அத்தியாயம்: 2, பாடம்: 17, ஹதீஸ் எண்: 391

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ :‏

رَقِيتُ عَلَى بَيْتِ أُخْتِي حَفْصَةَ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا لِحَاجَتِهِ مُسْتَقْبِلَ الشَّامِ مُسْتَدْبِرَ الْقِبْلَةِ

நான் என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) வீட்டின் (கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஷாம் நாட்டின் (பைத்துல் மக்திஸ்) திசையை முன்னோக்கியபடியும் கிப்லாவைப் பின்னோக்கியபடியும் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருந்ததை(த் தற்செயலாக)க் காண நேர்ந்தது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்களின் சகோதரியான ஹஃப்ஸா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவராவார்.

Share this Hadith:

Leave a Comment