அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2721

‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏تَقُولُ: ‏

‏أَرْسَلَ إِلَيَّ زَوْجِي ‏ ‏أَبُو عَمْرِو بْنُ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏بِطَلَاقِي وَأَرْسَلَ مَعَهُ بِخَمْسَةِ ‏ ‏آصُعِ ‏ ‏تَمْرٍ وَخَمْسَةِ ‏ ‏آصُعِ ‏ ‏شَعِيرٍ فَقُلْتُ أَمَا لِي نَفَقَةٌ إِلَّا هَذَا وَلَا أَعْتَدُّ فِي مَنْزِلِكُمْ قَالَ لَا قَالَتْ فَشَدَدْتُ عَلَيَّ ثِيَابِي وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏كَمْ طَلَّقَكِ قُلْتُ ثَلَاثًا قَالَ صَدَقَ لَيْسَ لَكِ نَفَقَةٌ اعْتَدِّي فِي بَيْتِ ابْنِ عَمِّكِ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏فَإِنَّهُ ‏ ‏ضَرِيرُ ‏ ‏الْبَصَرِ تُلْقِي ثَوْبَكِ عِنْدَهُ فَإِذَا انْقَضَتْ عِدَّتُكِ ‏ ‏فَآذِنِينِي ‏ ‏قَالَتْ فَخَطَبَنِي خُطَّابٌ مِنْهُمْ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏وَأَبُو الْجَهْمِ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏تَرِبٌ خَفِيفُ الْحَالِ ‏ ‏وَأَبُو الْجَهْمِ ‏ ‏مِنْهُ شِدَّةٌ عَلَى النِّسَاءِ ‏ ‏أَوْ يَضْرِبُ النِّسَاءَ أَوْ نَحْوَ هَذَا ‏ ‏وَلَكِنْ عَلَيْكِ ‏ ‏بِأُسَامَةَ بْنِ زَيْدٍ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ الثَّوْرِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي الْجَهْمِ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏فَسَأَلْنَاهَا فَقَالَتْ كُنْتُ عِنْدَ ‏ ‏أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏فَخَرَجَ فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏نَجْرَانَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ مَهْدِيٍّ ‏ ‏وَزَادَ قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَشَرَّفَنِي اللَّهُ ‏ ‏بِأَبِي زَيْدٍ ‏ ‏وَكَرَّمَنِي ‏ ‏اللَّهُ ‏ ‏بِأَبِي زَيْدٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَأَبُو سَلَمَةَ ‏ ‏عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏زَمَنَ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏فَحَدَّثَتْنَا أَنَّ زَوْجَهَا طَلَّقَهَا طَلَاقًا بَاتًّا ‏ ‏بِنَحْوِ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

என் கணவர் அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல்முஃகீரா, அய்யாஷ் பின் அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து ‘ஸாஉ’ பேரீச்சம் பழமும் ஐந்து ‘ஸாஉ’ தொலி நீக்கப்படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார். நான் அவரிடம், “எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான் உங்கள் வீட்டில் ‘இத்தா’ இருக்கமாட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ், “இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)” என்று சொல்லிவிட்டார். உடனே நான் (வெளியே செல்லும்போது உடுத்தும்) எனது ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் உனக்கு எத்தனை தலாக் சொன்னார்?” என்று கேட்டார்கள். நான் “மூன்று (தலாக்)” என்றேன். (அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் கிடையாது. நீ உன் தந்தையின் சகோதரர் மகன் இப்னு உம்மி மக்தூம் அவர்களது இல்லத்தில் ‘இத்தா’ இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது துணியை அவர் அங்கு இருந்தாலும் மாற்றிக்கொள்ளலாம். உன் ‘இத்தா’க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி” என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில் முஆவியா (ரலி), அபூஜஹ்மு (ரலி) ஆகியோரும் அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்), “முஆவியா வசதி குறைந்த ஏழை. அபூஜஹ்மிடம், பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை அடித்து விடுபவர்) மாறாக, உனக்கு உஸாமா பின் ஸைது ஏற்றவர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)


குறிப்புகள் :

“நானும் அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று (அவர்களுடைய தலாக்குக் குறித்து) கேட்டோம். அவர், “நான் அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல்முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அப்போது அவர் நஜ்ரான் போருக்குப் புறப்பட்டார் …” என்று கூறினார் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன” என்று அபூபக்ரு பின் அபில்ஜஹ்மு (ரஹ்) கூறினார்.

அந்த ஹதீஸின் இறுதியில் “ … எனவே, நான் உஸாமா பின் ஸைத் – (அபூஸைத்) (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னை மேன்மைப்படுத்தினான்; அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அபூபக்ரு பின் அபில்ஜஹ்மு வழி அறிவிப்பில், “நானும் அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி), “என் கணவர் என்னை முற்றாகத் தலாக் சொல்லி, அதை முடிவுக்குக் கொண்டுவந்தார் …” என்று கூறினார்கள் எனத் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

ஒரு ‘ஸாஉ’ என்றால் நடுத்தரமான ஒருவரின் இரு கை நிறைய நான்கு முறை அள்ளிப் போடும் அளவைக் குறிக்கும். ஒரு ‘ஸாஉ’ = 2 கிலோ 176 கிராம் அளவாகும் (ஹதீஸ் 2082).

Share this Hadith: