و حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ وَابْنُ أَبِي عُمَرَ وَاللَّفْظُ لِعَمْرٍو قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ:
وَذُكِرَ الْمُتَلَاعِنَانِ عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَقَالَ ابْنُ شَدَّادٍ أَهُمَا اللَّذَانِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كُنْتُ رَاجِمًا أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ لَرَجَمْتُهَا
فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَا تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ قَالَ ابْنُ أَبِي عُمَرَ فِي رِوَايَتِهِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ
பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) காதுபட பேசப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்), “நபி (ஸல்), ‘நான் சாட்சியல்லாமல் (ஒருவருக்குக்) கல்லெறி தண்டனை நிறைவேற்றுபவனாயிருந்தால் இதோ இவளுக்கு நிறைவேற்றியிருப்பேன்’ என்று கூறியது அவ்விருவர் தொடர்பாகத்தானா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இல்லை; அவள் தகாத உறவில் ஈடுபட்டவள் எனப் பகிரங்கமாகப் பேசப்பட்டுவந்த பெண் ஆவாள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக காஸிம் பின் முஹம்மது (ரஹ்)
குறிப்பு :
இப்னு அபீஉமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதைக் கேட்டேன் …” என ஆரம்பமாகிறது.