அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2769

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

‏أَرَادَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَنْ تَشْتَرِيَ ‏ ‏جَارِيَةً ‏ ‏تُعْتِقُهَا فَأَبَى أَهْلُهَا إِلَّا أَنْ يَكُونَ لَهُمْ ‏ ‏الْوَلَاءُ ‏ ‏فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَا يَمْنَعُكِ ذَلِكِ فَإِنَّمَا ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ أَعْتَقَ

ஆயிஷா (ரலி), ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்பெண்ணின் உரிமையாளர்கள், அவளுக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கு இருந்தால் தவிர (விற்க மாட்டோம்) என மறுத்துவிட்டனர். இதைப் பற்றி ஆயிஷா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, “அ(வர்களின் (செல்லாத) நிபந்தனையான)து உனக்குத் தடையாக இராது. ஏனெனில்,  (சட்டப்படி அடிமையின்) வாரிசுரிமை, விடுதலை செய்தவருக்கே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2768

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ: ‏

‏كَانَ فِي ‏ ‏بَرِيرَةَ ‏ ‏ثَلَاثُ سُنَنٍ خُيِّرَتْ عَلَى زَوْجِهَا حِينَ عَتَقَتْ وَأُهْدِيَ لَهَا لَحْمٌ فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْبُرْمَةُ ‏ ‏عَلَى النَّارِ فَدَعَا بِطَعَامٍ فَأُتِيَ بِخُبْزٍ ‏ ‏وَأُدُمٍ ‏ ‏مِنْ ‏ ‏أُدُمِ ‏ ‏الْبَيْتِ فَقَالَ أَلَمْ أَرَ ‏ ‏بُرْمَةً ‏ ‏عَلَى النَّارِ فِيهَا لَحْمٌ فَقَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ ذَلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى ‏ ‏بَرِيرَةَ ‏ ‏فَكَرِهْنَا أَنْ نُطْعِمَكَ مِنْهُ فَقَالَ هُوَ عَلَيْهَا صَدَقَةٌ وَهُوَ مِنْهَا لَنَا هَدِيَّةٌ وَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيهَا إِنَّمَا ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ أَعْتَقَ

பரீராவால் மூன்று முன்மாதிரிகள் (நமக்குக்) கிடைத்தன:

  1. அவர் விடுதலை பெற்றபோது தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்.
  2. எனக்கு அன்பளிப்பாக இறைச்சி வழங்கப்பட்டது. அடுப்பில் சமையல் பாத்திரம் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்து உணவு கேட்டார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் கொண்டுவரப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் அடுப்பில் இறைச்சியுள்ள பாத்திரத்தைக் கண்டேனே?” என்று கேட்டார்கள். அ(தற்கு அங்கிருந்த)வர்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே! (ஆயினும்,) அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட இறைச்சி. தர்மப் பொருளைத் தங்களுக்கு உண்ணத் தருவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது பரீராவிற்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவின்) அன்பளிப்பு” என்று கூறினார்கள். மேலும், பரீரா விஷயத்தில்தான் “விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உரியதாகும்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2767

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هِشَامٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ أَبُو هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ رُومَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏كَانَ زَوْجُ ‏ ‏بَرِيرَةَ ‏ ‏عَبْدًا

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2766

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْقَاسِمَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

‏أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ ‏ ‏بَرِيرَةَ ‏ ‏لِلْعِتْقِ فَاشْتَرَطُوا ‏ ‏وَلَاءَهَا ‏ ‏فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا فَإِنَّ ‏ ‏الْوَلَاءَ ‏ ‏لِمَنْ أَعْتَقَ وَأُهْدِيَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَحْمٌ فَقَالُوا لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَذَا تُصُدِّقَ بِهِ عَلَى ‏ ‏بَرِيرَةَ ‏ ‏فَقَالَ هُوَ لَهَا صَدَقَةٌ وَهُوَ لَنَا هَدِيَّةٌ وَخُيِّرَتْ فَقَالَ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏وَكَانَ زَوْجُهَا حُرًّا قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏ثُمَّ سَأَلْتُهُ عَنْ زَوْجِهَا فَقَالَ لَا أَدْرِي ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினேன். (அவருடைய உரிமையாளர்கள்) அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே வேண்டும் என நிபந்தனையிட்டார்கள். அது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. வாரிசாகும் உரிமை, (சட்டப்படி அவ்வடிமையை) விடுதலை செய்தவருக்கே” என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது மக்கள், “இது பரீராவுக்குத் தர்மமாகக் கிடைத்தது” என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்” என்று சொன்னார்கள்.

மேலும், பரீரா (தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துர் ரஹ்மான் பின் அல்காஸிம் (ரஹ்) (இந்த ஹதீஸை எனக்கு அறிவிக்கையில்) “பரீராவின் கணவர் சுதந்திரமான மனிதராக இருந்தார்” என்றார். பின்னர் அவரிடம் பரீராவின் கணவரைப் பற்றி மேற்கொண்டு கேட்டபோது, “எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டார் என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2765

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

‏أَنَّهَا اشْتَرَتْ ‏ ‏بَرِيرَةَ ‏ ‏مِنْ أُنَاسٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَاشْتَرَطُوا ‏ ‏الْوَلَاءَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ وَلِيَ النِّعْمَةَ وَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَانَ زَوْجُهَا عَبْدًا وَأَهْدَتْ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏لَحْمًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ صَنَعْتُمْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏تُصُدِّقَ بِهِ عَلَى ‏ ‏بَرِيرَةَ ‏ ‏فَقَالَ هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ

நான் அன்ஸாரிகளில் சிலரிடமிருந்து (அவர்களின் அடிமையாக இருந்த) பரீராவை விலைக்குக் கேட்டேன். அப்போது அவர்கள், அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(விடுதலை எனும்) உபகாரம் செய்தவருக்கே வாரிசாகும் உரிமை உண்டு” என்று கூறினார்கள்.

(விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விருப்ப உரிமை அளித்தார்கள். அவருடைய கணவரும் அடிமையாகவே இருந்தார்.

பரீரா (ஒரு முறை) எனக்கு அன்பளிப்பாக இறைச்சியை வழங்கினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்த இறைச்சியிலிருந்து நமக்கு (உணவு) தயாரித்திருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். நான், “இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாயிற்றே?” என்றேன். அதற்கு “இது அவருக்கு தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2764

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِزُهَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏كَانَ فِي ‏ ‏بَرِيرَةَ ‏ ‏ثَلَاثُ قَضِيَّاتٍ أَرَادَ أَهْلُهَا أَنْ يَبِيعُوهَا وَيَشْتَرِطُوا وَلَاءَهَا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا فَإِنَّ ‏ ‏الْوَلَاءَ ‏ ‏لِمَنْ أَعْتَقَ قَالَتْ وَعَتَقَتْ فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاخْتَارَتْ نَفْسَهَا قَالَتْ وَكَانَ النَّاسُ يَتَصَدَّقُونَ عَلَيْهَا ‏ ‏وَتُهْدِي لَنَا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هُوَ عَلَيْهَا صَدَقَةٌ وَهُوَ لَكُمْ هَدِيَّةٌ فَكُلُوهُ

பரீராவால் மூன்று தீர்வுகள் (நமக்குக்) கிட்டின:

  1. அவருடைய உரிமையாளர்கள் அவருடைய வாரிசுரிமை தமக்கே உரியது என நிபந்தனையிட்டு, அவரை விற்பதற்கு முன்வந்தனர். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது “நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. விடுதலை செய்தவருக்கே (சட்டப்படி அடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.
  2. அவர் விடுதலை செய்யப்பட்டபோது, (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விருப்ப உரிமை வழங்கினார்கள். அப்போது அவர் தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
  3. மக்கள் அவருக்கு தர்மப் பொருட்களை வழங்குவார்கள்; (அவற்றை) அவர் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார். அது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “இது அவருக்கு தர்மமாகும்; உங்களுக்கு அது அன்பளிப்பாகும். எனவே, அதை நீங்கள் உண்ணலாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2763

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏دَخَلَتْ عَلَيَّ ‏ ‏بَرِيرَةُ ‏ ‏فَقَالَتْ إِنَّ أَهْلِي كَاتَبُونِي عَلَى تِسْعِ ‏ ‏أَوَاقٍ ‏ ‏فِي تِسْعِ سِنِينَ فِي كُلِّ سَنَةٍ ‏ ‏أُوقِيَّةٌ ‏ ‏فَأَعِينِينِي فَقُلْتُ لَهَا إِنْ شَاءَ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ عَدَّةً وَاحِدَةً وَأُعْتِقَكِ وَيَكُونَ ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِي فَعَلْتُ فَذَكَرَتْ ذَلِكَ لِأَهْلِهَا فَأَبَوْا إِلَّا أَنْ يَكُونَ ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لَهُمْ فَأَتَتْنِي فَذَكَرَتْ ذَلِكَ قَالَتْ فَانْتَهَرْتُهَا فَقَالَتْ لَا هَا اللَّهِ إِذَا قَالَتْ فَسَمِعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَنِي فَأَخْبَرْتُهُ فَقَالَ اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا وَاشْتَرِطِي لَهُمْ ‏ ‏الْوَلَاءَ ‏ ‏فَإِنَّ ‏ ‏الْوَلَاءَ ‏ ‏لِمَنْ أَعْتَقَ فَفَعَلْتُ قَالَتْ ثُمَّ خَطَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَشِيَّةً فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَمَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَهُوَ بَاطِلٌ وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ كِتَابُ اللَّهِ أَحَقُّ وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ مَا بَالُ رِجَالٍ مِنْكُمْ يَقُولُ أَحَدُهُمْ أَعْتِقْ فُلَانًا ‏ ‏وَالْوَلَاءُ ‏ ‏لِي إِنَّمَا ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ أَعْتَقَ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ وَكَانَ زَوْجُهَا عَبْدًا فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاخْتَارَتْ نَفْسَهَا وَلَوْ كَانَ حُرًّا لَمْ يُخَيِّرْهَا وَلَيْسَ فِي حَدِيثِهِمْ أَمَّا بَعْدُ

