அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1288

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقُولُ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ ‏ ‏اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ ‏ ‏قَيَّامُ ‏ ‏السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ ‏ ‏أَنَبْتُ ‏ ‏وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ ‏


‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا حَدِيثُ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏فَاتَّفَقَ لَفْظُهُ مَعَ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏لَمْ يَخْتَلِفَا إِلَّا فِي حَرْفَيْنِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏مَكَانَ قَيَّامُ قَيِّمُ وَقَالَ وَمَا أَسْرَرْتُ ‏ ‏وَأَمَّا حَدِيثُ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏فَفِيهِ بَعْضُ زِيَادَةٍ وَيُخَالِفُ ‏ ‏مَالِكًا ‏ ‏وَابْنَ جُرَيْجٍ ‏ ‏فِي أَحْرُفٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ الْقَصِيرُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ وَاللَّفْظُ قَرِيبٌ مِنْ أَلْفَاظِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடு இரவில் தொழுவதற்காக எழுந்து,

“அல்லாஹும்ம லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வ லக்கல் ஹம்து, அன்த்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வ லக்கல் ஹம்து, அன்த்த ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வமன் ஃபீஹின்ன. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்கல் ஹக். வ கவ்லுக்கல் ஹக்கு. வ லிகாஉக ஹக். வல்ஜன்னத்து ஹக். வந்நாரு ஹக். வஸ்ஸாஅத்து ஹக். அல்லாஹும்ம லக அஸ்லம்து, வ பிக ஆமன்து, வ அலைக்க தவக்கல்து, வ இலைக்க அனப்து, வ பிக்க காஸம்து, வ இலைக்க ஹாக்கம்து, ஃபஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து வ அக்கர்த்து வ அஸ்ரர்த்து வ அஃலன்த்து. அன்த இலாஹீ. லா இலாஹ இல்லா அன்த்த” என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்களின் பூமியின் ஒளி நீயே. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி ஆகியவற்றை நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ளவர்களின், உள்ளவற்றின் இறைவன் நீயே. நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது கூற்று உண்மையே. உன் தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமை நாள் உண்மை. அல்லாஹ்வே! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே மீள்வேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கிற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை).

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி் அறிவிப்பில், (கய்யாம் என்பதற்கு பதிலாக) “கய்யிம்” எனும் சொல்லும் “நான் இரகசியமாகச் செய்த” என்பதைக் குறிக்க (வ அஸ்ரர்த்து என்பதற்கு பதிலாக) “வ மா அஸ்ரர்த்து” எனும் சொற்றொடரும் இடம்பெற்றுள்ளன. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இரண்டு சொற்றொடர்களில் மட்டும் சிறு மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

இப்னு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில் சில கூடுதலான தகவல்கள் உள்ளன. மாலிக் (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகிய இருவர் அறிவிக்கும் பல சொற்றொடர்களோடு இப்னு உயைனா (ரஹ்) அவர்களின் அறிவிப்பு வேறுபடுகின்றது.

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1287

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا قَامَ أَحَدُكُمْ مِنْ اللَّيْلِ فَلْيَفْتَتِحْ صَلَاتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ

“உங்களில் ஒருவர் இரவில் தொழுவதற்காக நின்றால் அவர் முதலில் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1286

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو حُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ مِنْ اللَّيْلِ لِيُصَلِّيَ افْتَتَحَ صَلَاتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் தொழுவதற்காக நின்றால் முதலில் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1285

و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَدَائِنِيُّ أَبُو جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَرْقَاءُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ : ‏

‏كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَانْتَهَيْنَا إِلَى ‏ ‏مَشْرَعَةٍ ‏ ‏فَقَالَ أَلَا ‏ ‏تُشْرِعُ ‏ ‏يَا ‏ ‏جَابِرُ ‏ ‏قُلْتُ بَلَى قَالَ فَنَزَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَشْرَعْتُ ‏ ‏قَالَ ثُمَّ ذَهَبَ لِحَاجَتِهِ وَوَضَعْتُ لَهُ وَضُوءًا قَالَ فَجَاءَ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ ‏ ‏فَصَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ فَقُمْتُ خَلْفَهُ فَأَخَذَ بِأُذُنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ

நான் அல்லாவின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நாங்கள் ஒரு நீர்நிலையின் படித்துறையைச் சென்றடைந்தோம். அப்போது அவர்கள், “ஜாபிரே, (ஒட்டகத்திற்கு நீர் புகட்டி உனது தேவையையும் பூர்த்தி செய்துகொள்வதற்கு) நீ படித்துறையில் இறங்குவாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள். நான் படித்துறையில் இறங்கினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். நான் அவர்களுக்காக நீர் எடுத்து வைத்தேன். அவர்கள் (திரும்பி)வந்து, உளூச் செய்தார்கள். பிறகு எழுந்து, ஒரே ஆடையை அணிந்து, அதை (வலம் இடமாகத் தோள்கள் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். நான் அவர்களுக்கு (நேர்) பின்னால் (தொழுவதற்காக) நின்றேன். உடனே அவர்கள் எனது காதைப் பிடித்து (இழுத்து) என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1284

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ :‏

‏لَأَرْمُقَنَّ ‏ ‏صَلَاةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّيْلَةَ ‏ ‏فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ أَوْتَرَ فَذَلِكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً

நான் ஓர் இரவு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை (கண்விழித்து)க் கவனிக்கப்போகிறேன் என (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முதலில்) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு மிக மிக மிக நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாக இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களைவிடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு (ஒரு ரக்அத்) வித்ருத் தொழுதார்கள். இவை (மொத்தம்) பதிமூன்று ரக்அத்களாகும்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1283

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ : ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1282

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَيْسَ بْنَ سَعْدٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏

‏بَعَثَنِي ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي بَيْتِ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَبِتُّ مَعَهُ تِلْكَ اللَّيْلَةَ فَقَامَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَتَنَاوَلَنِي مِنْ خَلْفِ ظَهْرِهِ فَجَعَلَنِي عَلَى يَمِينِهِ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏بِتُّ عِنْدَ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏وَقَيْسِ بْنِ سَعْدٍ

என்னை (என் தந்தை) அப்பாஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அப்போது நபியவர்கள் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) இல்லத்தில் இருந்தார்கள். நான் அந்த இரவில் அவர்களுடன் தங்கியிருந்தேன். நபி (ஸல்) இரவில் தொழ நின்றார்கள். நானும் எழுந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் தமது முதுகுக்குப் பின்னே என்னைப் பிடித்து வலப் பக்கத்திற்குக் கொண்டுசென்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

அப்துல் மலிக் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி)  இல்லத்தில் இரவில் தங்கியிருந்தேன்” என (இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1281

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ : ‏

‏بِتُّ ذَاتَ لَيْلَةٍ عِنْدَ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي مُتَطَوِّعًا مِنْ اللَّيْلِ فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى الْقِرْبَةِ فَتَوَضَّأَ فَقَامَ فَصَلَّى فَقُمْتُ لَمَّا رَأَيْتُهُ صَنَعَ ذَلِكَ فَتَوَضَّأْتُ مِنْ الْقِرْبَةِ ثُمَّ قُمْتُ إِلَى شِقِّهِ الْأَيْسَرِ فَأَخَذَ بِيَدِي مِنْ وَرَاءِ ظَهْرِهِ يَعْدِلُنِي كَذَلِكَ مِنْ وَرَاءِ ظَهْرِهِ إِلَى الشِّقِّ الْأَيْمَنِ قُلْتُ أَفِي التَّطَوُّعِ كَانَ ذَلِكَ قَالَ نَعَمْ

“நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) கூடுதல் தொழுகையைத் தொழுவதற்காக எழுந்தார்கள். நபியவர்கள் தண்ணீர் பையை நோக்கிச் சென்று உளூச் செய்துவிட்டு (வந்து) தொழுதார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதைக் கண்டதும் நானும் எழுந்து அந்தப் பையிலிருந்து (தண்ணீரைச் சரித்து) உளூச் செய்துவிட்டு, அவர்களின் இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் தமது முதுகுக்குப் பின்னால் கையை நீட்டி எனது கையைப் பிடித்து, அப்படியே தமது முதுகுக்குப் பின்னால் கொண்டுசென்று (தமக்கு) வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நான், “கூடுதலான (நஃபில்) தொழுகையிலா இவ்வாறு நடந்தது?” எனக் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்).

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1280

حَدَّثَنَا ‏ ‏وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏:‏

‏أَنَّهُ رَقَدَ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاسْتَيْقَظَ فَتَسَوَّكَ وَتَوَضَّأَ وَهُوَ يَقُولُ ‏ ‏إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي ‏ ‏الْأَلْبَابِ ‏

‏فَقَرَأَ هَؤُلَاءِ الْآيَاتِ حَتَّى خَتَمَ السُّورَةَ ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ فَأَطَالَ فِيهِمَا الْقِيَامَ وَالرُّكُوعَ وَالسُّجُودَ ثُمَّ انْصَرَفَ فَنَامَ حَتَّى نَفَخَ ثُمَّ فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ سِتَّ رَكَعَاتٍ كُلَّ ذَلِكَ يَسْتَاكُ وَيَتَوَضَّأُ وَيَقْرَأُ هَؤُلَاءِ الْآيَاتِ ثُمَّ أَوْتَرَ بِثَلَاثٍ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَخَرَجَ إِلَى الصَّلَاةِ وَهُوَ يَقُولُ ‏ ‏اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَمِنْ أَمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ أَعْطِنِي نُورًا

நான் (ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) உறங்கினேன். அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து பல் துலக்கி, உளூச் செய்து, “திண்ணமாக வானங்களின், பூமியின் படைப்பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன” எனும் (3:190ஆவது) வசனத்தை, அந்த அத்தியாயத்தின் இறுதிவரை ஓதி முடித்தார்கள். பின்னர் எழுந்து நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள்; ருகூஉச் செய்தார்கள்; ஸஜ்தாவும் செய்து முடித்தார்கள். பிறகு திரும்பிச் சென்று குறட்டைவிட்டு உறங்கினார்கள். இவ்வாறே மூன்று முறை செய்து, ஆறு ரக்அத்கள் தொழுதார்கள். ஒவ்வொரு தடவையும் பல் துலக்கி, உளூச் செய்து இந்த வசனங்களை ஓதினார்கள். பிறகு மூன்று ரக்அத் வித்ருத் தொழுதார்கள். தொழுகை அழைப்பாளர் (ஸுப்ஹுத் தொழுகைக்காக) அழைத்ததும் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்போது அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வஃபீ லிஸானீ நூரன். வஜ்அல் ஃபீ ஸம்ஈ நூரன். வஜ்அல் ஃபீ பஸரீ நூரன். வஜ்அல் மின் கல்ஃபீ நூரன். வமின் அமாமீ நூரன். வஜ்அல் மின் ஃபவ்க்கீ நூரன். வமின் தஹ்த்தீ நூரன். அல்லாஹும்ம அஃத்தினீ நூரா” என்று கூறினார்கள்.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவிப்புலனிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்குப் பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! எனக்கு ஒளியை வழங்குவாயாக!).

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1279

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏:‏

‏بِتُّ فِي بَيْتِ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَبَقَيْتُ ‏ ‏كَيْفَ ‏ ‏يُصَلِّي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَقَامَ فَبَالَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَكَفَّيْهِ ثُمَّ نَامَ ثُمَّ قَامَ إِلَى الْقِرْبَةِ فَأَطْلَقَ ‏ ‏شِنَاقَهَا ‏ ‏ثُمَّ صَبَّ فِي ‏ ‏الْجَفْنَةِ ‏ ‏أَوْ الْقَصْعَةِ فَأَكَبَّهُ بِيَدِهِ عَلَيْهَا ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا حَسَنًا بَيْنَ الْوُضُوءَيْنِ ثُمَّ قَامَ ‏ ‏يُصَلِّي فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ فَقُمْتُ عَنْ يَسَارِهِ قَالَ فَأَخَذَنِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ فَتَكَامَلَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ وَكُنَّا نَعْرِفُهُ إِذَا نَامَ بِنَفْخِهِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ فَصَلَّى فَجَعَلَ يَقُولُ فِي صَلَاتِهِ أَوْ فِي سُجُودِهِ ‏ ‏اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ شِمَالِي نُورًا وَأَمَامِي نُورًا وَخَلْفِي نُورًا وَفَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا وَاجْعَلْ لِي نُورًا أَوْ قَالَ وَاجْعَلْنِي نُورًا ‏


‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلَمَةُ بْنُ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏سَلَمَةُ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏كُرَيْبًا ‏ ‏فَقَالَ قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏كُنْتُ عِنْدَ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏وَقَالَ وَاجْعَلْنِي نُورًا وَلَمْ يَشُكَّ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَهَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رِشْدِينٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏بِتُّ عِنْدَ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ غَسْلَ الْوَجْهِ وَالْكَفَّيْنِ غَيْرَ أَنَّهُ قَالَ ثُمَّ أَتَى الْقِرْبَةَ فَحَلَّ ‏ ‏شِنَاقَهَا ‏ ‏فَتَوَضَّأَ وُضُوءًا بَيْنَ الْوُضُوءَيْنِ ثُمَّ أَتَى فِرَاشَهُ فَنَامَ ثُمَّ قَامَ قَوْمَةً أُخْرَى فَأَتَى الْقِرْبَةَ فَحَلَّ ‏ ‏شِنَاقَهَا ‏ ‏ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا هُوَ الْوُضُوءُ وَقَالَ أَعْظِمْ لِي نُورًا وَلَمْ يَذْكُرْ وَاجْعَلْنِي نُورًا ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَلْمَانَ الْحَجْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلِ بْنِ خَالِدٍ ‏ ‏أَنَّ ‏ ‏سَلَمَةَ بْنَ كُهَيْلٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏كُرَيْبًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏بَاتَ لَيْلَةً عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى الْقِرْبَةِ فَسَكَبَ مِنْهَا فَتَوَضَّأَ وَلَمْ يُكْثِرْ مِنْ الْمَاءِ وَلَمْ يُقَصِّرْ فِي الْوُضُوءِ وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ قَالَ وَدَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَتَئِذٍ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً قَالَ ‏ ‏سَلَمَةُ ‏ ‏حَدَّثَنِيهَا ‏ ‏كُرَيْبٌ ‏ ‏فَحَفِظْتُ مِنْهَا ثِنْتَيْ عَشْرَةَ وَنَسِيتُ مَا بَقِيَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ اجْعَلْ لِي فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَمِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ شِمَالِي نُورًا وَمِنْ بَيْنِ يَدَيَّ نُورًا وَمِنْ خَلْفِي نُورًا وَاجْعَلْ فِي نَفْسِي نُورًا وَأَعْظِمْ لِي نُورًا ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي مَرْيَمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏رَقَدْتُ فِي بَيْتِ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏لَيْلَةَ كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَهَا لِأَنْظُرَ كَيْفَ صَلَاةُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِاللَّيْلِ قَالَ فَتَحَدَّثَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَعَ أَهْلِهِ سَاعَةً ثُمَّ رَقَدَ وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ ثُمَّ قَامَ فَتَوَضَّأَ ‏ ‏وَاسْتَنَّ

நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) இல்லத்தில் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் எப்படித் தொழுகின்றார்கள் என்பதைக் கவனிக்கக் காத்திருந்தேன். அவர்கள் எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு (திரும்பிவந்து) தமது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்தார்கள். பிறகு தட்டில் அல்லது பெரிய பாத்திரத்தில் அதை ஊற்றி அதில் தமது கையை நுழைத்து நடுத்தரமாக அழகிய முறையில் உளூச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிமூன்று ரக்அத்கள் தொழுது முடித்தார்கள். பிறகு குறட்டைவிட்டு உறங்கினார்கள். (பொதுவாக) அவர்களது குறட்டைச் சப்தத்தை வைத்து அவர்கள் உறங்குகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம். பின்னர் (ஸுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்று தொழுதார்கள். அவர்கள் தமது தொழுகையில் அல்லது ஸஜ்தாவில்,

“அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் ஷிமாலீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வஜ்அல்லீ நூரா/ வஜ்அல்னீ நூரா” என்று பிரார்த்தித்தார்கள்.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவிப்புலனிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.!எனக்கு முன்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக!. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு (எல்லாத் திசைகளிலும்) ஒளியை ஏற்படுத்துவாயாக (அல்லது) என்னை ஒளிமயமாக்குவாயாக).

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்புகள் :

புகைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் குறைப் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இப்னு அப்பாஸ் (ரலி) ‘நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள்…’ என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு குறிப்பிட்டார்கள்” என்றார்கள். மேலும், “என்னை ஒளிமயமாக ஆக்குவாயாக என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகவு)ம் ஐயமின்றி அறிவித்தார்கள்” என்று (இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஸலமா (ரஹ்) கூறினார்கள்.

ஸயீத் இப்னு மஸ்ரூக் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முகத்தையும் கைகளையும் கழுவியதாக அதில் குறிப்பு இல்லை. மாறாக, “… பிறகு அவர்கள் தண்ணீர் பையருகே சென்று அதன் சுருக்கை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு நடுத்தரமாக உளூச் செய்தார்கள். பிறகு தமது படுக்கைக்கு வந்து உறங்கினார்கள். பிறகு மீண்டும் எழுந்து அந்தத் தண்ணீர் பைக்குச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்துவிட்டு, நிறைவான உளூ என்பதற்கு உதாரணமாக, செம்மையாக உளூச் செய்தார்கள்.” என்றும், ‘என்னை ஒளிமயமாக்குவாயாக’ எனும் சொற்கள் இடம்பெறாமல், ‘என் ஒளியை வலிமையாக்குவாயாக’ என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

உகைல் இப்னு காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதிலிருந்து தண்ணீர் ஊற்றி உளூச் செய்தார்கள்; அதிகமாகத் நீரைப் பயன்படுத்தவுமில்லை; உளூவில் குறைவைக்கவுமில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்றைய இரவில் பத்தொன்பது விஷயங்களை இறைவனிடம் வேண்டினார்கள்” எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸலமா பின் குஹைல் (ரஹ்) கூறினார்:

எனக்கு அந்தப் பத்தொன்பது விஷயங்களையும் குறைப் (ரஹ்) அறிவித்தார்கள்.

அவற்றில் பன்னிரண்டு விஷயங்களை நான் மனனமிட்டுள்ளேன்; எஞ்சியவற்றை நான் மறந்துவிட்டேன். (அந்தப் பன்னிரண்டு விஷயங்கள் வருமாறு:)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மஜ்அல் லீ ஃபீ கல்பீ நூரன். வஃபீ லிஸானீ நூரன். வஃபீ ஸம்யீ நூரன். வஃபீ பஸரீ நூரன். வ மின் ஃபவ்க்கீ நூரன். வ மின் தஹ்த்தீ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் ஷிமாலீ நூரன். வ மிம் பைனி யதைய்ய நூரன். வ மின் கல்ஃபீ நூரன். வஜ்அல் ஃபீ நஃப்ஸீ நூரன். வ அஃழிம் லீ நூரா” என்று வேண்டினார்கள்.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவிப்புலனிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்குப் பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் மனத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு ஒளியை வலிமையாக்குவாயாக!).

ஷரீக் பின் அபீநமிர் வழி அறிவிப்பில், “நான் ஓர் இரவில் மைமூனா (ரலி) இல்லத்தில் உறங்கினேன். அந்த இரவில் நபி (ஸல்) மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களது இரவுத் தொழுகை எவ்வாறு உள்ளது என்பதை நோட்டமிடுவதற்காகவே (நான் அவர்களது இல்லத்தில் உறங்கினேன்). அப்போது நபி (ஸல்) தம் வீட்டாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கினார்கள்” என்றும் “பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள்; பல் துலக்கினார்கள்” எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.