அத்தியாயம்: 2, பாடம்: 24, ஹதீஸ் எண்: 414

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الثَّوْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ ‏ ‏عَنْ ‏ ‏شُرَيْحِ بْنِ هَانِئٍ ‏ ‏قَالَ ‏
‏أَتَيْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَسْأَلُهَا عَنْ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَتْ عَلَيْكَ ‏ ‏بِابْنِ أَبِي طَالِبٍ ‏ ‏فَسَلْهُ فَإِنَّهُ كَانَ يُسَافِرُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلْنَاهُ فَقَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثَةَ أَيَّامٍ ‏ ‏وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ ‏
‏قَالَ ‏ ‏وَكَانَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏إِذَا ذَكَرَ ‏ ‏عَمْرًا ‏ ‏أَثْنَى عَلَيْهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ ‏ ‏عَنْ ‏ ‏شُرَيْحِ بْنِ هَانِئٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَتْ ائْتِ ‏ ‏عَلِيًّا ‏ ‏فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي فَأَتَيْتُ ‏ ‏عَلِيًّا ‏ ‏فَذَكَرَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸஹுச் செய்(து விட்டுத் தொழு)வது பற்றிக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் அபூதாலிபின் மகன் (அலீ) இடம் சென்று கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அடிக்கடி பயணம் செல்பவராய் இருந்தார்கள்” என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், “பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும் உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஒரு இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்).

குறிப்பு:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), தமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ர் பின் கைஸ் (ரஹ்) அவர்களை நினைவு கூரும்போது அவரைப் பாராட்டிப் பேசுவார்.

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், காலுறைகள் மீது மஸஹுச் செய்வதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதாகவும் அதற்கு, அவர்கள், “அலீ அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், என்னை விட அவர்தாம் இது குறித்து நன்கறிந்தவர்” என்று கூறியதாகவும் அவ்வாறே தாம் அலீ (ரலி) அவர்களிடம் சென்று கேட்டபோது மேற்கண்டவாறு அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றும் ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) குறிப்பிடுவதாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment