அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2682

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏قَالَ ‏ ‏مَكَثْتُ عِشْرِينَ سَنَةً يُحَدِّثُنِي مَنْ لَا أَتَّهِمُ: ‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا وَهِيَ حَائِضٌ فَأُمِرَ أَنْ يُرَاجِعَهَا فَجَعَلْتُ لَا أَتَّهِمُهُمْ وَلَا أَعْرِفُ الْحَدِيثَ حَتَّى لَقِيتُ ‏ ‏أَبَا غَلَّابٍ يُونُسَ بْنَ جُبَيْرٍ الْبَاهِلِيَّ ‏ ‏وَكَانَ ‏ ‏ذَا ثَبَتٍ ‏ ‏فَحَدَّثَنِي أَنَّهُ سَأَلَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فَحَدَّثَهُ ‏ ‏أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ تَطْلِيقَةً وَهِيَ حَائِضٌ ‏ ‏فَأُمِرَ أَنْ يَرْجِعَهَا ‏


قَالَ ‏ ‏قُلْتُ أَفَحُسِبَتْ عَلَيْهِ قَالَ ‏ ‏فَمَهْ ‏ ‏أَوَ إِنْ ‏ ‏عَجَزَ وَاسْتَحْمَقَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ فَسَأَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَمَرَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ ‏ ‏فَسَأَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا حَتَّى يُطَلِّقَهَا طَاهِرًا مِنْ غَيْرِ جِمَاعٍ وَقَالَ يُطَلِّقُهَا فِي ‏ ‏قُبُلِ ‏ ‏عِدَّتِهَا

நான் நம்பத் தகுந்த சிலர் என்னிடம், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்தபோது மூன்று தலாக் சொல்லிவிட்டார்; பின்னர் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டார்” என இருபது வருடங்களாக அறிவித்துவந்தனர். நான் அவர்களைச் சந்தேகிக்க முடியாமலும், அந்த ஹதீஸை(ப் பற்றிய உண்மை நிலையை) அறியாதவனாகவும் இருந்துவந்தேன்.

இந்நிலையில், அபூஃகல்லாப் யூனுஸ் பின் ஜுபைர் அல்பாஹிலீ (ரஹ்) அவர்களை நான் சந்தித்(தபோது இந்த ஹதீஸின் உண்மைத் தன்மையைப் பற்றிக் கேட்டுவைத்)தேன். யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) நம்பத் தகுந்தவராய் இருந்தார்கள். அதற்கு, “நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) என்னிடம் ‘நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது ஒரு தலாக் சொல்லிவிட்டேன். அப்போது அவளைத் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது’  என்று என்னிடம் கூறினார்கள். நான் அவர்களிடம், ‘எனில், அது மணவிலக்காகக் கருதப்பட்டதா?’  என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேறென்ன? ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாதவனாகவும், அதைப் பற்றிய முழுமையான அறிவில்லாதவனாகவும் இருந்துவிட்டால் மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா?’ என்று கேட்டார்கள்” என யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) என்னிடம் விளக்கினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) & ஸீரீன் (ரஹ்)


குறிப்புகள் :

ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஆகவே, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் ‘உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள் … (அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!’)  என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அய்யூப் (ரஹ்) வழி வேறோர் அறிவிப்பில், “… ஆகவே உமர் (ரலி) அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது, ‘அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! பிறகு உடலுறவு நடைபெறாத தூய்மையான நிலையில் அவளை மணவிலக்குச் செய்யட்டும்!; இத்தாவை எதிர்கொள்வதற்கு ஏற்ற நாட்களில் அவளை அவர் மணவிலக்குச் செய்யுமாறு உங்கள் மகனுக்குக் கட்டளை இடுங்கள்’ என்று நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: