அத்தியாயம்: 17, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2656

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ بْنُ سَوَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ : ‏

‏كَانَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تِسْعُ نِسْوَةٍ فَكَانَ إِذَا قَسَمَ بَيْنَهُنَّ لَا يَنْتَهِي إِلَى الْمَرْأَةِ الْأُولَى إِلَّا فِي تِسْعٍ فَكُنَّ يَجْتَمِعْنَ كُلَّ لَيْلَةٍ فِي بَيْتِ الَّتِي يَأْتِيهَا فَكَانَ فِي بَيْتِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَجَاءَتْ ‏ ‏زَيْنَبُ ‏ ‏فَمَدَّ يَدَهُ إِلَيْهَا فَقَالَتْ هَذِهِ ‏ ‏زَيْنَبُ ‏ ‏فَكَفَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدَهُ فَتَقَاوَلَتَا حَتَّى ‏ ‏اسْتَخَبَتَا وَأُقِيمَتْ الصَّلَاةُ فَمَرَّ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏عَلَى ذَلِكَ فَسَمِعَ أَصْوَاتَهُمَا فَقَالَ اخْرُجْ يَا رَسُولَ اللَّهِ إِلَى الصَّلَاةِ وَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ فَخَرَجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏الْآنَ يَقْضِي النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاتَهُ فَيَجِيءُ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَيَفْعَلُ بِي وَيَفْعَلُ فَلَمَّا قَضَى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاتَهُ أَتَاهَا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَقَالَ لَهَا قَوْلًا شَدِيدًا وَقَالَ أَتَصْنَعِينَ هَذَا

நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். அவர்களிடையே (இரவுகளைப்) பங்கிட்டு (ஒவ்வொருவரிடமும் ஓர் இரவு வீதம் தங்கிவந்ததால்), முதலாவது மனைவியிடம் ஒன்பது நாட்களுக்குப் பிறகே நபியவர்கள் திரும்பச் செல்வார்கள். நபியவர்கள் தங்குபவரின் வீட்டில் எல்லாத் துணைவியரும் ஒவ்வோர் இரவிலும் ஒன்றுகூடுவர். (ஓர் இரவில்) ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் நபி (ஸல்) இருந்தபோது, ஸைனப் (ரலி) அங்கு வந்திருந்தார்கள். நபி (ஸல்) (ஆயிஷா என்று நினைத்து) ஸைனபிடம் கையை நீட்டினார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி), “அவர் ஸைனப்” என்றார்கள். உடனே நபி (ஸல்) தமது கையை விலக்கிக்கொண்டார்கள். இதனால் ஆயிஷா (ரலி) அவர்களும் ஸைனப் (ரலி) அவர்களும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுங்கூட அவ்விருவரும் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்றுகொண்டிருந்த அபூபக்ரு (ரலி) அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டு (கோபமுற்று, நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அவர்களின் வாயில் மண்ணைத் திணித்துவிட்டு, நீங்கள் தொழச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (தொழச்) சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி), “இப்போது நபி (ஸல்) தொழுது முடித்ததும், (என் தந்தை) அபூபக்ரு (ரலி) வருவார்கள்; என்னைக் கடுமையாகக் கண்டிப்பார்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) தொழுது முடித்ததும், அபூபக்ரு (ரலி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து கடுஞ் சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும், “இப்படித்தான் நடந்து கொள்வாயா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2655

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏وَخَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ : ‏

‏مِنْ السُّنَّةِ أَنْ يُقِيمَ عِنْدَ الْبِكْرِ سَبْعًا ‏


قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏وَلَوْ شِئْتُ قُلْتُ رَفَعَهُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒருவர் (தாம் மணந்த) கன்னிப் பெண்ணிடம் (தொடர்ச்சியாக) ஏழு நாள்கள் தங்குவது நபிவழியாகும்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

“இதை அனஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்கள் என்று நான் சொல்ல நாடி, அவ்வாறு சொன்னால் அது மிகையில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2654

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ : ‏

‏إِذَا تَزَوَّجَ الْبِكْرَ عَلَى ‏ ‏الثَّيِّبِ ‏ ‏أَقَامَ عِنْدَهَا سَبْعًا وَإِذَا تَزَوَّجَ ‏ ‏الثَّيِّبَ ‏ ‏عَلَى الْبِكْرِ أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا ‏


قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏وَلَوْ قُلْتُ إِنَّهُ رَفَعَهُ لَصَدَقْتُ وَلَكِنَّهُ قَالَ السُّنَّةُ كَذَلِكَ

ஒருவர் கன்னி கழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, மற்றொரு கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால், (முதலில்) கன்னிப் பெண்ணிடம் ஏழு நாள்கள் தங்குவார். ஒருவர் கன்னிப் பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னி கழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னி கழிந்த பெண்ணிடம் மூன்று நாள்கள் தங்குவார்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

“இதை அனஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்கள் என்று நான் சொல்லலாம். ஆயினும், அனஸ் (ரலி), ‘இதுவே நபிவழியாகும்’ என்று (மட்டுமே) கூறினார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் பின் மஹ்ரான் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2653

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ يَعْنِي ابْنَ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ بْنِ أَيْمَنَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏ذَكَرَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَزَوَّجَهَا وَذَكَرَ أَشْيَاءَ هَذَا فِيهِ قَالَ ‏ ‏إِنْ شِئْتِ أَنْ أُسَبِّعَ لَكِ وَأُسَبِّعَ لِنِسَائِي وَإِنْ ‏ ‏سَبَّعْتُ ‏ ‏لَكِ سَبَّعْتُ لِنِسَائِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்தார்கள். (அப்போது) அவர்களிடம், “நீ விரும்பினால் நான் உன்னிடம் ஏழு நாள்கள் தங்குவேன்; (அதைப் போன்று) என்னுடைய மற்றத் துணைவியரிடமும் ஏழு நாள்கள் தங்குவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2652

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ تَزَوَّجَ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏فَدَخَلَ عَلَيْهَا فَأَرَادَ أَنْ يَخْرُجَ أَخَذَتْ بِثَوْبِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنْ شِئْتِ زِدْتُكِ وَحَاسَبْتُكِ بِهِ لِلْبِكْرِ سَبْعٌ وَلِلثَّيِّبِ ثَلَاثٌ ‏


و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو ضَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து, அவர்களுடன் தங்கியிருந்தார்கள். (மூன்று நாட்களுக்குப்) பின்னர் நபி (ஸல்) புறப்பட முற்பட்டபோது உம்மு ஸலமா (ரலி), நபி (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்(து இழுத்)தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ விரும்பினால் மேலும் சில நாள்கள் (உன்னுடன்) தங்குவேன். (ஆனால்,) அதை உனது கணக்கில் (கழித்து) வைத்துக்கொள்வேன். ஏழு நாள்கள் கன்னிப் பெண்ணுக்கும், மூன்று நாள்கள் கன்னி கழிந்த பெண்ணுக்கும் உரியவையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2651

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ تَزَوَّجَ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏وَأَصْبَحَتْ عِنْدَهُ قَالَ لَهَا ‏ ‏لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ ‏ ‏سَبَّعْتُ ‏ ‏عِنْدَكِ وَإِنْ شِئْتِ ثَلَّثْتُ ثُمَّ دُرْتُ قَالَتْ ثَلِّثْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டபோது, (மறு நாள்) காலையில் தம்முடன் இருந்த உம்மு ஸலமாவிடம், “(உன்னுடன் மூன்று நா:ள்கள் மட்டும் தங்குவதால்) உன் கணவரால் உனக்கு மதிப்புக் குறைவு என்பதில்லை. நீ விரும்பினால் உன்னிடம் ஏழு நாள்கள் தங்குவேன். நீ விரும்பினால் உன்னிடம் மூன்று நாள்கள் தங்கிவிட்டு, (மற்றத் துணைவியர்) ஒவ்வொருவரின் வீட்டுக்கும் செல்வேன்” என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஸலமா (ரலி), “என்னிடம் மூன்று நாள்கள் தங்கியிருங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக அப்துல் மலிக் பின் அபீபக்ரு பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2650