பரீரா என்னிடம் வந்து, “நான் என் உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு ஓர் #‘ஊக்கியா’ வீதம் ஒன்பது ஆண்டுகளில் ஒன்பது ‘ஊக்கியா’க்களை(விடுதலைத் தொகையாக)ச் செலுத்திவிடவேண்டும் எனும் நிபந்தனையை ஒப்புக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்; ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள்” என்று கேட்டார்.

நான், “உன் உரிமையாளர்களுக்கு அந்த ‘ஊக்கியா’க்களை நான் ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்கிறேன். (ஆனால்,) உன் வாரிசுரிமை எனக்கே உரியதாக இருக்கும். இதற்கு அவர்கள் இசைந்தால், நான் உன்னை விடுதலை செய்வேன்” என்று சொன்னேன்.

பரீரா தன் உரிமையாளர்களிடம் அதைக் கூறியபோது, (பரீராவின்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தால் தவிர அதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என அவர்கள் மறுத்துவிட்டனர். பரீரா என்னிடம் வந்து அதைத் தெரிவித்தார். நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறாயின் முடியாது” என்று கூறி, பரீராவைத் துரத்திவிட்டேன்.

இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (அதைப் பற்றி) என்னிடம் வினவ, நான் அவர்களுக்கு விவரத்தைச் சொன்னேன். அப்போது, “அவளை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. அவர்களுக்கே வாரிசுரிமை என்றும் விட்டுக்கொடு. ஆனால், (சட்டப்படி அடிமையின்) வாரிசுரிமை, விடுதலை செய்தவருக்கே” என்று கூறினார்கள்.

பிறகு (அன்று) மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப் பின்! மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை அவர்கள் விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும்; அது நூறு (முறை மொழியப்பட்ட) நிபந்தனையாயினும் சரியே! அல்லாஹ்வின் சட்டமே (ஏற்று.) பின்பற்றத் தகுந்ததாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும். உங்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர், ‘(என் அடிமையான) இன்னவனை விடுதலை செய்துவிடு! ஆனால், (அவனுக்கு) வாரிசாகும் உரிமை எனக்கே உரியது’ என்று கூறுகிறாரே! (சட்டப்படி. அடிமையின்) வாரிசுரிமை, விடுதலை செய்தவருக்கே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “பரீராவின் கணவரும் அடிமையாக இருந்தார். (விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விருப்ப உரிமை அளித்தார்கள். அப்போது பரீரா தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார். பரீராவின் கணவர் (அடிமையாக இல்லாமல்) சுதந்திரமானவராக இருந்திருப்பின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  பரீராவுக்கு விருப்ப உரிமை வழங்கியிருக்கமாட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

# ஓர் ஊக்கியா என்பது 122.472 கிராம் வெள்ளி எடைக்கு ஒப்பாகும். ஒன்பது ஊக்கியா என்பது 1கிலோ, 102.248 கிராம் வெள்ளிக்கு ஒப்பாகும்.

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2762

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ: ‏

‏أَنَّ ‏ ‏بَرِيرَةَ ‏ ‏جَاءَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَسْتَعِينُهَا فِي ‏ ‏كِتَابَتِهَا ‏ ‏وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ ‏ ‏كِتَابَتِهَا ‏ ‏شَيْئًا فَقَالَتْ لَهَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏ارْجِعِي إِلَى أَهْلِكِ فَإِنْ أَحَبُّوا أَنْ ‏ ‏أَقْضِيَ ‏ ‏عَنْكِ ‏ ‏كِتَابَتَكِ ‏ ‏وَيَكُونَ ‏ ‏وَلَاؤُكِ ‏ ‏لِي فَعَلْتُ فَذَكَرَتْ ذَلِكَ ‏ ‏بَرِيرَةُ ‏ ‏لِأَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ ‏ ‏تَحْتَسِبَ ‏ ‏عَلَيْكِ فَلْتَفْعَلْ وَيَكُونَ لَنَا ‏ ‏وَلَاؤُكِ ‏ ‏فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ابْتَاعِي فَأَعْتِقِي فَإِنَّمَا ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ أَعْتَقَ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنْ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ وَإِنْ شَرَطَ مِائَةَ مَرَّةٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ ‏


حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏جَاءَتْ ‏ ‏بَرِيرَةُ ‏ ‏إِلَيَّ فَقَالَتْ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِنِّي ‏ ‏كَاتَبْتُ ‏ ‏أَهْلِي عَلَى تِسْعِ ‏ ‏أَوَاقٍ ‏ ‏فِي كُلِّ عَامٍ ‏ ‏أُوقِيَّةٌ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏وَزَادَ فَقَالَ لَا يَمْنَعُكِ ذَلِكِ مِنْهَا ابْتَاعِي وَأَعْتِقِي وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ

பரீரா (எனும் அடிமைப் பெண்), தமது விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்கு உதவி கோரி என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தமது விடுதலைத் தொகையில் எதையும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், “நீ உன் உரிமையாளர்களிடம் திரும்பிச் செல். உன் விடுதலைப் பத்திரத்தின் முழுத் தொகையையும் நான் செலுத்திவிடுகிறேன். (ஆனால்,) உனது வாரிசுரிமை எனக்கே உரியதாகும். இதற்கு அவர்கள் சம்மதித்தால், நான் அதைச் செலுத்திவிடுவேன்” என்று கூறினேன்.

அவ்வாறே, பரீரா தம் உரிமையாளர்களிடம் கேட்க, அவர்கள் (சம்மதிக்க) மறுத்து, “உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) வாயிலாக, அவர் இறைவனிடம் நன்மையைப் பெற விரும்புவாராயின் அவ்வாறே செய்யட்டும்! ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டார்கள்.

இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே (சட்டப்படி) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்று (உரையாற்றுகையில்), “சிலருக்கு என்ன ஆயிற்று? அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லத் தக்கதன்று; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று,) பின்பற்றத் தகுந்ததும் உறுதி வாய்ந்ததும் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “பரீரா என்னிடம் வந்து, ‘ஆயிஷா (ரலி) அவர்களே! நான் என் உரிமையாளர்களிடம், ஆண்டுக்கு ஓர் ‘ஊக்கியா’ வீதம் ஒன்பது ஊக்கியாக்கள் செலுத்த வேண்டும் எனும் நிபந்தனையை ஒப்புக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்’ என்று கூறினார் …” என ஆரம்பிக்கிறது.

மேலும் அதில், “… அ(ந்தச் செல்லாத நிபந்தனையான)து அவரிடமிருந்து (வாரிசுரிமை பெறுவதில்) உனக்குத் தடையாக இராது. நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பில், “பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு ‘இறைவாழ்த்துக்குப் பின்’ … என்று (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி) சொன்னார்கள்” என்றும் காணப்படுகிறது.

அத்தியாயம்: 20, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2761

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

‏أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ ‏ ‏جَارِيَةً ‏ ‏تُعْتِقُهَا فَقَالَ أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ ‏ ‏وَلَاءَهَا ‏ ‏لَنَا فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَا يَمْنَعُكِ ذَلِكِ فَإِنَّمَا ‏ ‏الْوَلَاءُ ‏ ‏لِمَنْ أَعْتَقَ

ஆயிஷா (ரலி), ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்பெண்ணின் உரிமையாளர்கள் “இவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உங்களுக்கு இவளை விற்கிறோம்” என்று கூறினர். இதை ஆயிஷா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “அ(வர்களின் செல்லாத நிபந்தனையான)து உன்னைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில்,  (அடிமையின்) வாரிசுரிமை என்பது விடுதலை செய்தவருக்கே (சட்டப்படி) உரியதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

இது பரீரா (ரலி) எனும் அடிமைப் பெண் தொடர்பான நிகழ்வாகும்:

… அன்று மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடையே உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்து விட்டு, “ இறைவாழ்த்துக்குப் பின்! மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை அவர்கள் விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும்; அது நூறு (முறை மொழியப்பட்ட) நிபந்தனையாயினும் சரியே! (ஏற்று,) பின்பற்றத் தகுந்தது அல்லாஹ்வின் சட்டமேயாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும். உங்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர், ‘(என் அடிமையாகிய) இன்னவனை விடுதலை செய்துவிடு! ஆனால், (அவனுக்கு) வாரிசாகும் உரிமை எனக்கே உரியது’ என்று கூறுகிறாரே! (சட்டப்படி, அடிமையை) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

புகாரீ ஹதீஸ் எண் 3012 (சுருக்கம்)