حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَبُو الطَّاهِرِ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالُوا أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ سَالِمٍ مَوْلَى شَدَّادٍ قَالَ :
دَخَلْتُ عَلَى عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ تُوُفِّيَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فَدَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فَتَوَضَّأَ عِنْدَهَا فَقَالَتْ يَا عَبْدَ الرَّحْمَنِ أَسْبِغْ الْوُضُوءَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَيْلٌ لِلْأَعْقَابِ مِنْ النَّارِ
و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي حَيْوَةُ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا عَبْدِ اللَّهِ مَوْلَى شَدَّادِ بْنِ الْهَادِ حَدَّثَهُ أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ عَنْهَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ قَالَا حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَوْ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنِي سَالِمٌ مَوْلَى الْمَهْرِيِّ قَالَ خَرَجْتُ أَنَا وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فِي جَنَازَةِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَمَرَرْنَا عَلَى بَابِ حُجْرَةِ عَائِشَةَ فَذَكَرَ عَنْهَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ حَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ حَدَّثَنَا فُلَيْحٌ حَدَّثَنِي نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ سَالِمٍ مَوْلَى شَدَّادِ بْنِ الْهَادِ قَالَ كُنْتُ أَنَا مَعَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَذَكَرَ عَنْهَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ
ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) இறந்த தினத்தன்று நான் நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது (அன்னையின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அங்கு வந்து உளூச் செய்தார்கள். அப்போது அன்னை ஆயிஷா (ரலி), “அப்துர் ரஹ்மானே, உளூவை நிறைவாகச் செய்! ஏனெனில், ‘(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுவதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக ஸாலிம் அபூஅப்தில்லாஹ் (ரஹ்)
குறிப்பு :
அப்துல்லாஹ்வின் தந்தை ஸாலிம் (ரஹ்) என்பார் நபித்தோழர் ஷத்தாத் பின் அல்ஹாத் மஹ்ரீ (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையாவார்.
அபூ ஸலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நானும் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களும் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது ஜனாஸாத் தொழுகைக்காகக் கிளம்பிச் சென்றபோது ஆயிஷா (ரலி) அவர்களது அறைவாயிலைக் கடந்து சென்றோம். அப்போது ஆயிஷா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (மேற்காணும்) கூற்றை நினைவு கூர்ந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்னை ஆயிஷா (ரலி), நபி (ஸல்) அவர்களது (மேற்காணும்) ஹதீஸை நினைவு கூர்ந்தபோது நான் அன்னை ஆயிஷா (ரலி) இல்லத்தில் இருந்தேன்” என்று ஸாலிம் கூறுவதாக இடம்பெற்றுள்ளது.