அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2711

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّهُ قَالَ سَأَلْتُ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏فَأَخْبَرَتْنِي: ‏

‏أَنَّ زَوْجَهَا الْمَخْزُومِيَّ طَلَّقَهَا فَأَبَى أَنْ يُنْفِقَ عَلَيْهَا فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَتْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا نَفَقَةَ لَكِ فَانْتَقِلِي فَاذْهَبِي إِلَى ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏فَكُونِي عِنْدَهُ فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى تَضَعِينَ ثِيَابَكِ عِنْدَهُ

நான் ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர் ‘இத்தா’ இருந்தபோது என்ன நடந்தது என்று) கேட்டேன். அதற்கு அவர், “மக்ஸூமி குலத்தைச் சேர்ந்தவரான என் கணவர் என்னைத் தலாக் சொல்லிவிட்டார். எனக்கு (‘இத்தா’க் கால) ஜீவனாம்சம் வழங்க மறுத்தார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அதைப் பற்றி) தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு ஜீவனாம்சம் கிடையாது; நீ இடம் மாறி, (உன் தந்தையின் சகோதரர் மகன்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் சென்று, அவரது இல்லத்தில் (இத்தா முடியும்வரை) இரு! ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர் ஆவார். அவர் அங்கு இருந்தாலும் நீ உனது துணியை மாற்றிக்கொள்ளலாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)

Share this Hadith: