அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2633

‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْفَضْلِ: ‏

‏سَأَلَ رَجُلٌ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتُحَرِّمُ الْمَصَّةُ فَقَالَ لَا

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “ஏற்படாது”  என்றார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2632

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْفَضْلِ: ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تُحَرِّمُ ‏ ‏الْإِمْلَاجَةُ ‏ ‏وَالْإِمْلَاجَتَانِ

“ஒரு தடவையோ இரு தடவைகளோ (மார்பிலிருந்து) பாலூட்டுவது, பால்குடி உறவை ஏற்படுத்தாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2631

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّ الْفَضْلِ ‏ ‏حَدَّثَتْ: ‏

‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تُحَرِّمُ الرَّضْعَةُ أَوْ الرَّضْعَتَانِ أَوْ الْمَصَّةُ أَوْ الْمَصَّتَانِ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدَةَ بْنِ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا ‏ ‏إِسْحَقُ ‏ ‏فَقَالَ كَرِوَايَةِ ‏ ‏ابْنِ بِشْرٍ ‏ ‏أَوْ الرَّضْعَتَانِ أَوْ الْمَصَّتَانِ ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏فَقَالَ وَالرَّضْعَتَانِ وَالْمَصَّتَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு தடவை அல்லது இரு தடவைகள் (பெண்ணிடம்) பால் குடிப்பதால் (பால்குடி) உறவு ஏற்படாது. ஒரு தடவையோ இரு தடவைகளோ (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பதால் (பால்குடி) உறவு ஏற்படாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)


குறிப்பு :

இப்னு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “… இரு தடவைகள் (பெண்ணிடம்) பால் குடிப்பதால் …”, “ … இரு தடவைகளோ (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பதால் …” எனும் சொற்றொடருக்கு முன், “அல்லது”’ என்பதற்குப் பதிலாக “மற்றும்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2630

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ أَبِي مَرْيَمَ أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْفَضْلِ: ‏

‏أَنَّ رَجُلًا مِنْ ‏ ‏بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ ‏ ‏قَالَ يَا نَبِيَّ اللَّهِ ‏ ‏هَلْ تُحَرِّمُ الرَّضْعَةُ الْوَاحِدَةُ قَالَ لَا

பனூ ஆமிர் பின் ஸஃஸஆ குலத்தைச் சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு தடவை மட்டும் (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பதால் (பால்குடி) உறவு ஏற்படுமா?” என்று கேட்டார். நபி (ஸல்), “ஏற்படாது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2629

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كُلُّهُمْ عَنْ ‏ ‏الْمُعْتَمِرِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْفَضْلِ ‏ ‏قَالَتْ: ‏

‏دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي بَيْتِي فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ إِنِّي كَانَتْ لِي امْرَأَةٌ فَتَزَوَّجْتُ عَلَيْهَا أُخْرَى فَزَعَمَتْ امْرَأَتِي الْأُولَى أَنَّهَا أَرْضَعَتْ امْرَأَتِي ‏ ‏الْحُدْثَى ‏ ‏رَضْعَةً أَوْ رَضْعَتَيْنِ فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تُحَرِّمُ ‏ ‏الْإِمْلَاجَةُ ‏ ‏وَالْإِمْلَاجَتَانِ ‏


قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فِي رِوَايَتِهِ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ

என் வீட்டில் (ஒரு முறை) நபி (ஸல்) இருந்தபோது, ஒரு கிராமவாசி வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்துகொண்டேன். என்னுடைய முதல் மனைவி, ‘நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன். (எனவே, இந்தத் திருமணம் செல்லாது)’ என்று கூறுகிறார்” எனத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு தடவையோ இரு தடவைகளோ (மட்டும்) பாலூட்டுவதால் (பால்குடி) உறவு ஏற்பட்டுவிடாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் மனைவியாவார்.

அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2628

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي مُلَيْكَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ ‏ ‏سُوَيْدٌ ‏ ‏وَزُهَيْرٌ ‏ ‏إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تُحَرِّمُ الْمَصَّةُ وَالْمَصَّتَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு தடவையோ, இரு தடவைகளோ மட்டும் (செவிலித் தாயிடம்) பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்பட்டுவிடாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)