அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2726

‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

‏قَالَ ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏أَلَمْ تَرَيْ إِلَى ‏ ‏فُلَانَةَ بِنْتِ الْحَكَمِ ‏ ‏طَلَّقَهَا ‏ ‏زَوْجُهَا ‏ ‏الْبَتَّةَ ‏ ‏فَخَرَجَتْ فَقَالَتْ بِئْسَمَا صَنَعَتْ فَقَالَ أَلَمْ تَسْمَعِي إِلَى قَوْلِ ‏ ‏فَاطِمَةَ ‏ ‏فَقَالَتْ ‏ ‏أَمَا إِنَّهُ لَا خَيْرَ لَهَا فِي ذِكْرِ ذَلِكَ

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமுடைய மகளான இன்ன பெண்ணைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் இத்தா இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அவர் செய்தது தவறு” என்றார்கள். நான், “ஃபாத்திமா பின்த்தி கைஸ், (வேறு இடத்தில் ‘இத்தா’ இருந்தது பற்றிக்) கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “இந்தச் செய்தியைக் கூறிக்கொண்டிருப்பதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2725

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ: ‏

‏مَا ‏ ‏لِفَاطِمَةَ ‏ ‏خَيْرٌ أَنْ تَذْكُرَ هَذَا قَالَ تَعْنِي قَوْلَهَا لَا سُكْنَى وَلَا نَفَقَةَ

“மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண்ணுக்கு உறைவிடம் கிடையாது; ஜீவனாம்சமும் கிடையாது என்று கூறிக்கொண்டிருப்பதால் ஃபாத்திமா பின்த்தி கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை” என ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காஸிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2724

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏قَالَتْ: ‏

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏زَوْجِي ‏ ‏طَلَّقَنِي ثَلَاثًا وَأَخَافُ أَنْ يُقْتَحَمَ عَلَيَّ قَالَ ‏ ‏فَأَمَرَهَا فَتَحَوَّلَتْ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். நான் (என் கணவர் வீட்டில் ‘இத்தா’ இருந்தால்) அத்துமீறி யாரும் புகுந்துவிடலாம் என அஞ்சுகிறேன்” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கிருந்து இடம் மாறிக்கொள்ள) எனக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் இடம் மாறி(‘இத்தா’ இருந்து) கொண்டேன்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2723

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَ: ‏

‏تَزَوَّجَ ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ ‏ ‏بِنْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَكَمِ ‏ ‏فَطَلَّقَهَا فَأَخْرَجَهَا مِنْ عِنْدِهِ فَعَابَ ذَلِكَ عَلَيْهِمْ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَقَالُوا إِنَّ ‏ ‏فَاطِمَةَ ‏ ‏قَدْ خَرَجَتْ قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَأَتَيْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَأَخْبَرْتُهَا بِذَلِكَ فَقَالَتْ ‏ ‏مَا ‏ ‏لِفَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏خَيْرٌ فِي أَنْ تَذْكُرَ هَذَا الْحَدِيثَ

யஹ்யா பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் அவரை (மூன்று) தலாக் சொல்லி, தம் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். நான் அவர்களை (அவருடைய குடும்பத்தாரை) இது குறித்துக் கண்டித்தேன். அதற்கு அவர்கள், “ஃபாத்திமா பின்த்தி கைஸ் (‘இத்தா’க் காலத்தில் தமது கணவரின் இல்லத்திலிருந்து) வெளியேறினாரே?” என்று கூறினார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி), “இந்த ஹதீஸைக் கூறுவதால் ஃபாத்திமா பின்த்தி கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2722

‏و حَدَّثَنِي ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏السُّدِّيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْبَهِيِّ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏قَالَتْ: ‏

‏طَلَّقَنِي زَوْجِي ثَلَاثًا فَلَمْ يَجْعَلْ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُكْنَى وَلَا نَفَقَةً

என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனக்கு (என் கணவர் மூலம் ‘இத்தா’க் காலத்தில்) உறைவிடத்தையோ ஜீவனாம்சத்தையோ ஏற்பாடு செய்து தரவில்லை.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2721

‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏تَقُولُ: ‏

‏أَرْسَلَ إِلَيَّ زَوْجِي ‏ ‏أَبُو عَمْرِو بْنُ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏بِطَلَاقِي وَأَرْسَلَ مَعَهُ بِخَمْسَةِ ‏ ‏آصُعِ ‏ ‏تَمْرٍ وَخَمْسَةِ ‏ ‏آصُعِ ‏ ‏شَعِيرٍ فَقُلْتُ أَمَا لِي نَفَقَةٌ إِلَّا هَذَا وَلَا أَعْتَدُّ فِي مَنْزِلِكُمْ قَالَ لَا قَالَتْ فَشَدَدْتُ عَلَيَّ ثِيَابِي وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏كَمْ طَلَّقَكِ قُلْتُ ثَلَاثًا قَالَ صَدَقَ لَيْسَ لَكِ نَفَقَةٌ اعْتَدِّي فِي بَيْتِ ابْنِ عَمِّكِ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏فَإِنَّهُ ‏ ‏ضَرِيرُ ‏ ‏الْبَصَرِ تُلْقِي ثَوْبَكِ عِنْدَهُ فَإِذَا انْقَضَتْ عِدَّتُكِ ‏ ‏فَآذِنِينِي ‏ ‏قَالَتْ فَخَطَبَنِي خُطَّابٌ مِنْهُمْ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏وَأَبُو الْجَهْمِ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏تَرِبٌ خَفِيفُ الْحَالِ ‏ ‏وَأَبُو الْجَهْمِ ‏ ‏مِنْهُ شِدَّةٌ عَلَى النِّسَاءِ ‏ ‏أَوْ يَضْرِبُ النِّسَاءَ أَوْ نَحْوَ هَذَا ‏ ‏وَلَكِنْ عَلَيْكِ ‏ ‏بِأُسَامَةَ بْنِ زَيْدٍ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ الثَّوْرِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي الْجَهْمِ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏فَسَأَلْنَاهَا فَقَالَتْ كُنْتُ عِنْدَ ‏ ‏أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏فَخَرَجَ فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏نَجْرَانَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ مَهْدِيٍّ ‏ ‏وَزَادَ قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَشَرَّفَنِي اللَّهُ ‏ ‏بِأَبِي زَيْدٍ ‏ ‏وَكَرَّمَنِي ‏ ‏اللَّهُ ‏ ‏بِأَبِي زَيْدٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَأَبُو سَلَمَةَ ‏ ‏عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏زَمَنَ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏فَحَدَّثَتْنَا أَنَّ زَوْجَهَا طَلَّقَهَا طَلَاقًا بَاتًّا ‏ ‏بِنَحْوِ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

என் கணவர் அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல்முஃகீரா, அய்யாஷ் பின் அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து ‘ஸாஉ’ பேரீச்சம் பழமும் ஐந்து ‘ஸாஉ’ தொலி நீக்கப்படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார். நான் அவரிடம், “எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான் உங்கள் வீட்டில் ‘இத்தா’ இருக்கமாட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ், “இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)” என்று சொல்லிவிட்டார். உடனே நான் (வெளியே செல்லும்போது உடுத்தும்) எனது ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் உனக்கு எத்தனை தலாக் சொன்னார்?” என்று கேட்டார்கள். நான் “மூன்று (தலாக்)” என்றேன். (அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் கிடையாது. நீ உன் தந்தையின் சகோதரர் மகன் இப்னு உம்மி மக்தூம் அவர்களது இல்லத்தில் ‘இத்தா’ இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது துணியை அவர் அங்கு இருந்தாலும் மாற்றிக்கொள்ளலாம். உன் ‘இத்தா’க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி” என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில் முஆவியா (ரலி), அபூஜஹ்மு (ரலி) ஆகியோரும் அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்), “முஆவியா வசதி குறைந்த ஏழை. அபூஜஹ்மிடம், பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை அடித்து விடுபவர்) மாறாக, உனக்கு உஸாமா பின் ஸைது ஏற்றவர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)


குறிப்புகள் :

“நானும் அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று (அவர்களுடைய தலாக்குக் குறித்து) கேட்டோம். அவர், “நான் அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல்முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அப்போது அவர் நஜ்ரான் போருக்குப் புறப்பட்டார் …” என்று கூறினார் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன” என்று அபூபக்ரு பின் அபில்ஜஹ்மு (ரஹ்) கூறினார்.

அந்த ஹதீஸின் இறுதியில் “ … எனவே, நான் உஸாமா பின் ஸைத் – (அபூஸைத்) (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னை மேன்மைப்படுத்தினான்; அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அபூபக்ரு பின் அபில்ஜஹ்மு வழி அறிவிப்பில், “நானும் அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி), “என் கணவர் என்னை முற்றாகத் தலாக் சொல்லி, அதை முடிவுக்குக் கொண்டுவந்தார் …” என்று கூறினார்கள் எனத் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

ஒரு ‘ஸாஉ’ என்றால் நடுத்தரமான ஒருவரின் இரு கை நிறைய நான்கு முறை அள்ளிப் போடும் அளவைக் குறிக்கும். ஒரு ‘ஸாஉ’ = 2 கிலோ 176 கிராம் அளவாகும் (ஹதீஸ் 2082).

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2720

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ بْنِ صُخَيْرٍ الْعَدَوِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏تَقُولُ: ‏

‏إِنَّ زَوْجَهَا طَلَّقَهَا ثَلَاثًا فَلَمْ يَجْعَلْ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُكْنَى وَلَا نَفَقَةً قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏حَلَلْتِ ‏ ‏فَآذِنِينِي ‏ ‏فَآذَنْتُهُ فَخَطَبَهَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏وَأَبُو جَهْمٍ ‏ ‏وَأُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَرَجُلٌ تَرِبٌ لَا مَالَ لَهُ وَأَمَّا ‏ ‏أَبُو جَهْمٍ ‏ ‏فَرَجُلٌ ‏ ‏ضَرَّابٌ لِلنِّسَاءِ وَلَكِنْ ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا ‏ ‏أُسَامَةُ ‏ ‏أُسَامَةُ ‏ ‏فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏طَاعَةُ اللَّهِ وَطَاعَةُ رَسُولِهِ خَيْرٌ لَكِ قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَاغْتَبَطْتُ

என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என் கணவர் மூலம்) உறைவிடமோ ஜீவனாம்சமோ ஏற்பாடு செய்யவில்லை. என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ உன் ‘இத்தா’க் காலத்தை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக” என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் தெரிவித்தேன். என்னை முஆவியா (ரலி), அபூஜஹ்மு (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் பெண் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முஆவியாவோ, செல்வமற்ற ஓர் ஏழை. அபூஜஹ்மோ மனைவியரை அதிகமாக அடிக்கக்கூடியவர். மாறாக, உஸாமா பின் ஸைதே (உனக்குப் பொருத்தமானவர்)” என்றார்கள். உடனே நான் ‘உஸாமா; (பெரிய) உஸாமா’ என கையால் சைகை செய்(து அதிருப்தி தெரிவித்)தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதும் அவனுடைய தூதருக்குக் கட்டுப்படுவதும் உனக்கு நல்லதாகும்” என்றார்கள். பின்னர் உஸாமாவையே நான் மணந்துகொண்டு மன நிறைவு அடைந்தேன்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2719

‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمَّارُ بْنُ رُزَيْقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ مَعَ ‏ ‏الْأَسْوَدِ بْنِ يَزِيدَ ‏ ‏جَالِسًا فِي الْمَسْجِدِ الْأَعْظَمِ وَمَعَنَا ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏فَحَدَّثَ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏بِحَدِيثِ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَجْعَلْ لَهَا سُكْنَى وَلَا نَفَقَةً ثُمَّ أَخَذَ ‏ ‏الْأَسْوَدُ ‏ ‏كَفًّا مِنْ حَصًى ‏ ‏فَحَصَبَهُ ‏ ‏بِهِ فَقَالَ وَيْلَكَ تُحَدِّثُ بِمِثْلِ هَذَا قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏لَا نَتْرُكُ كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّنَا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِقَوْلِ امْرَأَةٍ لَا نَدْرِي لَعَلَّهَا حَفِظَتْ أَوْ نَسِيَتْ لَهَا السُّكْنَى وَالنَّفَقَةُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏”لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ “‏


و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ مُعَاذٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي أَحْمَدَ ‏ ‏عَنْ ‏ ‏عَمَّارِ بْنِ رُزَيْقٍ ‏ ‏بِقِصَّتِهِ

நான் அஸ்வது பின் யஸீத் (ரஹ்) அவர்களுடன் (கூஃபாவின்) பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) தொடர்பான ஹதீஸை ஷஅபீ (ரஹ்) எங்களுக்கு அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடம் கிடையாது; ஜீவனாம்சமும் கிடையாது” என அறிவித்தார்கள் (என்பதுதான் அந்த ஹதீஸ்). (அங்கிருந்த) அஸ்வத் (ரஹ்) ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர்மீது எறிந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: “உமக்குக் கேடுதான்! இது போன்ற செய்திகளை அறிவிக்கிறீரே? உமர் (ரலி), “ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நம் நபியின் வழிமுறையையும் கைவிடமாட்டோம். ஃபாத்திமா பின்த்தி கைஸ் (உண்மையிலேயே) நல்ல நினைவில் இருக்கின்றாரா, அல்லது மறந்துவிட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்’  என்று (65:1) கூறியுள்ளான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) / ஷஅபீ (ரஹ்) வழியாக அபூஇஸ்ஹாக் அம்ரு பின் அப்தில்லாஹ் பின் உபைத் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2718

‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمَّارُ بْنُ رُزَيْقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏قَالَتْ: ‏

‏طَلَّقَنِي زَوْجِي ثَلَاثًا فَأَرَدْتُ النُّقْلَةَ فَأَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏انْتَقِلِي إِلَى بَيْتِ ابْنِ عَمِّكِ ‏ ‏عَمْرِو بْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏فَاعْتَدِّي عِنْدَهُ

என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது வேறு இடத்திற்கு மாறிச் செல்ல நான் விரும்பினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அதற்காக அனுமதி கோரினேன்). நபி (ஸல்), “நீ இடம்பெயர்ந்து, உன் தந்தையின் சகோதரர் மகன் அம்ரு பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அங்கு ‘இத்தா’ இரு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2717

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ: ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمُطَلَّقَةِ ثَلَاثًا قَالَ ‏ ‏لَيْسَ لَهَا سُكْنَى وَلَا نَفَقَةٌ

மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் குறித்து நபி (ஸல்), “அவளுக்கு உறைவிடம் கிடையாது; ஜீவனாம்சமும் கிடையாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)