அத்தியாயம்: 17, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2640

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُمَيْدَ بْنَ نَافِعٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ ‏ ‏تَقُولُ: ‏ ‏

سَمِعْتُ ‏ ‏أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏وَاللَّهِ مَا تَطِيبُ نَفْسِي أَنْ يَرَانِي الْغُلَامُ قَدْ اسْتَغْنَى عَنْ الرَّضَاعَةِ ‏ ‏فَقَالَتْ لِمَ قَدْ جَاءَتْ ‏ ‏سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَرَى فِي وَجْهِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏مِنْ دُخُولِ ‏ ‏سَالِمٍ ‏ ‏قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْضِعِيهِ فَقَالَتْ إِنَّهُ ذُو لِحْيَةٍ فَقَالَ ‏ ‏أَرْضِعِيهِ يَذْهَبْ مَا فِي وَجْهِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏فَقَالَتْ وَاللَّهِ مَا عَرَفْتُهُ فِي وَجْهِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ

நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! பால்குடிப் பருவத்தைக் கடந்துவிட்ட ஒரு சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “எதற்காக (நீங்கள் அவ்வாறு விரும்பவில்லை)?” என்று கேட்டுவிட்டு,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸஹ்லா பின்த்தி ஸுஹைல் (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் (என்) வீட்டிற்குள் வருவதால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடுகிறது. அதனால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியைக் காண்கின்றேன்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ ஸாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய்-மகன் என்ற உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள்.

அதற்கு ஸஹ்லா (ரலி), “அவர் (ஸாலிம்) தாடி வளர்ந்துவிட்ட இளைஞர் ஆயிற்றே?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) (மீண்டும்), “நீ அவருக்குப் பாலூட்டிவிடு. அதனால், அபூஹுதைஃபாவின் முகத்திலுள்ள அதிருப்தி மறைந்துவிடும்” என்று கூறினார்கள்.

பின்னர் ஸஹ்லா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி (ஸல்) சொன்னதை நான் செய்த) பின்னர் அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் அறியவில்லை” என்று கூறிய நிகழ்வை எடுத்துரைத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்தி அபீஸலமா (ரலி)

Share this Hadith: