் பெண்கள் தம்)மை விடுத்து, குறைஷியரில் (பெண்களை மணப்பதில்) நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “உங்களிடம் (நம் குடும்பத்துப் பெண்) யாரும் இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள். அப்போது நான், “ஆம்! (நம் சிறிய தந்தை&) ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் இருக்கின்றார்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் எனக்கு (திருமணம் செய்ய) அனுமதிக்கப்பட்டவர் அல்லர். ஏனெனில், அவர் என்னுடைய பால்குடிச் சகோதரரின் மகளாவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)


குறிப்புகள் :

&அலீ (ரலி) அவர்களின் தந்தை – அபூதாலிப் பிறப்பு : கி.பி 540 ; நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பிறப்பு கி.பி 545; அவ்விருவரின் தம்பியான ஹம்ஸா (ரலி) பிறப்பு : கி.பி 568.

நபி (ஸல்) அவர்களும் ஹம்ஸா (ரலி) அவர்களும் பால்குடியால் சகோதரர்கள் ஆனவர்கள்.

Share this Hadith: