حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ جُبَيْرٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ:
طَلَّقْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ فَأَتَى عُمَرُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُرَاجِعْهَا فَإِذَا طَهُرَتْ فَإِنْ شَاءَ فَلْيُطَلِّقْهَا
قَالَ فَقُلْتُ لِابْنِ عُمَرَ أَفَاحْتَسَبْتَ بِهَا قَالَ مَا يَمْنَعُهُ أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்: நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்), “தம் மனைவியை (உங்கள் மகன்) திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! அவள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் விரும்பினால் அவர் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்! (என்று உத்தரவிடுங்கள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்)
குறிப்பு :
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “(மாதவிடாய் காலத்தில் சொல்லப்பட்ட) அந்த மணவிலக்கை நீங்கள் மணவிலக்காகக் கருதினீர்களா?” என்று கேட்டேன். அதற்கு “ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாதவனாகவும், அதைப் பற்றிய முழுமையான அறிவில்லாதவனாகவும் இருந்துவிட்டால் அ(து, மணவிலக்காக ஆகிவிடுவதை)த் தடுக்கக்கூடிய ஏதும் உண்டு எனக் கருதுகின்றாயா?” என்று கேட்டார்கள்.