அத்தியாயம்: 4, பாடம்: 37, ஹதீஸ் எண்: 718

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ ‏ ‏قَالَ حَدَّثَ ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ ‏ ‏قَالَ :‏

آخِرُ مَا عَهِدَ إِلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَمَمْتَ قَوْمًا فَأَخِفَّ بِهِمْ الصَّلَاةَ

“நீங்கள் ஒரு சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தால் அவர்களுக்கு (அலுப்பு ஏற்பட்டுவிடாமல்) சுருக்கமாகத் தொழுவியுங்கள்” என்பதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு இறுதியாக வழங்கிய அறிவுரையாகும்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 37, ஹதீஸ் எண்: 717

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ الثَّقَفِيُّ :‏‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لَهُ ‏ ‏أُمَّ قَوْمَكَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ فِي نَفْسِي شَيْئًا قَالَ ‏ ‏ادْنُهْ فَجَلَّسَنِي بَيْنَ يَدَيْهِ ثُمَّ وَضَعَ كَفَّهُ فِي صَدْرِي بَيْنَ ثَدْيَيَّ ثُمَّ قَالَ تَحَوَّلْ فَوَضَعَهَا فِي ظَهْرِي بَيْنَ كَتِفَيَّ ثُمَّ قَالَ أُمَّ قَوْمَكَ فَمَنْ أَمَّ قَوْمًا فَلْيُخَفِّفْ فَإِنَّ فِيهِمْ الْكَبِيرَ وَإِنَّ فِيهِمْ الْمَرِيضَ وَإِنَّ فِيهِمْ الضَّعِيفَ وَإِنَّ فِيهِمْ ذَا الْحَاجَةِ وَإِذَا صَلَّى أَحَدُكُمْ وَحْدَهُ فَلْيُصَلِّ كَيْفَ شَاءَ ‏

நபி (ஸல்) என்னிடம், “நீங்கள் உங்கள் கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவியுங்கள்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என் உள்ளத்தில் (இமாமத்துப் பெருமை) ஏதும் ஏற்பட்டுவிடுவதை நான் அஞ்சுகின்றேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அருகில் வாருங்கள்!” என்று என்னை அழைத்துத் தமக்கு முன்னால் அமரவைத்தார்கள். பிறகு தமது கரத்தை என் நடுநெஞ்சில் வைத்தார்கள். பிறகு, “திரும்புங்கள்” என்றார்கள். (நான் திரும்பியதும்) தமது கரத்தை என் தோள்களுக்கிடையே நடுமுதுகில் வைத்தார்கள். பிறகு, “நீங்கள் உங்கள் கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவியுங்கள். எவர் ஒரு கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கின்றாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், அவர்களிடையே முதியவர்கள் உள்ளனர்; அவர்களிடையே நோயாளிகளும் பலவீனர்களும் அலுவலுடையோரும் உள்ளனர். உங்களில் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர், தாம் விரும்பியபடி தொழுதுகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 37, ஹதீஸ் எண்: 716

و حَدَّثَنَا ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ فَإِنَّ فِي النَّاسِ الضَّعِيفَ ‏ ‏وَالسَّقِيمَ ‏ ‏وَذَا الْحَاجَةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ بَدَلَ السَّقِيمَ الْكَبِيرَ

“உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில் மக்களிடையே பலவீனர்களும் நோயாளிகளும் அலுவலுடையோரும் உள்ளனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அல்-லைஸ் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பில், “நோயாளிகள்” என்றில்லாமல் “முதியவர்கள்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 37, ஹதீஸ் எண்: 715

حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ ‏ ‏هَذَا مَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا :‏

وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا مَا قَامَ أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ الصَّلَاةَ فَإِنَّ فِيهِمْ الْكَبِيرَ وَفِيهِمْ الضَّعِيفَ وَإِذَا قَامَ وَحْدَهُ فَلْيُطِلْ صَلَاتَهُ مَا شَاءَ

“உங்களில் ஒருவர் மக்களுக்காகத் தொழுவிக்க நின்றால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும் ஏனெனில், அவர்களிடையே முதியவர்களும் பலவீனர்களும் இருப்பர். அவர் தனியாகத் தொழ நின்றால் தாம் விரும்பிய அளவுக்கு நீட்டித் தொழுது கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)


குறிப்பு :

இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

 

அத்தியாயம்: 4, பாடம்: 37, ஹதீஸ் எண்: 714

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُغِيرَةُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا أَمَّ أَحَدُكُمْ النَّاسَ فَلْيُخَفِّفْ فَإِنَّ فِيهِمْ الصَّغِيرَ وَالْكَبِيرَ وَالضَّعِيفَ وَالْمَرِيضَ فَإِذَا صَلَّى وَحْدَهُ فَلْيُصَلِّ كَيْفَ شَاءَ ‏

“உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுவித்தால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், அ(வருக்குப் பின்னால் தொழுப)வர்களில் சிறுவர்களும் முதியவர்களும் நோயாளிகளும் இருப்பர். அவர் தனியாகத் தொழுதால் தாம் விரும்பியவாறு தொழுது கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 37, ஹதீஸ் எண்: 713

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَ :‏‏

جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلَاةِ الصُّبْحِ مِنْ أَجْلِ ‏ ‏فُلَانٍ ‏ ‏مِمَّا يُطِيلُ بِنَا فَمَا رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَضِبَ فِي مَوْعِظَةٍ قَطُّ أَشَدَّ مِمَّا غَضِبَ يَوْمَئِذٍ فَقَالَ ‏ ‏يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ أَمَّ النَّاسَ فَلْيُوجِزْ فَإِنَّ مِنْ وَرَائِهِ الْكَبِيرَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏هُشَيْمٍ ‏

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இன்னார் (இஷாத்) தொழுகையை நீண்ட நேரம் எங்களுக்குத் தொழுவிப்பதால் சுப்ஹுத் தொழுகை(யின் ஜமாஅத்து)க்குச் செல்ல முடியாமல் நான் தாமதித்து விடுகின்றேன்” என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சினங்கொண்டு, “மக்களே! உங்களில் வெறுப்பூட்டும் சிலர் உள்ளனர். ஆகவே, உங்களில் மக்களுக்குத் தொழுவிப்பவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், அவருக்குப் பின்னால் முதியவர்களும் பலவீனர்களும் அலுவல் உடையவர்களும் உள்ளனர்” என்று சொற்பொழிவாற்றினார்கள். அன்றைக்குக் கடுஞ்சினம் கொண்டதைப்போல் வேறு எந்தச் சொற்பொழிவின்போதும் சினங்கொண்டு அவர்களை நான் கண்டதில்லை.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 36, ஹதீஸ் எண்: 712

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏‏

كَانَ ‏ ‏مُعَاذٌ ‏ ‏يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعِشَاءَ ثُمَّ يَأْتِي مَسْجِدَ قَوْمِهِ فَيُصَلِّي بِهِمْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகையை முஆத் (ரலி) தொழுவார். பிறகு தம் கூட்டத்தாரின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு (அதே தொழுகையை)த் தொழுவிக்கும் வழக்கம் உடையவராக இருந்தார்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 36, ஹதீஸ் எண்: 711

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ:‏

أَنَّ ‏ ‏مُعَاذَ بْنَ جَبَلٍ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعِشَاءَ الْآخِرَةَ ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيُصَلِّي بِهِمْ تِلْكَ الصَّلَاةَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முஆத் பின் ஜபல் (ரலி) (இரவுத்) தொழுகையைத் தொழுதுவிட்டு, தம் கூட்டத்தாரின் பள்ளிவாசலுக்குச் சென்று அதே தொழுகையை அவர்களுக்குத் தொழுவிக்கும் வழக்கம் உடையவராக இருந்தார்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 36, ஹதீஸ் எண்: 710

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

صَلَّى ‏ ‏مُعَاذُ بْنُ جَبَلٍ الْأَنْصَارِيُّ ‏ ‏لِأَصْحَابِهِ الْعِشَاءَ فَطَوَّلَ عَلَيْهِمْ فَانْصَرَفَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنَّا فَصَلَّى فَأُخْبِرَ ‏ ‏مُعَاذٌ ‏ ‏عَنْهُ فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ فَلَمَّا بَلَغَ ذَلِكَ الرَّجُلَ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَهُ مَا قَالَ ‏ ‏مُعَاذٌ ‏ ‏فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتُرِيدُ أَنْ تَكُونَ فَتَّانًا يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏إِذَا أَمَمْتَ النَّاسَ فَاقْرَأْ ‏ ‏بِالشَّمْسِ وَضُحَاهَا ‏ ‏وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ ‏ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى

முஆத் பின் ஜபல் அல்அன்ஸாரி (ரலி), தம் தோழர்க(ளான எங்க)ளுக்கு (ஒரு நாள்) இஷாத் தொழுகை தொழுவித்தபோது (நீளமான அத்தியாயத்தை ஓதித் தொழுகையை) நீட்டினார். எனவே, எங்களில் ஒருவர் விலகிச் சென்று தனியாகத் தொழுதார். இதுபற்றித் தெரிவிக்கப்பட்டபோது, “அவர் ஒரு முனாஃபிக்” என்று முஆத் (ரலி) கூறினார்.

இச்செய்தி (விலகிச் சென்று தொழுதவருக்கு) எட்டியது. அவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று முஆத் (ரலி) கூறியதைத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முஆத்! நீர் குழப்பவதியாக இருக்க விரும்புகின்றீரா? நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும்போது வஷ்ஷம்ஸி வளுஹாஹா, ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க, வல்லைலி இதா யக்’ஷா ஆகிய (சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 36, ஹதீஸ் எண்: 709

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ :‏‏

كَانَ ‏ ‏مُعَاذٌ ‏ ‏يُصَلِّي مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ يَأْتِي فَيَؤُمُّ قَوْمَهُ فَصَلَّى لَيْلَةً مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعِشَاءَ ثُمَّ أَتَى قَوْمَهُ فَأَمَّهُمْ فَافْتَتَحَ بِسُورَةِ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏فَانْحَرَفَ ‏ ‏رَجُلٌ ‏ ‏فَسَلَّمَ ثُمَّ صَلَّى وَحْدَهُ وَانْصَرَفَ فَقَالُوا لَهُ أَنَافَقْتَ يَا فُلَانُ قَالَ لَا وَاللَّهِ وَلَآتِيَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَأُخْبِرَنَّهُ فَأَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا أَصْحَابُ ‏ ‏نَوَاضِحَ ‏ ‏نَعْمَلُ بِالنَّهَارِ وَإِنَّ ‏ ‏مُعَاذًا ‏ ‏صَلَّى مَعَكَ الْعِشَاءَ ثُمَّ أَتَى فَافْتَتَحَ بِسُورَةِ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏مُعَاذٍ ‏ ‏فَقَالَ ‏ ‏يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏أَفَتَّانٌ ‏ ‏أَنْتَ اقْرَأْ بِكَذَا وَاقْرَأْ بِكَذَا قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏إِنَّ ‏ ‏أَبَا الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَنَّهُ قَالَ اقْرَأْ ‏ ‏وَالشَّمْسِ وَضُحَاهَا ‏ ‏وَالضُّحَى ‏ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ‏ ‏وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏فَقَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏نَحْوَ هَذَا

நபி (ஸல்) அவர்களுடன் முஆத் பின் ஜபல் (ரலி) தொழுதார். பிறகு (தம் கூட்டத்தாரிடம்) சென்று (நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுத தொழுகையை (மீண்டும்) தம் கூட்டத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கும் வழக்கமுடையோராக இருந்தார்.

ஒருநாள் இரவில் முஆத் (ரலி), நபி (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுது விட்டுத் தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு(அதே தொழுகையை)த் தொழுவித்தார்கள். அதில் (பெரிய அத்தியாயமான) அல்பகரா எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதத் தொடங்கியபோது ஒருவர் (தொழுகையிலிருந்து) விலகி ஸலாம் கொடுத்தார். பின்னர் தனியாகத் தொழுது முடித்தார். மக்கள் அவரிடம், “இன்னாரே! நீர் முனாஃபிக் ஆகிவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை. நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது குறித்து) தெரிவிப்பேன்” எனக் கூறினார்.

அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பகல் வேளைகளில் ஒட்டகங்களை ஓட்டி, தண்ணீர் பாய்ச்சும் உழைப்பாளிகள். இந்நிலையில் முஆத் பின் ஜபல் (நேற்றிரவு) உங்களுடன் இஷாத் தொழுதுவிட்டு வந்து (எங்களுக்குத் தொழுவித்தார். அதில் பெரிய அத்தியாயமான) அல்பகரா அத்தியாயத்தை ஓதலானார். (எனவேதான் விலகிச் சென்று தனியாகத் தொழுதேன்)” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), முஆத் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, “முஆதே! நீ குழப்பவாதியா?” என்று கேட்டுவிட்டு “(நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் போது சிறு அத்தியாயங்களான) இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக, இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக” என்று அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

“நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ரிப்னு தீனார் (ரஹ்) அவர்களிடம் (நபி (ஸல்)), ‘வஷ்ஷம்ஸி வளுஹாஹா(91), வள்ளுஹா(93), வல்லைலி இதா யக்’ஷா(92), ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா(87) ஆகிய அத்தியாயங்களை ஓதுவீராக!’ என்று (முஆத் (ரலி) அவர்களிடம் அத்தியாயப் பெயர்களைக்) கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்)  எமக்கு அறித்தார்களே? என்று கேட்டேன். அதற்கு அம்ரிப்னு தீனார் (ரஹ்), (ஆம்) இது போன்றுதான் (அறிவித்தார்கள்) என்றார்கள்” என்பதாக ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.