அத்தியாயம்: 2, பாடம்: 09, ஹதீஸ் எண்: 355

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏يُوسُفَ بْنِ مَاهَكَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏
‏قَالَ تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ سَافَرْنَاهُ فَأَدْرَكَنَا وَقَدْ حَضَرَتْ صَلَاةُ الْعَصْرِ فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا فَنَادَى ‏ ‏وَيْلٌ ‏ ‏لِلْأَعْقَابِ ‏ ‏مِنْ النَّارِ ‏

நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (சற்றுத் தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். அஸ்ருத் தொழுகையின் நேரம் நெருங்கும்போது எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவிக் (மஸஹுச் செய்து) கொண்டிருந்தோம். (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள், “(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான்” என்று அறிவிப்புச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னுல் ஆஸ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment