حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْخَلِيلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ أَنَّ أُمَّ الْفَضْلِ حَدَّثَتْ:
أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُحَرِّمُ الرَّضْعَةُ أَوْ الرَّضْعَتَانِ أَوْ الْمَصَّةُ أَوْ الْمَصَّتَانِ
و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ عَبْدَةَ بْنِ سُلَيْمَانَ عَنْ ابْنِ أَبِي عَرُوبَةَ بِهَذَا الْإِسْنَادِ أَمَّا إِسْحَقُ فَقَالَ كَرِوَايَةِ ابْنِ بِشْرٍ أَوْ الرَّضْعَتَانِ أَوْ الْمَصَّتَانِ وَأَمَّا ابْنُ أَبِي شَيْبَةَ فَقَالَ وَالرَّضْعَتَانِ وَالْمَصَّتَانِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு தடவை அல்லது இரு தடவைகள் (பெண்ணிடம்) பால் குடிப்பதால் (பால்குடி) உறவு ஏற்படாது. ஒரு தடவையோ இரு தடவைகளோ (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பதால் (பால்குடி) உறவு ஏற்படாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)
குறிப்பு :
இப்னு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “… இரு தடவைகள் (பெண்ணிடம்) பால் குடிப்பதால் …”, “ … இரு தடவைகளோ (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பதால் …” எனும் சொற்றொடருக்கு முன், “அல்லது”’ என்பதற்குப் பதிலாக “மற்றும்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது.