அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2761

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

‏أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ ‏ ‏جَارِيَةً ‏ ‏تُعْتِقُهَا فَقَالَ أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ ‏ ‏وَلَاءَهَا ‏ ‏لَنَا فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَا يَمْنَعُكِ ذَلِكِ فَإِنَّمَا ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ أَعْتَقَ

ஆயிஷா (ரலி), ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்பெண்ணின் உரிமையாளர்கள் “இவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உங்களுக்கு இவளை விற்கிறோம்” என்று கூறினர். இதை ஆயிஷா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “அ(வர்களின் செல்லாத நிபந்தனையான)து உன்னைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில்,  (அடிமையின்) வாரிசுரிமை என்பது விடுதலை செய்தவருக்கே (சட்டப்படி) உரியதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

இது பரீரா (ரலி) எனும் அடிமைப் பெண் தொடர்பான நிகழ்வாகும்:

… அன்று மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடையே உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்து விட்டு, “ இறைவாழ்த்துக்குப் பின்! மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை அவர்கள் விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும்; அது நூறு (முறை மொழியப்பட்ட) நிபந்தனையாயினும் சரியே! (ஏற்று,) பின்பற்றத் தகுந்தது அல்லாஹ்வின் சட்டமேயாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும். உங்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர், ‘(என் அடிமையாகிய) இன்னவனை விடுதலை செய்துவிடு! ஆனால், (அவனுக்கு) வாரிசாகும் உரிமை எனக்கே உரியது’ என்று கூறுகிறாரே! (சட்டப்படி, அடிமையை) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

புகாரீ ஹதீஸ் எண் 3012 (சுருக்கம்)

Share this Hadith: