அத்தியாயம்: 18, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2708

‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ:

‏لَمَّا مَضَى تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَدَأَ بِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ أَقْسَمْتَ أَنْ لَا تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا وَإِنَّكَ دَخَلْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ أَعُدُّهُنَّ فَقَالَ ‏ ‏إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ ثُمَّ قَالَ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلَا عَلَيْكِ أَنْ لَا تَعْجَلِي فِيهِ حَتَّى ‏ ‏تَسْتَأْمِرِي ‏ ‏أَبَوَيْكِ ثُمَّ قَرَأَ عَلَيَّ الْآيَةَ  ” ‏يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ ‏ ‏حَتَّى بَلَغَ ‏ ‏أَجْرًا عَظِيمًا “‏

‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏قَدْ عَلِمَ وَاللَّهِ أَنَّ أَبَوَيَّ لَمْ يَكُونَا لِيَأْمُرَانِي بِفِرَاقِهِ قَالَتْ فَقُلْتُ ‏ ‏أَوَ فِي هَذَا ‏ ‏أَسْتَأْمِرُ ‏ ‏أَبَوَيَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ


قَالَ ‏ ‏مَعْمَرٌ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏أَيُّوبُ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏لَا تُخْبِرْ نِسَاءَكَ أَنِّي اخْتَرْتُكَ فَقَالَ لَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ أَرْسَلَنِي مُبَلِّغًا وَلَمْ يُرْسِلْنِي ‏ ‏مُتَعَنِّتًا ‏ ‏قَالَ ‏ ‏قَتَادَةُ ‏‏صَغَتْ قُلُوبُكُمَا  – مَالَتْ قُلُوبُكُمَا

இருபத்தொன்பது இரவுகள் கழிந்த பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆரம்பமாக என்னிடமே வந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப்போவதில்லை என்று நீங்கள் (ஈலா) சத்தியம் செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பதாவது நாளே வந்துவிட்டீர்களே! நாட்களை நான் எண்ணிக் கொண்டிருந்தேன்!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இந்த மாதம் இருபத்தொன்பது நாட்கள்தாம்” என்று பதில் கூறினார்கள்.

பிறகு என்னிடம், “ஆயிஷா! உன்னிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைப் பற்றி நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து) விடாதே!” என்று கூறிவிட்டு, “நபியே! உங்கள் மனைவியரிடம் கூறுங்கள் …” என்று தொடங்கி “ … உங்களிலுள்ள நல்லவர்களுக்காக அல்லாஹ் மகத்தான நன்மையை தயார் செய்துள்ளான்” என்று முடியும் (33:28,29) வசனங்களை எனக்கு அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! என் பெற்றோர் நிச்சயமாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து விடுமாறு எனக்கு ஆலோசனை கூறமாட்டார்கள் என்பதை நபி (ஸல்) அறிந்திருந்தார்கள். எனவே, நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “(உங்கள் உறவை முறித்துக்கொள்ளும்) இந்த விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கப்போகிறேன்? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். மேலும், நான் “உங்களையே தேர்ந்து கொண்டேன் என்ற தகவலை, உங்களுடைய மற்ற மனைவியரிடம் தெரிவித்துவிடாதீர்கள்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ் என்னை எடுத்துரைப்பவனாகவே அனுப்பியுள்ளான்; அவன் என்னைக் கடினப் போக்கு உள்ளவனாக அனுப்பவில்லை” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

“(66:4ஆவது) வசனத்தின் மூலத்தில் உள்ள “ஃபகத் ஸஃகத் குலூபுகுமா” என்பதற்கு ‘உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிக்கின்றன’ என்று பொருளாகும்” என்று கத்தாதா (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: