அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1378

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ :‏‏

‏أَنَّهُ سَأَلَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ السَّجْدَتَيْنِ اللَّتَيْنِ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّيهِمَا بَعْدَ الْعَصْرِ فَقَالَتْ ‏ ‏كَانَ يُصَلِّيهِمَا قَبْلَ الْعَصْرِ ثُمَّ إِنَّهُ شُغِلَ عَنْهُمَا أَوْ نَسِيَهُمَا فَصَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ ثُمَّ أَثْبَتَهُمَا وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً أَثْبَتَهَا ‏


‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏تَعْنِي دَاوَمَ عَلَيْهَا

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருக்குப் பின்னர் தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஏதேனும் அலுவல் காரணத்தால் தொழ முடியாமற்போகும்போது, அல்லது மறந்துவிடும்போது அவ்விரு ரக்அத்களையும் அஸ்ருக்குப் பின்னால் தொழுவார்கள். பிற்பாடு அவ்விரு ரக்அத்களையும் நிலைப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் நிலையாகத் தொழுதுவருவார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா (ரஹ்)


குறிப்பு :

‘நிலைப்படுத்துதல்‘ என்பது ‘வழக்கப்படுத்துதல்‘ என்று இஸ்மாயீல் (ரஹ்) கூறியதாக யஹ்யா பின் அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில் காணப்படுகிறது.

அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1377

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏‏

‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ ‏ ‏وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ ‏ ‏أَرْسَلُوهُ إِلَى ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنَّا جَمِيعًا وَسَلْهَا عَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ وَقُلْ إِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّينَهُمَا وَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهُمَا قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏وَكُنْتُ أَضْرِبُ مَعَ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏النَّاسَ عَلَيْهَا

قَالَ ‏ ‏كُرَيْبٌ ‏ ‏فَدَخَلْتُ عَلَيْهَا وَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي بِهِ فَقَالَتْ سَلْ ‏ ‏أُمَّ سَلَمَةَ

‏فَخَرَجْتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا فَرَدُّونِي إِلَى ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى ‏ ‏عَائِشَةَ

‏فَقَالَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْهَى عَنْهُمَا ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا أَمَّا حِينَ صَلَّاهُمَا فَإِنَّهُ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ ‏ ‏بَنِي حَرَامٍ ‏ ‏مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَصَلَّاهُمَا فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ فَقُلْتُ قُومِي بِجَنْبِهِ فَقُولِي لَهُ تَقُولُ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْمَعُكَ ‏ ‏تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ وَأَرَاكَ تُصَلِّيهِمَا فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي عَنْهُ قَالَ فَفَعَلَتْ الْجَارِيَةُ فَأَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخَرَتْ عَنْهُ فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏يَا ‏ ‏بِنْتَ ‏ ‏أَبِي أُمَيَّةَ ‏ ‏سَأَلْتِ عَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ إِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ ‏ ‏عَبْدِ الْقَيْسِ ‏ ‏بِالْإِسْلَامِ مِنْ قَوْمِهِمْ فَشَغَلُونِي عَنْ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் (ரஹ்) கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் என்னிடம் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று “எங்கள் அனைவரின் ஸலாமையும் கூறுவீராக! அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அம்மையாரிடம் கேட்பீராக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையை நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகின்றோமே! என்று கேட்பீராக!” என்று கூறினர். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் (அஸ்ருக்குப் பின் தொழுபவர்களை) அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அம்மூவரும் என்னை அனுப்பிவைத்த நோக்கத்தைச் சொன்னதற்கு, ஆயிஷா (ரலி), “நீர் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேளும்!” என்று கூறினார்கள்.

நான் அம்மூவரிடம் திரும்பிச் சென்று ஆயிஷா (ரலி), கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்குமாறு என்னை (மீண்டும்) அம்மூவரும் அனுப்பினார்கள்.

(அவ்வாறே நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் வந்து கேட்டபோது,) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அஸ்ருக்குப் பின்) இவ்விரு ரக்அத்களைத் (தொழுவதைத்) தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன். பின்னர் (ஒரு நாள்) அவர்கள் அஸ்ருத் தொழுதுவிட்டு எனது வீட்டுக்கு வந்து, அவ்விரு ரக்அத்களைத் தொழுததையும் பார்த்தேன். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களுள் ஓர் அடிமைப் பெண்ணை, தொழுதுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி “நீ அவர்களுக்கு அருகில் சென்று ‘அல்லாஹ்வின் தூதரே! (அஸ்ருக்குப் பிறகு) இந்த இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டாம் என நீங்கள் தடுத்ததை நான் செவியுற்றுள்ளேன். ஆனால், இப்போது நீங்களே அதைத் தொழுவதைப் பார்க்கின்றேனே’ என நான் கேட்டதாக நீ கூறு. அவர்கள் தமது கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கி (வந்து)விடு!” எனக் கூறினேன். அப்பெண்ணும் (நான் சொன்னபடி) செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கையால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஉமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பிறகு (தொழுத) இரண்டு ரக்அத்களைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் குலத்தாரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியுடன் என்னிடம் வந்திருந்தனர். அதனால் ளுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை. அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்” என்றார்கள் என உம்மு ஸலமா (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரலி) வழியாக குறைப் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1376

و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏:‏

‏لَمْ يَدَعْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ قَالَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏تَتَحَرَّوْا ‏ ‏طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا فَتُصَلُّوا عِنْدَ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவதை விடவில்லை. “சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்” என்றுதான் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ளுஹருத் தொழுகைக்குப் பின் வழக்கமாக இரண்டு ரக் அத்கள் தொழும் சுன்னத், தகுந்த காரணத்தால் தொழ முடியாமல் போயிருந்தால், அதை அஸ்ருக்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் இல்லத்தில் தொழுதிருக்கின்றார்கள் என்பதை அடுத்த ஹதீஸ் விளக்குகின்றது.

அத்தியாயம்: 6, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1375

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏:‏

وَهِمَ ‏ ‏عُمَرُ ‏ ‏إِنَّمَا ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏يُتَحَرَّى طُلُوعُ الشَّمْسِ وَغُرُوبُهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே தடை செய்தார்கள். உமர் (ரலி) கூறிய (அஸ்ருக்குப் பிறகு தொழவே கூடாது என்ற) கூற்றில் தவறிழைத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1374

حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو عَمَّارٍ ‏ ‏وَيَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُمَامَةَ ‏ ‏قَالَ ‏ ‏عِكْرِمَةُ ‏ ‏وَلَقِيَ ‏ ‏شَدَّادٌ ‏ ‏أَبَا أُمَامَةَ ‏ ‏وَوَاثِلَةَ ‏ ‏وَصَحِبَ ‏ ‏أَنَسًا ‏ ‏إِلَى ‏ ‏الشَّامِ ‏ ‏وَأَثْنَى عَلَيْهِ فَضْلًا وَخَيْرًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُمَامَةَ ‏ ‏قَالَ :‏

قَالَ ‏ ‏عَمْرُو بْنُ عَبَسَةَ السُّلَمِيُّ ‏كُنْتُ وَأَنَا فِي الْجَاهِلِيَّةِ أَظُنُّ أَنَّ النَّاسَ عَلَى ضَلَالَةٍ وَأَنَّهُمْ لَيْسُوا عَلَى شَيْءٍ وَهُمْ يَعْبُدُونَ الْأَوْثَانَ فَسَمِعْتُ بِرَجُلٍ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏يُخْبِرُ أَخْبَارًا فَقَعَدْتُ عَلَى رَاحِلَتِي فَقَدِمْتُ عَلَيْهِ فَإِذَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُسْتَخْفِيًا ‏ ‏جُرَءَاءُ عَلَيْهِ قَوْمُهُ فَتَلَطَّفْتُ حَتَّى دَخَلْتُ عَلَيْهِ ‏ ‏بِمَكَّةَ ‏
‏فَقُلْتُ لَهُ مَا أَنْتَ قَالَ أَنَا نَبِيٌّ فَقُلْتُ وَمَا نَبِيٌّ قَالَ أَرْسَلَنِي اللَّهُ فَقُلْتُ وَبِأَيِّ شَيْءٍ أَرْسَلَكَ قَالَ ‏ ‏أَرْسَلَنِي بِصِلَةِ الْأَرْحَامِ وَكَسْرِ الْأَوْثَانِ وَأَنْ يُوَحَّدَ اللَّهُ لَا يُشْرَكُ بِهِ شَيْءٌ قُلْتُ لَهُ فَمَنْ مَعَكَ عَلَى هَذَا قَالَ حُرٌّ وَعَبْدٌ قَالَ وَمَعَهُ يَوْمَئِذٍ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏مِمَّنْ آمَنَ بِهِ فَقُلْتُ إِنِّي مُتَّبِعُكَ قَالَ إِنَّكَ لَا تَسْتَطِيعُ ذَلِكَ يَوْمَكَ هَذَا أَلَا ‏ ‏تَرَى حَالِي وَحَالَ النَّاسِ وَلَكِنْ ارْجِعْ إِلَى أَهْلِكَ فَإِذَا سَمِعْتَ بِي قَدْ ظَهَرْتُ فَأْتِنِي قَالَ فَذَهَبْتُ إِلَى أَهْلِي
وَقَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَكُنْتُ فِي أَهْلِي فَجَعَلْتُ أَتَخَبَّرُ الْأَخْبَارَ وَأَسْأَلُ النَّاسَ حِينَ قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏حَتَّى قَدِمَ عَلَيَّ نَفَرٌ مِنْ أَهْلِ ‏ ‏يَثْرِبَ ‏ ‏مِنْ أَهْلِ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَقُلْتُ مَا فَعَلَ هَذَا الرَّجُلُ الَّذِي قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَقَالُوا النَّاسُ إِلَيْهِ سِرَاعٌ وَقَدْ أَرَادَ قَوْمُهُ قَتْلَهُ فَلَمْ يَسْتَطِيعُوا ذَلِكَ
فَقَدِمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَدَخَلْتُ عَلَيْهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَعْرِفُنِي قَالَ نَعَمْ أَنْتَ الَّذِي لَقِيتَنِي ‏ ‏بِمَكَّةَ ‏ ‏قَالَ فَقُلْتُ بَلَى فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَخْبِرْنِي عَمَّا عَلَّمَكَ اللَّهُ وَأَجْهَلُهُ أَخْبِرْنِي عَنْ الصَّلَاةِ قَالَ صَلِّ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ ‏ ‏أَقْصِرْ ‏ ‏عَنْ الصَّلَاةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَتَّى تَرْتَفِعَ فَإِنَّهَا تَطْلُعُ حِينَ تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُثُمَّ صَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ ‏ ‏مَحْضُورَةٌ ‏ ‏حَتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بِالرُّمْحِ ثُمَّ ‏ ‏أَقْصِرْ ‏ ‏عَنْ الصَّلَاةِ فَإِنَّ حِينَئِذٍ ‏ ‏تُسْجَرُ ‏ ‏جَهَنَّمُ
فَإِذَا أَقْبَلَ ‏ ‏الْفَيْءُ ‏ ‏فَصَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ ‏ ‏مَحْضُورَةٌ ‏ ‏حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ ثُمَّ ‏ ‏أَقْصِرْ ‏ ‏عَنْ الصَّلَاةِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ
قَالَ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَالْوُضُوءَ حَدِّثْنِي عَنْهُ قَالَ مَا مِنْكُمْ رَجُلٌ يُقَرِّبُ وَضُوءَهُ فَيَتَمَضْمَضُ وَيَسْتَنْشِقُ ‏ ‏فَيَنْتَثِرُ ‏ ‏إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا وَجْهِهِ ‏ ‏وَفِيهِ ‏ ‏وَخَيَاشِيمِهِ
‏ثُمَّ إِذَا غَسَلَ وَجْهَهُ كَمَا أَمَرَهُ اللَّهُ إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا وَجْهِهِ مِنْ أَطْرَافِ لِحْيَتِهِ مَعَ الْمَاءِ
ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا يَدَيْهِ مِنْ ‏ ‏أَنَامِلِهِ ‏ ‏مَعَ الْمَاءِ
ثُمَّ يَمْسَحُ رَأْسَهُ إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا رَأْسِهِ مِنْ أَطْرَافِ شَعْرِهِ مَعَ الْمَاءِ
ثُمَّ يَغْسِلُ قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا رِجْلَيْهِ مِنْ ‏ ‏أَنَامِلِهِ ‏ ‏مَعَ الْمَاءِ
فَإِنْ هُوَ قَامَ فَصَلَّى فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَمَجَّدَهُ بِالَّذِي هُوَ لَهُ ‏ ‏أَهْلٌ ‏ ‏وَفَرَّغَ قَلْبَهُ لِلَّهِ إِلَّا انْصَرَفَ مِنْ خَطِيئَتِهِ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ
فَحَدَّثَ ‏ ‏عَمْرُو بْنُ عَبَسَةَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏ ‏أَبَا أُمَامَةَ ‏ ‏صَاحِبَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏أَبُو أُمَامَةَ ‏ ‏يَا ‏ ‏عَمْرَو بْنَ عَبَسَةَ ‏ ‏انْظُرْ مَا تَقُولُ فِي مَقَامٍ وَاحِدٍ يُعْطَى هَذَا الرَّجُلُ فَقَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏يَا ‏ ‏أَبَا أُمَامَةَ ‏ ‏لَقَدْ كَبِرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي وَاقْتَرَبَ أَجَلِي وَمَا بِي حَاجَةٌ أَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ وَلَا عَلَى رَسُولِ اللَّهِ لَوْ لَمْ أَسْمَعْهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا حَتَّى عَدَّ سَبْعَ مَرَّاتٍ مَا حَدَّثْتُ بِهِ أَبَدًا وَلَكِنِّي سَمِعْتُهُ أَكْثَرَ مِنْ ذَلِكَ

நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்தபோது, ‘மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கின்றார்களே! அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் இல்லாமல் சிலைகளை வணங்கிக்கொண்டிருக்கின்றார்களே!’ என எண்ணி(வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லிவருவதாகக் கேள்விப்பட்டேன். எனவே, நான் எனது வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய சமுதாயத்தார் அவர்களுக்கெதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எனவே, நான் மிகுந்த எச்சரிக்கையுடன் மக்காவுக்குள் நுழைந்து அவர்களிடம் சென்று,

“நீங்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு “நான் ஒரு நபி” என்றார்கள். நான் “நபி என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு “அல்லாஹ் என்னை(த் தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்” என்று கூறினார்கள். நான் “என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?” என்று கேட்டேன். அதற்கு “இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை(வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்” என்று பதிலளித்தார்கள்.

நான் “இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் யாராவது உங்களுடன் இருக்கின்றார்களா?” என அவர்களிடம் வினவினேன். அதற்கு, “சுதந்திரமான (அபூபக்ரு) ஒருவரும் அடிமை (பிலால்) ஒருவரும் உள்ளனர்” என்றார்கள். “நானும் உங்களைப் பின்பற்ற விழைகிறேன்” என்று நான் கூறினேன். அதற்கவர்கள் “இந்தச் சூழ்நிலையில் உம்மால் என்னைப் பின்பற்ற இயலாது. எனது நிலையையும் (எனக்கெதிரான) மக்களின் நிலையையும் நீர் பார்க்கவில்லையா? (தற்போது) நீர் உம்முடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வீராக! நான் (அடக்குமுறையை வென்று) வெளிப்பட்டேன் என என்னைப் பற்றி நீர் கேள்விப்பட்டால் என்னிடம் வாரும்!” என்றார்கள். அதற்கேற்ப நான் என் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நாடு துறந்து) மதீனாவுக்குச் சென்றுவிட்டார்கள். நான் என் குடும்பத்தாரிடம் இருந்துகொண்டே செய்திகளைக் கேட்டு அறிந்துகொண்டிருந்தேன். அவர்கள் மதீனாவுக்குச் சென்றவுடன் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்தேன். ஒரு சமயம் யஸ்ரிப்(மதீனா)வாசிகளில் சிலர் என்னிடம் வந்தனர். அவர்களிடம் “மதீனாவிற்கு வந்துள்ள இந்த மனிதர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “மக்கள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர். (மக்காவில்) அவருடைய சமுதாயத்தார் அவரைக் கொன்றுவிடத் திட்டமிட்டனர். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று கூறினர்.

பின்னர் நான் மதீனாவுக்குச் சென்று நபியவர்களைச் சந்தித்தேன். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என்னை அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம், மக்காவில் என்னை வந்து சந்தித்தவர்தாமே!” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். பிறகு “அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்துள்ள, எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுவீராக. பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக்கொள்க. ஏனெனில், அது உதயமாகும்போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்.

பிறகு தொழுவீராக! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும்(நண்பகல் நேரம்)வரை தொழுவீராக! பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்க. ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகின்றது.

பிறகு நிழல் சாய்ந்துவிட்டால் தொழுவீராக. அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். அதை அஸ்ரு வரை தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும்வரை தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் மறைகின்றது. அந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! உளூச் செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “உங்களில் ஒருவர் உளூச் செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (நீரோடு சேர்ந்து கீழே) விழுந்துவிடுகின்றன.

பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து நீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.

பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து நீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.

பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி(மஸ்ஹுச் செய்தி)டும்போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து நீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.

பிறகு அவர் தம் பாதங்களைக் கணுக்கால்கள்வரை கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து நீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.

(அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) நபித்தோழர் அபூஉமாமா (ரலி) கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அம்ரு பின் அபஸா (ரலி) என்னிடம் கூறியபோது நான், “அம்ருப்னு அபஸா! என்ன சொல்கின்றீர்கள் என்பதை நன்கு யோசித்துச் சொல்லுங்கள்! ஒரே இடத்தில் (இத்தனையும்) அந்த மனிதர் வழங்கப்பெறுகின்றாரா?” என்று கேட்டேன். அதற்கு அம்ரு பின் அபஸா (ரலி), “அபூஉமாமா!, என் வயது முதிர்ந்துவிட்டது; எனது எலும்பு நலிந்துவிட்டது; எனது தவணை நெருங்கி விட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் மீதோ அவன் தூதர் மீதோ பொய்யுரைப்பதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை. நான் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை (இவ்வாறு ஏழுவரை எண்ணிச் சொல்கிறார்) மட்டுமே செவியுற்றிருந்தால் இதை ஒருபோதும் நான் அறிவித்திருக்கமாட்டேன். ஆனால், அதைவிட அதிகத் தடவைகள் நான் செவியுற்றேன் (அதனால்தான் அறிவித்தேன்)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அபஸா அஸ்ஸலமீ (ரலி)


குறிப்பு :

தொழுகைகளின் நேரங்கள் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தளத்தின் முஸ்லிம் அறிவகத்தில் 964ஆவது ஹதீஸைப் பார்வையிடவும். (https://muslim.satyamargam.com/5-32/964/)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1373

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُلَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ ‏ ‏يَقُولُ :‏‏

‏ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ ‏ ‏تَضَيَّفُ ‏ ‏الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்திருந்தார்கள். அவையாவன:

1- சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,
2- ஒருவர் (வெயிலில்) நிற்கும்போது நிழல் விழாத நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கில்) சரியும்வரை.
3- சூரியன் மறையத் தொடங்கியதிலிருந்து நன்கு மறையும்வரை.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1372

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏خَيْرِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ هُبَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ ‏ ‏قَالَ ‏:‏

‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَصْرَ ‏ ‏بِالْمُخَمَّصِ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ هَذِهِ الصَّلَاةَ عُرِضَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَضَيَّعُوهَا فَمَنْ حَافَظَ عَلَيْهَا كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ وَلَا صَلَاةَ بَعْدَهَا حَتَّى يَطْلُعَ الشَّاهِدُ ‏ ‏وَالشَّاهِدُ النَّجْمُ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ إِسْحَقَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏خَيْرِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ السَّبَائِيِّ ‏ ‏وَكَانَ ثِقَةً ‏ ‏عَنْ ‏ ‏أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَصْرَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு பயணத்தின்போது) ‘அல்முகம்மஸ்’ எனுமிடத்தில் எங்களுக்கு அஸ்ருத் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு “இந்தத் தொழுகையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன்வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் அதைப் பாழாக்கிவிட்டார்கள். எனவே, யார் இத் தொழுகையைப் பேணித் தொழுதுவருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. அஸ்ருக்குப் பிறகு (சூரியன் மறைந்து,) ஷாஹித் (நட்சத்திரம்) தோன்றும்வரை எந்தத் தொழுகையும் இல்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி)


குறிப்பு :

மேற்கண்ட ஹதீஸ் அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி) வழியாக அபூஹபீப் (ரஹ்) அறிவிப்பாகவும் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1371

اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَابْنُ بِشْرٍ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا بَدَا ‏ ‏حَاجِبُ ‏ ‏الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَبْرُزَ وَإِذَا غَابَ ‏ ‏حَاجِبُ ‏ ‏الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ

சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும் போது (தொழாதீர்கள்); அது முழுமையாக வெளிப்படும்வரை தொழுவதைத் தாமதப் படுத்துங்கள். சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரை தொழுகையைத் தாமதப்பபடுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1370

اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا فَإِنَّهَا تَطْلُعُ بِقَرْنَيْ شَيْطَانٍ

சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள் தொழுவதற்காகத் தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1369

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا ‏ ‏يَتَحَرَّى ‏ ‏أَحَدُكُمْ فَيُصَلِّيَ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَلَا عِنْدَ غُرُوبِهَا

உங்களில் ஒருவர் சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் (சரியாகச்) தேர்ந்தெடுத்துத் தொழ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)