அத்தியாயம்: 6, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1388

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ :‏‏

‏غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَوْمًا مِنْ ‏ ‏جُهَيْنَةَ ‏ ‏فَقَاتَلُونَا قِتَالًا شَدِيدًا فَلَمَّا صَلَّيْنَا الظُّهْرَ قَالَ الْمُشْرِكُونَ لَوْ مِلْنَا عَلَيْهِمْ مَيْلَةً لَاقْتَطَعْنَاهُمْ فَأَخْبَرَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَلِكَ فَذَكَرَ ذَلِكَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

‏قَالَ وَقَالُوا ‏ ‏إِنَّهُ ‏ ‏سَتَأْتِيهِمْ صَلَاةٌ هِيَ أَحَبُّ إِلَيْهِمْ مِنْ الْأَوْلَادِ فَلَمَّا حَضَرَتْ الْعَصْرُ قَالَ صَفَّنَا صَفَّيْنِ وَالْمُشْرِكُونَ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ قَالَ فَكَبَّرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَبَّرْنَا وَرَكَعَ فَرَكَعْنَا ثُمَّ سَجَدَ وَسَجَدَ مَعَهُ الصَّفُّ الْأَوَّلُ فَلَمَّا قَامُوا سَجَدَ الصَّفُّ الثَّانِي ثُمَّ تَأَخَّرَ الصَّفُّ الْأَوَّلُ وَتَقَدَّمَ الصَّفُّ الثَّانِي فَقَامُوا مَقَامَ الْأَوَّلِ فَكَبَّرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَبَّرْنَا وَرَكَعَ فَرَكَعْنَا ثُمَّ سَجَدَ مَعَهُ الصَّفُّ الْأَوَّلُ وَقَامَ الثَّانِي فَلَمَّا سَجَدَ الصَّفُّ الثَّانِي ثُمَّ جَلَسُوا جَمِيعًا سَلَّمَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏قَالَ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏ثُمَّ خَصَّ ‏ ‏جَابِرٌ ‏ ‏أَنْ قَالَ كَمَا ‏ ‏يُصَلِّي أُمَرَاؤُكُمْ هَؤُلَاءِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தாருடன் போரிடப் புறப்பட்டோம். அவர்கள் எங்களிடம் கடுமையாகப் போரிட்டனர். நாங்கள் ளுஹ்ருத் தொழுகையில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட இணைவைப்பாளர்கள் “(முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும்போது) அவர்கள்மீது நாம் அதிரடித் தாக்குதல் தொடுத்தால் அவர்களை நாம் ஒழித்துவிடலாம்” என்று பேசிக் கொண்டனர். இந்த விவரத்தை (வானவர்) ஜிப்ரீல் (அலை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் கூறினார்கள்.

மேலும், “அவர்கள் ஒரு தொழுகையை எதிர்நோக்கியுள்ளனர். அது அவர்களுக்கு (தங்கள்) பிள்ளைகளைவிட மிக விருப்பமானதாகும்” என்று இணைவைப்பாளர்கள் பேசிக்கொள்வதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அஸ்ருத் தொழுகையின் நேரம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை இரு வரிசைகளில் அணிவகுக்கச் செய்தார்கள். இணைவைப்பாளர்கள் எங்களுக்கும் தொழும் திசை(யான கிப்லாவு)க்கும் இடையே இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முதல் தக்பீர் கூறி(த் தொழுகையைத் துவக்கி)னார்கள். நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉச் செய்தார்கள். நாங்களும் ருகூஉச் செய்தோம். பிறகு அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது முதல் வரிசையிலிருந்தவர்கள் ஸஜ்தாச் செய்தனர். முதல் வரிசையிலிருந்தவர்கள் (ஸஜ்தாவிலிருந்து) எழுந்து நின்றதும் இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் ஸஜ்தாச் செய்தனர்.

