அத்தியாயம்: 2, பாடம்: 34, ஹதீஸ் எண்: 439

حَدَّثَنِي ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏مَرَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى قَبْرَيْنِ فَقَالَ ‏ ‏أَمَا إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ قَالَ فَدَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا ثُمَّ قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا ‏
‏حَدَّثَنِيهِ ‏ ‏أَحْمَدُ بْنُ يُوسُفَ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَلَّى بْنُ أَسَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ وَكَانَ الْآخَرُ لَا يَسْتَنْزِهُ عَنْ الْبَوْلِ أَوْ مِنْ الْبَوْلِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அப்போது, “அறிந்து கொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்விருவரும் பெரிய (பாவச்) செயலுக்காக வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது மறையுறுப்பை) மறைக்க மாட்டார்” என்று கூறினார்கள்.

பிறகு பச்சை பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாகப் பிளந்து ஒருவர் (மண்ணறை) மீது ஒரு துண்டையும் இன்னொருவர் (மண்ணறை) மீது இன்னொரு துண்டையும் ஊன்றி வைத்தார்கள். பிறகு, “இவ்விரண்டின் ஈரம் உலராதவரைக்கும் இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

அப்துல் வாஹித் (ரஹ்) வழி அறிவிப்பில், “… மற்றொருவரோ சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்ய மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment