அத்தியாயம்: 18, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2699

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ: ‏

‏مَا أُبَالِي خَيَّرْتُ امْرَأَتِي وَاحِدَةً أَوْ مِائَةً أَوْ أَلْفًا بَعْدَ أَنْ تَخْتَارَنِي وَلَقَدْ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ قَدْ خَيَّرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفَكَانَ طَلَاقًا

நான் என் மனைவிக்கு விருப்ப உரிமை அளித்து, அவள் என்னையே தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டால்,  அவளுக்கு (ஆரம்பத்தில்) ஒன்றென்ன! நூறு அல்லது ஆயிர(ம் விவாகர)த்திற்கு நான் உரிமை அளித்திருந்தாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் மனைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்ப உரிமை அளித்தார்கள். அதுவென்ன தலாக்கா? (இல்லையே!)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)

Share this Hadith: