حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ قَالَ :
كُنْتُ أُصَلِّي فِي الْمَسْجِدِ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى الْقِبْلَةِ فَلَمَّا قَضَيْتُ صَلَاتِي انْصَرَفْتُ إِلَيْهِ مِنْ شِقِّي فَقَالَ عَبْدُ اللَّهِ يَقُولُ نَاسٌ إِذَا قَعَدْتَ لِلْحَاجَةِ تَكُونُ لَكَ فَلَا تَقْعُدْ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ وَلَا بَيْتِ الْمَقْدِسِ قَالَ عَبْدُ اللَّهِ وَلَقَدْ رَقِيتُ عَلَى ظَهْرِ بَيْتٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلًا بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ
நான் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கிப்லாத் திசையில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்தார்கள். நான் தொழுகையை முடித்துக் கொண்டு, நானிருந்த இடத்தில் இருந்தவாறே அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்:
‘நீங்கள் உங்களது இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால் கிப்லா திசையையோ பைத்துல் மக்திஸையோ முன்னோக்கி அமரக்கூடாது’ என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், நான் (என் சகோதரி ஹஃப்ஸா) வீட்டின் கூரை மீது (ஒரு வேலையாக) ஏறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள் மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கியபடி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருந்ததை(த் தற்செயலாக)க் காண நேர்ந்தது.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக வாஸிஉ பின் ஹப்பான் (ரஹ்)