பிறகு முதல் வரிசையிலிருந்தவர்கள் பின்வரிசைக்குச் சென்றுவிட, இரண்டாம் வரிசையிலிருந்தவர்கள் முன் வரிசைக்கு வந்து, அவர்களது இடத்தை நிரப்பினர். (இரண்டாவது ரக்அத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தக்பீர் கூற நாங்கள் (அனைவரும்) தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்களும் ருகூஉச் செய்தோம். பிறகு அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது முதல் வரிசையிலிருந்தவர்கள் ஸஜ்தாச் செய்தனர். (ஆனால்) இரண்டாவது வரிசையினர் நின்றுகொண்டனர். பின்னர் அவர்களும் ஸஜ்தாச் செய்தனர். அனைவரும் (இருப்பில்) அமர்ந்த பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

“இன்றைய தலைவர்கள் உங்களுக்குத் தொழுவிப்பதைப் போன்றே (அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தொழுவித்தார்கள்)” என்று ஜாபிர் (ரலி) குறிப்பிட்டதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 6, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1387

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الْخَوْفِ فَصَفَّنَا صَفَّيْنِ صَفٌّ خَلْفَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ فَكَبَّرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَبَّرْنَا جَمِيعًا ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي ‏ ‏نَحْرِ ‏ ‏الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السُّجُودَ وَقَامَ الصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ وَقَامُوا

ثُمَّ تَقَدَّمَ الصَّفُّ الْمُؤَخَّرُ وَتَأَخَّرَ الصَّفُّ الْمُقَدَّمُ ثُمَّ رَكَعَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا

ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ الَّذِي كَانَ مُؤَخَّرًا فِي الرَّكْعَةِ الْأُولَى وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نُحُورِ الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السُّجُودَ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ فَسَجَدُوا ثُمَّ سَلَّمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَلَّمْنَا جَمِيعًا قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏كَمَا يَصْنَعُ حَرَسُكُمْ هَؤُلَاءِ بِأُمَرَائِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அச்சச் சூழல் தொழுகையில் நான் பங்கேற்றுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களைத் தமக்குப் பின்னால் இரு வரிசைகளாக நிறுத்தினார்கள். அப்போது எதிரிகள் எங்களுக்கும் (தொழும் திசையான) கிப்லாவுக்குமிடையில் இருந்தார்கள். நபி (ஸல்) (துவக்க) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அனைவரும் தக்பீர் கூறினோம். பின்னர் ருகூஉச் செய்தார்கள். நாங்கள் அனைவரும் ருகூஉச் செய்தோம். பின்னர் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினார்கள். நாங்கள் அனைவரும் (தலையை) உயர்த்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்களும் அவர்களை அடுத்து (முதல் வரிசையில்) நின்றவர்களும் குனிந்து ஸஜ்தாச் செய்தனர். அப்போது பின் வரிசையிலிருந்தவர்கள் எதிரிகளுக்கு நேராக (அவர்களைக் கண்காணித்தவாறு) நின்றுகொண்டேயிருந்தனர். நபி (ஸல்) அவர்களும் அவர்களைப் பின்பற்றி முன் வரிசையிலிருந்தவர்களும் ஸஜ்தாவை நிறைவேற்றி எழுந்து நின்றதும் பின் வரிசையிலிருந்தவர்கள் குனிந்து ஸஜ்தாச் செய்தனர். பிறகு எழுந்தனர்.

பிறகு பின் வரிசையினர் முன் (வரிசைக்கு) வந்தனர். முன் வரிசையினர் பின் (வரிசைக்குச்) சென்றனர். பிறகு நபி (ஸல்) ருகூஉச் செய்தபோது (இரு வரிசையினர்) அனைவரும் ருகூஉச் செய்தோம். பிறகு நபி (ஸல்) ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது நாங்கள் அனைவரும் தலையை உயர்த்தினோம்.

பிறகு நபி (ஸல்) குனிந்து ஸஜ்தாச் செய்தார்கள். முதல் ரக்அத் நடைபெற்றபோது பின் வரிசையிலிருந்தவர்களும் இப்போது நபியவர்களை அடுத்து இருப்பவர்களுமான (முதல்) அணியினர் ஸஜ்தாச் செய்தார்கள். பின்வரிசையினர் (ஸஜ்தாச் செய்யாமல்) எதிரிகளுக்கு நேராக (அவர்களைக் கண்காணித்தவாறு) நின்று கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் முன் வரிசையினரும் ஸஜ்தாச் செய்து முடித்த பின்னர் பின்வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்கள் குனிந்து ஸஜ்தாச் செய்தனர். நபி (ஸல்) ஸலாம் கொடுத்தபோது நாங்கள் அனைவரும் ஸலாம் கொடுத்தோம்.

உங்கள் படைவீரர்கள் (இக்காலத்தில்) தங்கள் தலைவர்களுடன் சேர்ந்து (போர்க் களங்களில்) தொழுவதைப் போன்றுதான் (அக்காலத்தில் நாங்களும் தொழுதோம்).

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1386

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الْخَوْفِ فِي بَعْضِ أَيَّامِهِ فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ وَطَائِفَةٌ ‏ ‏بِإِزَاءِ ‏ ‏الْعَدُوِّ فَصَلَّى بِالَّذِينَ مَعَهُ رَكْعَةً ثُمَّ ذَهَبُوا وَجَاءَ الْآخَرُونَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً ثُمَّ قَضَتْ الطَّائِفَتَانِ رَكْعَةً رَكْعَةً ‏


قَالَ وَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَإِذَا كَانَ خَوْفٌ أَكْثَرَ مِنْ ذَلِكَ فَصَلِّ رَاكِبًا أَوْ قَائِمًا ‏ ‏تُومِئُ ‏ ‏إِيمَاءً

ஒரு (போர் நடந்த) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எங்களுக்கு) அச்சச் சூழல் தொழுகையைத் தொழுவித்தார்கள். (எங்களில்) ஓர் அணியினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) நின்றனர். மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே (அணிவகுத்து) நின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம்முடனிருந்த அணியினருக்கு ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். (தொழுத) அவர்கள் (எதிரிகளை நோக்கிச்) சென்றுவிட்டனர்.

பிறகு இரண்டாம் அணியினர் வந்தபோது அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். பிறகு இரு அணியினரும் (தனித் தனியே) ஒவ்வொரு ரக்அத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

”இதைவிடக் கூடுதல் அச்சம் நிலவினால் வாகனத்தில் அமர்ந்துகொண்டோ நின்று கொண்டோ சைகை செய்து தொழுது கொள்ளலாம்” என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளார்கள்.

அத்தியாயம்: 6, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1385

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الْخَوْفِ بِإِحْدَى الطَّائِفَتَيْنِ رَكْعَةً وَالطَّائِفَةُ الْأُخْرَى مُوَاجِهَةُ الْعَدُوِّ ثُمَّ انْصَرَفُوا وَقَامُوا فِي مَقَامِ أَصْحَابِهِمْ مُقْبِلِينَ عَلَى الْعَدُوِّ وَجَاءَ أُولَئِكَ ثُمَّ صَلَّى بِهِمْ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكْعَةً ثُمَّ سَلَّمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَضَى هَؤُلَاءِ رَكْعَةً وَهَؤُلَاءِ رَكْعَةً ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏فُلَيْحٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ كَانَ يُحَدِّثُ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْخَوْفِ وَيَقُولُ صَلَّيْتُهَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْمَعْنَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு போர் முனையில் எங்களுக்கு) அச்சச் சூழல் தொழுகை தொழுவித்தார்கள். (எங்களின்) இரு அணிகளில் ஓரணியினருக்கு (முதலில்) ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரில் (கவனத்துடன்) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் நின்ற இடத்தில் எதிரிகளுக்கு எதிரில் நின்றுகொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுக்கு நபி (ஸல்) ஒரு ரக்அத் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்னர் அவர்கள் (எழுந்து மீதியிருந்த) ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். பிறகு முதல் அணியினரும் (வந்து மீதியிருந்த தம்முடைய) ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

ஃபுலைஹ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அச்சச் சூழல் தொழுகை தொழுதிருக்கின்றேன் …” என்று இப்னு உமர் (ரலி) கூறுவதாகத் தொடங்குகின்றது.

அத்தியாயம்: 6, பாடம்: 54, ஹதீஸ் எண்: 1384

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏كَهْمَسٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ قَالَهَا ثَلَاثًا قَالَ فِي الثَّالِثَةِ لِمَنْ شَاءَ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ إِلَّا أَنَّهُ قَالَ فِي الرَّابِعَةِ لِمَنْ شَاءَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒவ்வொரு தொழுகைக்கான (பாங்கு, இகாமத் ஆகிய) இரு அறிவிப்புகளுக்கிடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என்று மூன்று முறை கூறினார்கள். மூன்றாம் முறை “விரும்பியவருக்கு” என்று (சேர்த்துக்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி)


குறிப்பு :

அப்துல் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்), “விரும்பியவருக்கு” என்பதை நான்காவது தடவையில் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 53, ஹதீஸ் எண்: 1383

و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ وَهُوَ ابْنُ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

‏كُنَّا ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ لِصَلَاةِ الْمَغْرِبِ ‏ ‏ابْتَدَرُوا ‏ ‏السَّوَارِيَ ‏ ‏فَيَرْكَعُونَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى إِنَّ الرَّجُلَ الْغَرِيبَ لَيَدْخُلُ الْمَسْجِدَ فَيَحْسِبُ أَنَّ الصَّلَاةَ قَدْ صُلِّيَتْ مِنْ كَثْرَةِ مَنْ يُصَلِّيهِمَا

நாங்கள் மதீனாவில் இருந்தபோது தொழுகை அறிவிப்பாளர் மஃக்ரிப் தொழுகைக்காக அறிவிப்புச் செய்துவிட்டால் மக்கள் (பள்ளியினுள்) சுவற்றோரம் சென்று இரண்டிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியாட்கள் பள்ளிவாசலுக்கு வந்(து பார்த்)தால், அவ்விரு ரக்அத்களை அதிகமானவர்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டதோ என எண்ணிவிடுவர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 53, ஹதீஸ் எண்: 1382

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ فُضَيْلٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏مُخْتَارِ بْنِ فُلْفُلٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏عَنْ التَّطَوُّعِ بَعْدَ الْعَصْرِ فَقَالَ :‏

كَانَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَضْرِبُ الْأَيْدِي عَلَى صَلَاةٍ بَعْدَ الْعَصْرِ ‏‏وَكُنَّا نُصَلِّي عَلَى عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ فَقُلْتُ لَهُ أَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّاهُمَا قَالَ ‏ ‏كَانَ ‏ ‏يَرَانَا ‏ ‏نُصَلِّيهِمَا فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் அஸ்ருக்குப் பின் கூடுதலான தொழுகை தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், “அஸ்ருக்குப் பின் (கூடுதலான) தொழுகை தொழுததற்காக, உமர் (ரலி) (தொழுபவரின்) கையில் அடிப்பார்கள். நாங்கள் நபி (ஸல்) காலத்தில் சூரியன் மறைந்த பின் மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தோம்” என்று கூறினார்கள். நான் “அவ்விரு ரக்அத்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுவார்களா?” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி), “நாங்கள் அவ்விரு ரக்அத்களையும் தொழுவதை அவர்கள் பார்ப்பார்கள். எங்களைத் தடுத்ததுமில்லை; தொழுமாறு ஏவியதுமில்லை” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக முக்தார் பின் ஃபுல்ஃபுல் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1381

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَمَسْرُوقٍ ‏ ‏قَالَا نَشْهَدُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ:‏

‏مَا كَانَ يَوْمُهُ الَّذِي كَانَ يَكُونُ عِنْدِي إِلَّا صَلَّاهُمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِي تَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் தங்கியிருக்கும் நாளில் என் வீட்டில் இரு ரக்அத்கள் -அஸ்ருக்குப் பின் தொழாமல் இருந்ததில்லை

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

இந்த ஹதீஸை அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக அல்-அஸ்வத் (ரஹ்), மஸ்ரூக் (ரஹ்) ஆகிய இருவரும் சாட்சியளிக்கின்றனர்.

அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக் அத்கள் தொழுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்கு வழக்கப்படுத்திக்கொண்டது பிற்காலத்திலாகும் (இமாம் நவவீ – ஷரஹ் முஸ்லிம் ‘அல்-மின்ஹாஜ்‘).

அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1380

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ الشَّيْبَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏صَلَاتَانِ مَا تَرَكَهُمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِي قَطُّ سِرًّا وَلَا عَلَانِيَةً رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது வீட்டில் இருக்கும்போது, ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள்; அஸ்ருத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் ஆகிய இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ வெளிப்படையாகவோ தொழாமல் விட்டதில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1379

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏مَا تَرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் இருந்த நாட்களில் அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவதை விட்டதேயில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)