அத்தியாயம்: 2, பாடம்: 17, ஹதீஸ் எண்: 386

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ وَمَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ سَلْمَانَ قَالَ قَالَ لَنَا الْمُشْرِكُونَ إِنِّي أَرَى صَاحِبَكُمْ يُعَلِّمُكُمْ حَتَّى يُعَلِّمَكُمْ الْخِرَاءَةَ فَقَالَ أَجَلْ إِنَّهُ نَهَانَا أَنْ يَسْتَنْجِيَ أَحَدُنَا بِيَمِينِهِ أَوْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ وَنَهَى عَنْ الرَّوْثِ وَالْعِظَامِ وَقَالَ لَا يَسْتَنْجِي أَحَدُكُمْ بِدُونِ ثَلَاثَةِ أَحْجَارٍ

எங்களிடம் இணை வைப்பாளர் (சார்பாக ஒருவர்) “உங்கள் தோழர் (நபி ஸல்) உங்களுக்கு மல, ஜலம் கழிக்கும் முறையைக் கூட கற்றுத் தருவதாக நான் கருதுகிறேனே?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம்(உண்மை தான்); எங்களில் ஒருவர் வலக் கரத்தால் துப்புரவு செய்யக் கூடாதென்றும் (மல, ஜலம் கழிக்கும் போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாதென்றும் கெட்டிச் சாணம், எலும்புகள் ஆகியவற்றை(துப்புரவு செய்வதற்காக)ப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், ‘உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம்’ என்றும் கூறினார்கள்” என்றேன்.

அறிவிப்பாளர் : ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரலி).

Share this Hadith:

Leave a Comment