அத்தியாயம்: 16, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2591

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ ‏ ‏يَأْتِيَ أَهْلَهُ ‏ ‏قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّوْرِيِّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏شُعْبَةَ ‏ ‏لَيْسَ فِي حَدِيثِهِ ذِكْرُ بِاسْمِ اللَّهِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏الثَّوْرِيِّ ‏ ‏بِاسْمِ اللَّهِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏مَنْصُورٌ ‏ ‏أُرَاهُ قَالَ ‏ ‏بِاسْمِ اللَّهِ

“உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விழையும்போது “பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’ (அல்லாஹ்வின் பெயரால்; இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!”) என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்குக் குழந்தை விதிக்கப்பட்டால், அக்குழந்தைக்கு ஒரு போதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் “பிஸ்மில்லாஹி (அல்லாஹ்வின் பெயரால்’) எனும் குறிப்பு இடம்பெறவில்லை. ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் ‘பிஸ்மில்லாஹ்’ இடம்பெற்றுள்ளது; மன்ஸூர் (ரஹ்) அறிவிப்பில் “பிஸ்மில்லாஹ் எனக் கூறியதாகவே கருதுகின்றேன்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2590

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ ثَلَاثًا فَتَزَوَّجَهَا رَجُلٌ ثُمَّ طَلَّقَهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا فَأَرَادَ زَوْجُهَا الْأَوَّلُ أَنْ يَتَزَوَّجَهَا فَسُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏لَا حَتَّى يَذُوقَ الْآخِرُ مِنْ ‏ ‏عُسَيْلَتِهَا ‏ ‏مَا ذَاقَ الْأَوَّلُ ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْقَاسِمُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ

ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவளை இன்னொருவர் மணந்துகொண்டார். பின்னர் அவளிடம் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவரும் தலாக் சொல்லிவிட்டார். இந்நிலையில் அவளை அவளுடைய முந்தைய கணவர் மணமுடித்துக்கொள்ள விரும்பினார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை; முதல் கணவர் (இல்லற இன்பம்) அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாவது கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்காத வரையில் அது முடியாது” என்று கூறிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2589

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُئِلَ عَنْ الْمَرْأَةِ يَتَزَوَّجُهَا الرَّجُلُ فَيُطَلِّقُهَا فَتَتَزَوَّجُ رَجُلًا فَيُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا أَتَحِلُّ لِزَوْجِهَا الْأَوَّلِ قَالَ ‏ ‏لَا حَتَّى يَذُوقَ عُسَيْلَتَهَا ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒருவரைப் பெண்ணொருத்தி மணந்திருந்தாள். பின்னர் அவர் அவளை மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே, அவள் வேறொருவரை மணந்துகொண்டாள். அக்கணவன் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளை மணவிலக்குச் செய்துவிடுகிறான். இந்நிலையில் அவள் முந்தைய கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆவாளா?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “இ(ரண்டாவது கண)வர் அவளிடம் இன்பத்தை அனுபவிக்காதவரை அது முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2588

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِحَرْمَلَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ : ‏

‏أَنَّ ‏ ‏رِفَاعَةَ الْقُرَظِيَّ ‏ ‏طَلَّقَ امْرَأَتَهُ ‏ ‏فَبَتَّ طَلَاقَهَا ‏ ‏فَتَزَوَّجَتْ بَعْدَهُ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ ‏ ‏فَجَاءَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا كَانَتْ تَحْتَ ‏ ‏رِفَاعَةَ ‏ ‏فَطَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ فَتَزَوَّجْتُ بَعْدَهُ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ ‏ ‏وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ إِلَّا مِثْلُ ‏ ‏الْهُدْبَةِ ‏ ‏وَأَخَذَتْ بِهُدْبَةٍ مِنْ جِلْبَابِهَا قَالَ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَاحِكًا فَقَالَ لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى ‏ ‏رِفَاعَةَ ‏ ‏لَا حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ وَتَذُوقِي عُسَيْلَتَهُ ‏ ‏وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ ‏ ‏جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَخَالِدُ بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ ‏ ‏جَالِسٌ بِبَابِ الْحُجْرَةِ لَمْ يُؤْذَنْ لَهُ قَالَ فَطَفِقَ ‏ ‏خَالِدٌ ‏ ‏يُنَادِي ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏أَلَا تَزْجُرُ هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ ‏ ‏رِفَاعَةَ الْقُرَظِيَّ ‏ ‏طَلَّقَ امْرَأَتَهُ فَتَزَوَّجَهَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ ‏ ‏فَجَاءَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏رِفَاعَةَ ‏ ‏طَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يُونُسَ

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) தம் மனைவியை முழுமையாக மண விலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் (ரலி) அவர்களை அவர் மணமுடித்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் என்பாரை மணந்துகொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த மேலங்கியின் குஞ்சத்தைப் போன்றதுதான்” என்று கூறித் தமது மேலங்கியின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தார்கள். பிறகு, “நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (இரண்டாவது கணவர்) உன்னிடம் (இல்லற) இன்பத்தைச் சுவைக்காத வரையிலும், நீ அவரிடம் (இல்லற) இன்பத்தைச் சுவைக்காத வரையிலும் அது முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அப்போது (என் தந்தை) அபூபக்ரு அஸ்ஸித்தீக் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தார்கள். காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) தமக்கு உள்ளே வர அனுமதி கிடைக்காததால் அறையின் வாசலில் உட்கார்ந்திருந்தார். அபூபக்ரு (ரலி) அவர்களை காலித் (ரலி) விளித்து, “அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் (நாணமில்லாமல்) பகிரங்கமாக இப்படிப் பேசக் கூடாதென நீங்கள் இப்பெண்ணைக் கண்டிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “ரிஃபாஆ அல்குறழீ (ரலி) தம் மனைவியை மணவிலக்குச் செய்து விட்டார்கள். பின்னர் அவரை அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் மணந்துகொண்டார். இந்நிலையில் அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ரிஃபாஆ என்னை மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார் …” என்று கூறியதாக ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 16, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2587

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏جَاءَتْ امْرَأَةُ ‏ ‏رِفَاعَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ كُنْتُ عِنْدَ ‏ ‏رِفَاعَةَ ‏ ‏فَطَلَّقَنِي ‏ ‏فَبَتَّ طَلَاقِي ‏ ‏فَتَزَوَّجْتُ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ ‏ ‏وَإِنَّ مَا مَعَهُ مِثْلُ ‏ ‏هُدْبَةِ الثَّوْبِ ‏ ‏فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى ‏ ‏رِفَاعَةَ ‏ ‏لَا حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ قَالَتْ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏عِنْدَهُ ‏ ‏وَخَالِدٌ ‏ ‏بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤْذَنَ لَهُ فَنَادَى يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏أَلَا تَسْمَعُ هَذِهِ مَا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் மனைவியாக இருந்த பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் ரிஃபாஆவிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை முழுமையாக மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, நான் (அவருக்குப் பிறகு) அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் அவர்களை மணமுடித்துக்கொண்டேன். அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது (எனது மேலங்கியின்) இந்தக் குஞ்சத்தைப் போன்றதுதான்” என்று கூறினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தார்கள். பின்னர், “நீ (உன் முதல் கணவர்) ரிஃபாஆவிடம் திரும்பிச்செல்ல விரும்புகின்றாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) அவரிடம் (இல்லற) இன்பத்தைச் சுவைக்காத வரையிலும், அவர் உன்னிடம் (இல்லற) இன்பத்தைச் சுவைக்காத வரையிலும் அது முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தார்கள். வீட்டு வாசலில் (காத்து) இருந்த காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), “அபூபக்ரே! இந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வெட்கமின்றி) வெளிப்படையாக விவரித்துக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா? (நீங்கள் இவரைத் தடுக்கக் கூடாதா?” என்று கேட்டார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

முழுமையான மணவிலக்கு (முத்தலாக்) பற்றிய சுருக்கமான விளக்கம்:

 அறியாமைக் காலத்தில் அற்பக் காரணங்களுக்காகக்கூட ஆண்கள் தங்கள் மனைவியரை மணவிலக்குச் செய்துவிட்டு, வேறொருத்தியை மணப்பதும் இவள் சரியில்லை என்று முதலாமவளை மீண்டும் மணப்பதும் மறுபடி சின்னஞ் சிறு காரணம் சொல்லி முதல் மனைவியை இரண்டாவது முறையாக மணவிலக்குச் செய்துவிட்டு மூன்றாமவளைத் தேடுவதும் இயல்பான வாடிக்கையாக இருந்தது. இந்தக் கேலிக் கூத்தைத் தடுத்து முறைப்படுத்துவதற்காக ‘முத்தலாக் – முழுமையான மணவிலக்கு’ எனும் முறையைக் கடுமையான நிபந்தனைகளுடன் இஸ்லாம் வரையறுத்தது.

((பல சமரசங்களுக்குப் பின்னரும் இணைந்து வாழ முடியாத மனைவியை, மாதவிடாய் இல்லாத, உடலுறவு கொள்ளாத நிலையில் மூன்று தலாக்குகளுள் முதலாவது தலாக்கை மனைவிக்குக் கணவன் அளிக்க வேண்டும். முதலாவது மணவிலக்கின் முடிவு என்பது மனைவியின் மூன்று மாதவிடாய்க் காலமாகும். இதற்கு, ‘காத்திருப்புக் காலம் (இத்தா)’ என்று சொல்லப்படும். இத்தாக் காலத்திலும் கணவனின் பராமரிப்பில்தான் மனைவி இருக்க வேண்டும். முதலாவது இத்தாக் கால கட்டத்தில் இருவருக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டுவிட்டால் மனைவியின் இத்தாவை முறித்துவிட்டு, இருவரும் கணவன் – மனைவியாக வாழ்க்கையைத் தொடரலாம்))

முதலாவது இத்தாக் காலமான மூன்று மாதவிடாய்கள் கழிந்துவிட்டாலுங்கூட இருவரும் கூடி வாழ விரும்பினால் இரண்டாவது தலாக்கைக் கணவன் மொழியாமல் இருவரும் பழையபடி கணவன் – மனைவியாக வாழலாம்.

முதலாவது தலாக்குக்குப் பின்னரும் மனக்கசப்பு மாறாவிட்டால், மனைவிக்கு இரண்டாவது தலாக் அளிப்பதற்குக் கணவனுக்கு உரிமையுண்டு. இரண்டாவது தலாக்குக்கு, மேற்காணும் இரு அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள முதல் தலாக்கின் நடைமுறைகள் அனைத்தும் பொருந்தும். இரண்டாவது தலாக்கின் காத்திருப்புக் காலத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கு நீங்கி, இணக்கம் ஏற்பட்டால் இரண்டாவது இத்தாவையும் முறித்துவிட்டுக் கணவன், மனைவியை மீட்டுக் கொள்ளலாம். (அல் குர்ஆன் 2:228).

இவ்வளவுக்குப் பின்னரும் மனைவியைக் கணவனுக்குப் பிடிக்காவிட்டால் ஆழ்ந்து சிந்தித்து முழுமையான மணவிலக்கான மூன்றாவது தலாக்கை மொழியவேண்டும். ஏனெனில், முழுமையான மணவிலக்கான மூன்றாவது தலாக் கூறப்பட்டுவிட்டால் இருவருக்குமிடையில் பிரிவு ஏற்பட்டு, கணவன் – மனைவி உறவு நீங்கிவிடும்.

அதற்குப் பின்னரும் பழைய கணவர் அதே பெண்ணை மனைவியாக அடைய விரும்பினால், அப்பெண் இன்னொருவருக்கு மனைவியாகி, அவரோடு இல்லற உறவு கொண்டு, குடும்பம் நடத்தி, பின்னர் அவரும் அப்பெண்ணுக்கு முழுமையான மணவிலக்கு அளித்து, காத்திருப்புக் காலங்களை அப்பெண் கழித்த பின்னர் பழைய கணவரை அடைய விரும்பினால் பழைய தம்பதிகள் இருவரும் புதிதாகத் திருமணம் செய்து இணைந்து வாழலாம் (அல் குர்ஆன் 2:230).

ஆண்களுக்கு மனைவியரைத் தலாக் செய்யும் உரிமை உள்ளதைப் போன்று, தம் கணவரிடமிருந்து ‘குல்உ’ மூலம் விடுதலை பெறும் உரிமை பெண்களுக்கும் உண்டு (அல் குர்ஆன் 2:229).

முழுமையாக மணவிலக்கு அளிக்கப்பட்ட முன்னாள் மனைவியை அதே கணவன் மீண்டும் அடைய வேண்டுமாயின், இன்னொருவரின் மனைவியாக அவள் வாழ்ந்துவிட்டு, இரண்டாவது கணவனிடமிருந்து முறைப்படி முழுமையான மணவிலக்குப் பெற்று, பழைய கணவருடன் இணைந்து வாழ ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறே, முன்னாள் கணவனை விரும்பி அடைவதற்குத் தலாக் (அ) குல்உ மூலம் விடுதலை பெற்ற பெண் ஏற்க வேண்டிய சமரசங்களும் கட்டாயமாகும். அதாவது, இன்னொருவரின் மனைவியாக அவள் வாழ்ந்துவிட்டு, இரண்டாவது கணவனிடமிருந்து முறைப்படி முழுமையான மணவிலக்குப் பெற்றால்தான் பழைய கணவருடன் இணைந்து வாழ முடியும். அதைத்தான் மேற்காணும் 2587ஆவது ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

அத்தியாயம்: 16, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2586

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏زِيَادَ بْنَ سَعْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ثَابِتًا الْأَعْرَجَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏شَرُّ الطَّعَامِ طَعَامُ ‏ ‏الْوَلِيمَةِ ‏ ‏يُمْنَعُهَا مَنْ يَأْتِيهَا ‏ ‏وَيُدْعَى إِلَيْهَا مَنْ ‏ ‏يَأْبَاهَا وَمَنْ لَمْ يُجِبْ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ

“(பசியுடன்) வருபவர்கள் தடுக்கப்பட்டு, (அழைப்பை) அலட்சியப்படுத்துபவர்கள் அழைக்கப்படும் மணவிருந்து உணவே, கெட்ட உணவாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2585

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ كَانَ يَقُولُ : ‏

‏بِئْسَ الطَّعَامُ طَعَامُ ‏ ‏الْوَلِيمَةِ ‏ ‏يُدْعَى إِلَيْهِ الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْمَسَاكِينُ فَمَنْ لَمْ يَأْتِ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِلزُّهْرِيِّ ‏ ‏يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏كَيْفَ هَذَا الْحَدِيثُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْأَغْنِيَاءِ فَضَحِكَ فَقَالَ لَيْسَ هُوَ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْأَغْنِيَاءِ قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏وَكَانَ أَبِي غَنِيًّا فَأَفْزَعَنِي هَذَا الْحَدِيثُ حِينَ سَمِعْتُ بِهِ فَسَأَلْتُ عَنْهُ ‏ ‏الزُّهْرِيَّ ‏ ‏فَقَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏شَرُّ الطَّعَامِ طَعَامُ ‏ ‏الْوَلِيمَةِ ‏ ‏ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏ح ‏ ‏وَعَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏شَرُّ الطَّعَامِ طَعَامُ ‏ ‏الْوَلِيمَةِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏نَحْوَ ذَلِكَ

ஏழைகளை விடுத்து, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து உணவே, கெட்ட உணவாகும். (அழைப்பை ஏற்றபின்) விருந்துக்குச் செல்லாதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) கூறியதாவது:

நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் “அபூபக்ரு அவர்களே! செல்வந்தர்கள் (அழைக்கப்படும்) உணவே உணவுகளில் தீயதாகும் எனும் இந்த ஹதீஸ் எப்படி (சரிதானா)?” என்று கேட்டேன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்துவிட்டு,“அந்த ஹதீஸ், ‘செல்வந்தர்களின் உணவே உணவுகளில் மிகத் தீயதாகும்’ என்பதாக இல்லை” என்றார்கள்.

என் தந்தையும் செல்வந்தராயிருந்ததால் அந்த ஹதீஸைக் கேட்டு நான் பதற்றமடைந்திருந்தேன். எனவே, ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் அந்த ஹதீஸைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அப்துர் ரஹ்மான் அல்அஃரஜ் (ரஹ்) தம்மிடம் கூறினார்கள் என  மேற்கண்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே (அதாவது எழைகளை விடுத்து, செல்வர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து உணவுதான் கெட்ட உணவாகும் என்று) அறிவித்தார்கள்.

அத்தியாயம்: 16, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2584

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دُعِيَ أَحَدُكُمْ فَلْيُجِبْ فَإِنْ كَانَ صَائِمًا فَلْيُصَلِّ وَإِنْ كَانَ مُفْطِرًا فَلْيَطْعَمْ

“உங்களில் ஒருவர் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளட்டும். அவர் நோன்பு நோற்றிருந்தால் (அழைத்தவருக்காகப்) பிரார்த்திக்கட்டும்; நோன்பு நோற்காமலிருந்தால் உண்ணட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2583

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ فَلْيُجِبْ فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ ‏


وَلَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏إِلَى طَعَامٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ

“உங்களில் ஒருவர் உணவு உண்ண அழைக்கப்பட்டால், ஏற்றுக்கொள்ளட்டும். (அங்குச் சென்று) விரும்பினால் உண்ணட்டும்; இல்லையேல் (உண்பதைத்) தவிர்த்துக்கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில் “உணவு உண்ண” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 16, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2582

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا دُعِيتُمْ إِلَى ‏ ‏كُرَاعٍ ‏ ‏فَأَجِيبُوا

“ஆட்டுக் கால் (பாயா) விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டாலும், ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)