அத்தியாயம்: 6, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1361

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا وَائِلٍ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏أَنَّ رَجُلًا جَاءَ إِلَى ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏فَقَالَ إِنِّي قَرَأْتُ ‏ ‏الْمُفَصَّلَ ‏ ‏اللَّيْلَةَ كُلَّهُ فِي رَكْعَةٍ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏هَذًّا ‏ ‏كَهَذِّ الشِّعْرِ ‏
‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَقَدْ عَرَفْتُ ‏ ‏النَّظَائِرَ ‏ ‏الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرُنُ بَيْنَهُنَّ قَالَ فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنْ ‏ ‏الْمُفَصَّلِ ‏ ‏سُورَتَيْنِ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ

ஒருவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து “நான் இன்றிரவு ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு அத்தியாயங்களாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன்” எனக் கூறிவிட்டு, முஃபஸ்ஸலான இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூவாஇல் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1360

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي بَجِيلَةَ ‏ ‏يُقَالُ لَهُ ‏ ‏نَهِيكُ بْنُ سِنَانٍ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقَالَ إِنِّي أَقْرَأُ ‏ ‏الْمُفَصَّلَ ‏ ‏فِي رَكْعَةٍ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏هَذًّا ‏ ‏كَهَذِّ الشِّعْرِ ‏
‏لَقَدْ عَلِمْتُ ‏ ‏النَّظَائِرَ ‏ ‏الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ بِهِنَّ سُورَتَيْنِ فِي رَكْعَةٍ

பனூ பஜீலா குடும்பத்தைச் சேர்ந்த நஹீக் பின் சினான் என்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, “நான் ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் அனைத்தையும் ஓதுகிறேன்” என்றார். அதற்கு, “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்து வைத்துள்ளேன்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூவாஇல் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1359

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَاصِلٌ الْأَحْدَبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏قَالَ ‏ ‏غَدَوْنَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏يَوْمًا بَعْدَ مَا صَلَّيْنَا الْغَدَاةَ فَسَلَّمْنَا بِالْبَابِ فَأَذِنَ لَنَا قَالَ فَمَكَثْنَا بِالْبَابِ هُنَيَّةً قَالَ فَخَرَجَتْ الْجَارِيَةُ فَقَالَتْ أَلَا تَدْخُلُونَ فَدَخَلْنَا فَإِذَا هُوَ جَالِسٌ يُسَبِّحُ
فَقَالَ مَا مَنَعَكُمْ أَنْ تَدْخُلُوا وَقَدْ أُذِنَ لَكُمْ فَقُلْنَا لَا إِلَّا أَنَّا ظَنَنَّا أَنَّ بَعْضَ أَهْلِ الْبَيْتِ نَائِمٌ قَالَ ظَنَنْتُمْ بِآلِ ‏ ‏ابْنِ أُمِّ عَبْدٍ ‏ ‏غَفْلَةً قَالَ ثُمَّ أَقْبَلَ يُسَبِّحُ حَتَّى ظَنَّ أَنَّ الشَّمْسَ قَدْ طَلَعَتْ فَقَالَ يَا جَارِيَةُ انْظُرِي هَلْ طَلَعَتْ قَالَ فَنَظَرَتْ فَإِذَا هِيَ لَمْ تَطْلُعْ فَأَقْبَلَ يُسَبِّحُ حَتَّى إِذَا ظَنَّ أَنَّ الشَّمْسَ قَدْ طَلَعَتْ قَالَ يَا جَارِيَةُ انْظُرِي هَلْ طَلَعَتْ فَنَظَرَتْ فَإِذَا هِيَ قَدْ طَلَعَتْ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي ‏ ‏أَقَالَنَا ‏ ‏يَوْمَنَا هَذَا ‏ ‏فَقَالَ ‏ ‏مَهْدِيٌّ ‏ ‏وَأَحْسِبُهُ قَالَ وَلَمْ يُهْلِكْنَا بِذُنُوبِنَا
‏ ‏قَالَ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ قَرَأْتُ ‏ ‏الْمُفَصَّلَ ‏ ‏الْبَارِحَةَ كُلَّهُ قَالَ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏هَذًّا ‏ ‏كَهَذِّ الشِّعْرِ ‏
‏إِنَّا لَقَدْ ‏ ‏سَمِعْنَا ‏ ‏الْقَرَائِنَ ‏ ‏وَإِنِّي لَأَحْفَظُ الْقَرَائِنَ الَّتِي كَانَ يَقْرَؤُهُنَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَمَانِيَةَ عَشَرَ مِنْ ‏ ‏الْمُفَصَّلِ ‏ ‏وَسُورَتَيْنِ مِنْ آلِ حم

நாங்கள் (ஒரு நாள்) காலையில் வைகறை(ஸுப்ஹு)த் தொழுகைக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். வாசலில் (நின்று) ஸலாம் சொன்னோம். அவர்கள் எங்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். ஆனால், நாங்கள் சிறிது நேரம் வாசலிலேயே (தயங்கியவாறு) நின்றுகொண்டிருந்தோம். அப்போது பணிப் பெண் வெளியே வந்து, “நீங்கள் உள்ளே வரக் கூடாதா?” என்று கேட்டாள். நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்;

(எங்களைக் கண்டதும்) “உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட பின்பும் ஏன் உள்ளே வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு, “(அப்படியொன்றும்) இல்லை; (தங்கள்) வீட்டாரில் எவரேனும் உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் எண்ணினோம்” என்று சொன்னோம். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இப்னு உம்மி அப்தின் குடும்பத்தார் (தொழுகையில்) அலட்சியமாக இருப்பார்கள் என எண்ணிக்கொண்டீர்களா?” என்று கூறி விட்டு (மீண்டும்) இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகி இருக்கலாம் என எண்ணி, (தம் பணிப் பெண்ணிடம்) “பெண்ணே! சூரியன் உதயமாகிவிட்டதா, பார்?” என்றார்கள். அந்தப் பெண் பார்த்தபோது சூரியன் உதயமாகியிருக்கவில்லை. எனவே, மீண்டும் இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகி இருக்கும் என எண்ணியபோது (மறுபடியும்) “பெண்ணே, சூரியன் உதயமாகிவிட்டதா, பார்!” என்றார்கள். அவள் பார்த்தபோது சூரியன் உதயமாகிவிட்டிருந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இன்றைய நாளை நமக்கு மீட்டுத்தந்த இறைவனுக்கே புகழ் யாவும்; அவன் நம்மை நம் பாவங்களால் அழித்துவிடவில்லை” என்று கூறினார்கள்.

அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், “நேற்றிரவு நான் “முஃபஸ்ஸல்’ அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்” என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக (குர்ஆனை) ஓதினீரோ? ஒரே அளவிலமைந்த அத்தியாயங்களை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதும்போது) நாங்கள் செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கமாக) ஓதிவந்த ஒரே அளவிலமைந்த “முஃபஸ்ஸல்’ அத்தியாயங்கள் பதினெட்டையும் “ஹாமீம்’ (எனத் தொடங்கும்) அத்தியாயங்கள் இரண்டையும் நான் மனனமிட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூவாஇல் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1358

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ رَجُلٌ يُقَالُ لَهُ ‏ ‏نَهِيكُ بْنُ سِنَانٍ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏كَيْفَ تَقْرَأُ هَذَا الْحَرْفَ أَلِفًا تَجِدُهُ أَمْ يَاءً‏) مِنْ مَاءٍ غَيْرِ ‏ ‏آسِنٍ (‏ أَوْ)مِنْ مَاءٍ غَيْرِ ‏ ‏يَاسِنٍ( ؟

‏قَالَ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏وَكُلَّ الْقُرْآنِ قَدْ أَحْصَيْتَ غَيْرَ هَذَا قَالَ إِنِّي لَأَقْرَأُ ‏ ‏الْمُفَصَّلَ ‏ ‏فِي رَكْعَةٍ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏هَذًّا ‏ ‏كَهَذِّ الشِّعْرِ ‏ ‏إِنَّ أَقْوَامًا يَقْرَءُونَ الْقُرْآنَ ‏ ‏لَا يُجَاوِزُ ‏ ‏تَرَاقِيَهُمْ ‏ ‏وَلَكِنْ إِذَا وَقَعَ فِي الْقَلْبِ فَرَسَخَ فِيهِ نَفَعَ إِنَّ أَفْضَلَ الصَّلَاةِ الرُّكُوعُ وَالسُّجُودُ ‏

‏إِنِّي لَأَعْلَمُ ‏ ‏النَّظَائِرَ ‏ ‏الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرُنُ بَيْنَهُنَّ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ ثُمَّ قَامَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَدَخَلَ ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏فِي ‏ ‏إِثْرِهِ ‏ ‏ثُمَّ خَرَجَ فَقَالَ قَدْ أَخْبَرَنِي بِهَا ‏

‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ جَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي بَجِيلَةَ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏نَهِيكُ بْنُ سِنَانٍ

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ رَجُلٌ إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏يُقَالُ لَهُ ‏ ‏نَهِيكُ بْنُ سِنَانٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَجَاءَ ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏لِيَدْخُلَ عَلَيْهِ فَقُلْنَا لَهُ سَلْهُ عَنْ ‏ ‏النَّظَائِرِ ‏ ‏الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ بِهَا فِي رَكْعَةٍ فَدَخَلَ عَلَيْهِ فَسَأَلَهُ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ عِشْرُونَ سُورَةً مِنْ ‏ ‏الْمُفَصَّلِ ‏ ‏فِي تَأْلِيفِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمَا وَقَالَ إِنِّي لَأَعْرِفُ ‏ ‏النَّظَائِرَ ‏ ‏الَّتِي كَانَ يَقْرَأُ بِهِنَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اثْنَتَيْنِ فِي رَكْعَةٍ عِشْرِينَ سُورَةً فِي عَشْرِ رَكَعَاتٍ

நஹீக் பின் சினான் என்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! குர்ஆனில் (47ஆவது அத்தியாயத்திலுள்ள) இந்த எழுத்தை எப்படி ஓதுகின்றீர்?: ‘மிம்மாயின் ஃகைரி ஆசினின்’ என்று அலிஃபுடன் ஓதுகின்றீரா?, அல்லாது ‘மிம்மாயின் ஃகைரி யாசினின்’ என்று ‘யா’வுடன் ஓதுகின்றீரா?” எனக் கேட்டார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இதைத் தவிர குர்ஆன் முழுவதையும் சரியாக மனனமிட்டு விட்டாயோ?” என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் முஃபஸ்ஸல் எனும் (ஹுஜுராத் முதல் அந்நாஸ் (49-114) வரையிலான) அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஓதுகின்றேன்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதுவீரோ? மக்களில் சிலர் குர்ஆனை ஓதுவார்கள். அது அவர்களது தொண்டைக் குழியைக் கடந்து செல்லாது. அது மட்டும் அவர்களது உள்ளத்திற்குள் சென்று பதிந்துவிட்டால் நிச்சயம் பயன் தரும். தொழுகையில் மிகச் சிறந்த நிலை ருகூஉவும் ஸஜ்தாவுமாகும். நபி (ஸல்) தமது தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்” என்று கூறினார்கள்.

(இதைக் கூறிய) பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) (தமது இல்லத்தினுள்) சென்றார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து அல்கமா (ரஹ்) அவர்களும் உள்ளே சென்றார்கள். (சிறிது நேரம் கழித்து) அல்கமா (ரஹ்) வெளியே வந்து “அந்த (சரிநிகர்) அத்தியாயங்கள் (எவை என்பது) பற்றி எனக்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூவாஇல் (ரஹ்)

குறிப்புகள்:

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், பனூ பஜீலா குலத்தைச் சேர்ந்த ஒருவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்தார் என்றே இடம்பெற்றுள்ளது. நஹீக் பின் சினான் எனும் பெயர் இடம்பெறவில்லை.

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில்,
அல்கமா (ரஹ்), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தினுள்ளே) போகும்போது நாங்கள், “நீங்கள் அவர்களிடம் (சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரே ரக்அத்தில் ஓதிவந்த அந்த சரிநிகர் அத்தியாயங்கள் (எவை என்பது) குறித்துக் கேளுங்கள்!” என்று வேண்டினோம். அல்கமா (ரஹ்) உள்ளே சென்று, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவினார்கள். பின்னர் எங்களிடம் வந்து, “(அவை:) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தொகுத்துவைத்துள்ள குர்ஆன் பிரதியின்படி (ஆரம்ப) இருபது முஃபஸ்ஸல் அத்தியாயங்களாகும்” என்று கூறினார்கள்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் ஈஸா பின் யூனுஸ் ஆகியோர் வழி அறிவிப்பில்,
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் பத்து ரக்அத்களில் இருபது அத்தியாயங்களாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.