அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2629

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كُلُّهُمْ عَنْ ‏ ‏الْمُعْتَمِرِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْفَضْلِ ‏ ‏قَالَتْ: ‏

‏دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي بَيْتِي فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ إِنِّي كَانَتْ لِي امْرَأَةٌ فَتَزَوَّجْتُ عَلَيْهَا أُخْرَى فَزَعَمَتْ امْرَأَتِي الْأُولَى أَنَّهَا أَرْضَعَتْ امْرَأَتِي ‏ ‏الْحُدْثَى ‏ ‏رَضْعَةً أَوْ رَضْعَتَيْنِ فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تُحَرِّمُ ‏ ‏الْإِمْلَاجَةُ ‏ ‏وَالْإِمْلَاجَتَانِ ‏


قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فِي رِوَايَتِهِ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ

என் வீட்டில் (ஒரு முறை) நபி (ஸல்) இருந்தபோது, ஒரு கிராமவாசி வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்துகொண்டேன். என்னுடைய முதல் மனைவி, ‘நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன். (எனவே, இந்தத் திருமணம் செல்லாது)’ என்று கூறுகிறார்” எனத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு தடவையோ இரு தடவைகளோ (மட்டும்) பாலூட்டுவதால் (பால்குடி) உறவு ஏற்பட்டுவிடாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் மனைவியாவார்.

Share this Hadith: