அத்தியாயம்: 2, பாடம்: 17, ஹதீஸ் எண்: 385

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنْ الْأَعْمَشِ ح و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَاللَّفْظُ لَهُ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ سَلْمَانَ قَالَ
قِيلَ لَهُ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ قَالَ فَقَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ

“மல, ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் தூதர் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறார்?” என்று ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது.

ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரலி), “ஆம்(உண்மை தான்); மல, ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மல, ஜலம் கழித்தபின்) வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும் மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும் கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரலி).