அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1368

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَلَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ

அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு சூரியன் மறையும்வரை எந்தத் தொழுகையும் இல்லை. ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு சூரியன் உதிக்கும்வரை எந்தத் தொழுகையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1367

و حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏وَإِسْمَعِيلُ بْنُ سَالِمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏قَالَ ‏ ‏دَاوُدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْعَالِيَةِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏‏

‏سَمِعْتُ غَيْرَ وَاحِدٍ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْهُمْ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏وَكَانَ أَحَبَّهُمْ إِلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ الصَّلَاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَهِشَامٍ ‏ ‏بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஃபஜ்ருக்குப் பின் சூரியன் உதயமாகும் வரையும் அஸ்ருக்குப் பின் சூரியன் மறையும் வரையும் தொழ வேண்டாமெனத் தடை செய்தார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் பலர் கூறக்கேட்டுள்ளேன். அவர்களுள் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஆவார்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ஸயீத் (ரஹ்), ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் (“சூரியன் உதயமாகும் வரை” என்பதைச் சுட்ட “ஹத்தா தத்லுஅஷ் ஷம்ஸு” எனும் சொற்றொடருக்கு பதிலாக) “ஹத்தா தஷ்ருகஷ் ஷம்ஸு” எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1366

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَعَنْ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ”அஸ்ருக்குப் பின் சூரியன் மறையும்வரை தொழ வேண்டாம்” எனவும், “ஸுப்ஹுக்குப் பின் சூரியன் உதயமாகும்வரை தொழ வேண்டாம்” எனவும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1365

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ  قال:‏

لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِمَّنْ أَنْتَ قُلْتُ مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالَ مِنْ أَيِّهِمْ قُلْتُ مِنْ أَهْلِ الْكُوفَةِ قَالَ هَلْ تَقْرَأُ عَلَى قِرَاءَةِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَاقْرَأْ وَاللَّيْلِ إِذَا يَغْشَى قَالَ فَقَرَأْتُ : وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَالنَّهَارِ إِذَا تَجَلَّى وَالذَّكَرِ وَالْأُنْثَى قَالَ فَضَحِكَ ثُمَّ قَالَ هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهَا


و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنِي عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا دَاوُدُ عَنْ عَامِرٍ عَنْ عَلْقَمَةَ قَالَ أَتَيْتُ الشَّامَ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ

நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் “நீங்கள் எந்த நாட்டவர்?” என்று கேட்க, “இராக்கியர்” என்று பதிலளித்தேன். “இராக்கியரில் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?” என்று அன்னார் வினவ, “கூஃபாவாசி” என நான் விடையளித்தேன். “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஓதிய முறையில் நீங்கள் ஓதுவீர்களா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால், வல்லைலி இதா யக்க்ஷா எனும் (92ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுங்கள்” என்றார்கள். நான் “வல்லைலி இதா யக்க்ஷா என ஓதத் தொடங்கி “வத்தகரி வல்உன்ஸா” என ஓதினேன். உடனே அபுத்தர்தா (ரலி) சிரித்துவிட்டு “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் செவியேற்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்)


குறிப்பு :

ஆமிர் (ரஹ்) வழி அறிவிப்பு,
“நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன்” என்று அல்கமா (ரஹ்) கூறியதாகத் தொடங்குகின்றது.

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1364

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَدِمْنَا ‏ ‏الشَّامَ ‏ ‏فَأَتَانَا ‏ ‏أَبُو الدَّرْدَاءِ ‏ ‏فَقَالَ أَفِيكُمْ أَحَدٌ يَقْرَأُ عَلَى قِرَاءَةِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقُلْتُ نَعَمْ أَنَا قَالَ فَكَيْفَ سَمِعْتَ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏يَقْرَأُ هَذِهِ الْآيَةَ” وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ” ‏ قَالَ سَمِعْتُهُ يَقْرَأُ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ‏ ‏وَالذَّكَرِ وَالْأُنْثَى قَالَ وَأَنَا وَاللَّهِ هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَؤُهَا وَلَكِنْ هَؤُلَاءِ يُرِيدُونَ أَنْ أَقْرَأَ وَمَا خَلَقَ فَلَا أُتَابِعُهُمْ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ أَتَى ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏الشَّامَ ‏ ‏فَدَخَلَ مَسْجِدًا فَصَلَّى فِيهِ ثُمَّ قَامَ إِلَى حَلْقَةٍ فَجَلَسَ فِيهَا ‏ ‏قَالَ ‏ ‏فَجَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏فَعَرَفْتُ فِيهِ ‏ ‏تَحَوُّشَ ‏ ‏الْقَوْمِ وَهَيْئَتَهُمْ قَالَ فَجَلَسَ إِلَى جَنْبِي ثُمَّ قَالَ أَتَحْفَظُ كَمَا كَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏يَقْرَأُ فَذَكَرَ بِمِثْلِهِ

(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்களான) நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தோம். (செய்தியறிந்து) எங்களிடம் அபுத்தர்தா (ரலி) வந்து, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி ஓதத் தெரிந்தவர் எவரேனும் உங்களிடையே உண்டா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்; நான் (இருக்கின்றேன்)” என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி), “வல்லைலி இஃதா யக்க்ஷா” எனும் இந்த (92:3ஆவது) வசனத்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) எவ்வாறு ஓத செவியுற்றீர்கள்?” என்று வினவினார்கள். நான் “வல்லைலி இஃதா யக்க்ஷா, வன்னஹாரி இஃதா ஜல்லா, வத்தகரி வல் உன்ஸா” என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் செவியுற்றுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) “வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா” என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால், இவர்களை நான் பின்பற்றமாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்)


குறிப்புகள் :

இபுராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில்,
அல்கமா (ரஹ்) கூறியிருப்பதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்குப் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதேன். பின்னர் எழுந்து ஒரு சபைக்குச் சென்று அதில் அமர்ந்தேன். அப்போது ஒருவர் (அபுத்தர்தா-ரலி) வந்து என் அருகே அமர்ந்தார். அவரிடம் (அக்கால) மக்களின் எளிமையையும் தோற்றத்தையும் கண்டேன். அவர் (என்னிடம்), “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஓதுகின்ற முறையை நீங்கள் மனனமிட்டுள்ளீர்களா?” என்று வினவினார். என்று இடம்பெற்றுள்ளது.

“வமா ஃகலக்க தகர வல் உன்ஸா“ என்று நாம் தற்போது ஓதுகின்ற (92:3) வசனம் தொடக்கத்தில் “வத்தகரி வல் உன்ஸா” என்று அருளப்பட்டிருந்ததாகக் குறிப்புகள் உள்ளன.

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1363

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ :‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏كَانَ يَقْرَأُ هَذَا الْحَرْفَ ‏ :‏‏فَهَلْ مِنْ ‏ ‏مُدَّكِرٍ

நபி (ஸல்) (54:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) “ஃபஹல் மின்(ம்) முத்தகிர்” என்றே ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1362

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ رَجُلًا ‏ ‏سَأَلَ ‏ ‏الْأَسْوَدَ بْنَ يَزِيدَ ‏ ‏وَهُوَ يُعَلِّمُ الْقُرْآنَ فِي الْمَسْجِدِ ‏ ‏فَقَالَ :‏‏

كَيْفَ تَقْرَأُ هَذِهِ الْآيَةَ :‏‏ فَهَلْ مِنْ ‏ ‏مُدَّكِرٍ ‏ (54:32) ‏أَدَالًا أَمْ ذَالًا؟ قَالَ بَلْ دَالًا سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏مُدَّكِرٍ ‏ (‏دَالًا)

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) பள்ளிவாசலில் குர்ஆன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் வந்து, “நீங்கள் இந்த (54:32ஆவது) வசனத்தை எவ்வாறு ஓதுகின்றீர்கள்? ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என ‘தால்’ د எனும் எழுத்துடனா? அன்றி (ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என) ‘ஃதால்’ ذ எனும் எழுத்துடனா?” என்று கேட்டார். அதற்கு ‘தால்’ (د எனும் எழுத்து) கொண்டே (ஓதுகின்றேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முத்தகிர்’ என ‘தால்’ (د எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் செவியுற்றேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள் என்று அஸ்வத் (ரஹ்)  விடையளித்தார்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1361

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا وَائِلٍ يُحَدِّثُ  : ‏ ‏

أَنَّ رَجُلًا جَاءَ إِلَى ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏فَقَالَ إِنِّي قَرَأْتُ ‏ ‏الْمُفَصَّلَ ‏ ‏اللَّيْلَةَ كُلَّهُ فِي رَكْعَةٍ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏هَذًّا ‏ ‏كَهَذِّ الشِّعْرِ ‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَقَدْ عَرَفْتُ ‏ ‏النَّظَائِرَ ‏ ‏الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرُنُ بَيْنَهُنَّ قَالَ فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنْ ‏ ‏الْمُفَصَّلِ ‏ ‏سُورَتَيْنِ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ

ஒருவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து “நான் இன்றிரவு ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு அத்தியாயங்களாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன்” எனக் கூறிவிட்டு, முஃபஸ்ஸலான இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூவாஇல் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1360

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏قَالَ :‏ ‏

جَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي بَجِيلَةَ ‏ ‏يُقَالُ لَهُ ‏ ‏نَهِيكُ بْنُ سِنَانٍ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقَالَ إِنِّي أَقْرَأُ ‏ ‏الْمُفَصَّلَ ‏ ‏فِي رَكْعَةٍ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏هَذًّا ‏ ‏كَهَذِّ الشِّعْرِ ‏لَقَدْ عَلِمْتُ ‏ ‏النَّظَائِرَ ‏ ‏الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ بِهِنَّ سُورَتَيْنِ فِي رَكْعَةٍ

பனூ பஜீலா குடும்பத்தைச் சேர்ந்த நஹீக் பின் சினான் என்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, “நான் ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் அனைத்தையும் ஓதுகின்றேன்” என்றார். அதற்கு, “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்து வைத்துள்ளேன்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக ஷகீக் அபூவாஇல் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1359

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَاصِلٌ الْأَحْدَبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏قَالَ :‏ ‏

غَدَوْنَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏يَوْمًا بَعْدَ مَا صَلَّيْنَا الْغَدَاةَ فَسَلَّمْنَا بِالْبَابِ فَأَذِنَ لَنَا قَالَ فَمَكَثْنَا بِالْبَابِ هُنَيَّةً قَالَ فَخَرَجَتْ الْجَارِيَةُ فَقَالَتْ أَلَا تَدْخُلُونَ فَدَخَلْنَا فَإِذَا هُوَ جَالِسٌ يُسَبِّحُ فَقَالَ مَا مَنَعَكُمْ أَنْ تَدْخُلُوا وَقَدْ أُذِنَ لَكُمْ فَقُلْنَا لَا إِلَّا أَنَّا ظَنَنَّا أَنَّ بَعْضَ أَهْلِ الْبَيْتِ نَائِمٌ قَالَ ظَنَنْتُمْ بِآلِ ‏ ‏ابْنِ أُمِّ عَبْدٍ ‏ ‏غَفْلَةً قَالَ ثُمَّ أَقْبَلَ يُسَبِّحُ حَتَّى ظَنَّ أَنَّ الشَّمْسَ قَدْ طَلَعَتْ فَقَالَ يَا جَارِيَةُ انْظُرِي هَلْ طَلَعَتْ قَالَ فَنَظَرَتْ فَإِذَا هِيَ لَمْ تَطْلُعْ فَأَقْبَلَ يُسَبِّحُ حَتَّى إِذَا ظَنَّ أَنَّ الشَّمْسَ قَدْ طَلَعَتْ قَالَ يَا جَارِيَةُ انْظُرِي هَلْ طَلَعَتْ فَنَظَرَتْ فَإِذَا هِيَ قَدْ طَلَعَتْ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي ‏ ‏أَقَالَنَا ‏ ‏يَوْمَنَا هَذَا ‏ ‏فَقَالَ ‏ ‏مَهْدِيٌّ ‏ ‏وَأَحْسِبُهُ قَالَ وَلَمْ يُهْلِكْنَا بِذُنُوبِنَا
‏ ‏قَالَ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ قَرَأْتُ ‏ ‏الْمُفَصَّلَ ‏ ‏الْبَارِحَةَ كُلَّهُ قَالَ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏هَذًّا ‏ ‏كَهَذِّ الشِّعْرِ ‏إِنَّا لَقَدْ ‏ ‏سَمِعْنَا ‏ ‏الْقَرَائِنَ ‏ ‏وَإِنِّي لَأَحْفَظُ الْقَرَائِنَ الَّتِي كَانَ يَقْرَؤُهُنَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَمَانِيَةَ عَشَرَ مِنْ ‏ ‏الْمُفَصَّلِ ‏ ‏وَسُورَتَيْنِ مِنْ آلِ حم

நாங்கள் (ஒரு நாள்) காலையில் வைகறை(ஸுப்ஹு)த் தொழுகைக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். வாசலில் (நின்று) ஸலாம் சொன்னோம். அவர்கள் எங்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். ஆனால், நாங்கள் சிறிது நேரம் வாசலிலேயே (தயங்கியவாறு) நின்றுகொண்டிருந்தோம். அப்போது பணிப் பெண் வெளியே வந்து, “நீங்கள் உள்ளே வரக் கூடாதா?” என்று கேட்டாள். நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்;

(எங்களைக் கண்டதும்) “உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட பின்பும் ஏன் உள்ளே வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு, “(அப்படியொன்றும்) இல்லை; (உங்கள்) வீட்டாரில் எவரேனும் உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் எண்ணினோம்” என்று சொன்னோம். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இப்னு உம்மி அப்தின் குடும்பத்தார் (தொழுகையில்) அலட்சியமாக இருப்பார்கள் என எண்ணிக்கொண்டீர்களா?” என்று கூறி விட்டு (மீண்டும்) இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகி இருக்கலாம் என எண்ணி, (தம் பணிப் பெண்ணிடம்) “பெண்ணே! சூரியன் உதயமாகிவிட்டதா, பார்?” என்றார்கள். அந்தப் பெண் பார்த்தபோது சூரியன் உதயமாகியிருக்கவில்லை. எனவே, மீண்டும் இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகி இருக்கும் என எண்ணியபோது (மறுபடியும்) “பெண்ணே, சூரியன் உதயமாகிவிட்டதா, பார்!” என்றார்கள். அவள் பார்த்தபோது சூரியன் உதயமாகிவிட்டிருந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இன்றைய நாளை நமக்கு மீட்டுத்தந்த இறைவனுக்கே புகழ் யாவும்; அவன் நம்மை நம் பாவங்களால் அழித்துவிடவில்லை” என்று கூறினார்கள்.

அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், “நேற்றிரவு நான் ’முஃபஸ்ஸல்’ அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்” என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக (குர்ஆனை) ஓதினீரோ? ஒரே அளவிலமைந்த அத்தியாயங்களை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓதும்போது) நாங்கள் செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வழக்கமாக) ஓதிவந்த ஒரே அளவிலமைந்த ’முஃபஸ்ஸல்’ அத்தியாயங்கள் பதினெட்டையும் ’ஹாமீம்’ (எனத் தொடங்கும்) அத்தியாயங்கள் இரண்டையும் நான் மனனமிட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூவாஇல் (ரஹ்)