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا تَزَوَّجَ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا وَقَالَ ‏ ‏إِنَّهُ لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ ‏ ‏سَبَّعْتُ ‏ ‏لَكِ وَإِنْ سَبَّعْتُ لَكِ سَبَّعْتُ لِنِسَائِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை மணந்துகொண்டபோது, என்னுடன் மூன்று நாள்கள் தங்கினார்கள். அவர்கள் என்னிடம், “(உன்னுடன் மூன்று நாள்கள் மட்டும் தங்குவதால்) உன் கணவரால் உனக்கு மதிப்புக் குறைவு என்பதில்லை. நீ விரும்பினால் உன்னிடம் ஏழு நாள்கள் தங்குவேன். ஆனால், உன்னிடம் ஏழு நாள்கள் தங்கினால், என்னுடைய மற்ற மனைவியரிடமும் ஏழு நாள்கள் தங்குவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2649

‏و حَدَّثَنَاه ‏ ‏مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏دَخَلَ ‏ ‏قَائِفٌ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَاهِدٌ ‏ ‏وَأُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏وَزَيْدُ بْنُ حَارِثَةَ ‏ ‏مُضْطَجِعَانِ فَقَالَ ‏ ‏إِنَّ هَذِهِ الْأَقْدَامَ بَعْضُهَا مِنْ بَعْضٍ فَسُرَّ بِذَلِكَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَعْجَبَهُ وَأَخْبَرَ بِهِ ‏ ‏عَائِشَةَ ‏


و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏وَابْنُ جُرَيْجٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِهِمْ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏وَكَانَ ‏ ‏مُجَزِّزٌ ‏ ‏قَائِفًا

நபி (ஸல்) என் வீட்டிலிருந்தபோது, அங்க அடையாளங்களைக் கொண்டு உறவு முறையைக் கண்டறியும் நிபுணர் ஒருவர் வந்தார். அப்போது, உஸாமா பின் ஸைத் அவர்களும் (அவரின் தந்தை) ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அந்த நிபுணர் (இருவரின் பாதங்களையும் பார்த்து), ‘இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது’ என்று சொன்னார். அதனால் நபி (ஸல்) மகிழ்ச்சியடைந்து, அவரைக் கண்டு வியந்தார்கள். மேலும், அதை எனக்குத் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) வழி அறிவிப்பில் “முஜஸ்ஸிஸ் என்பவர், அங்க அடையாளங்களைக் கொண்டு உறவு முறையைக் கண்டறியும் நிபுணராக இருந்தார்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

தந்தை ஸைத் (ரலி) நன்கு சிவந்த நிறமுடையவராகவும் மகன் உஸாமா (ரலி) நிறம் குறைந்தவராகவும் இருந்ததால், மக்கா வாழ் குரைஷியர் உஸாமாவின் பிறப்பைக் குறித்து இளக்காரமாகப் பேசிவந்தனர். அதனால் நபி (ஸல்) வேதனை அடைந்திருந்தார்கள். முஜஸ்ஸிஸின் தெளிவான கூற்றால் நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை விலகி, மகிழ்ச்சி உண்டானது! பனூ முத்லிஜ் குலத்தைச் சேர்ந்த முஜஸ்ஸிஸ் என்பார், சாயல் மூலம் உறவு முறை அறியும் நிபுணர் என்பதை மக்கத்தவர் அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அத்தியாயம்: 17, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2648

‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ يَوْمٍ مَسْرُورًا فَقَالَ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَلَمْ تَرَيْ أَنَّ ‏ ‏مُجَزِّزًا الْمُدْلِجِيَّ ‏ ‏دَخَلَ عَلَيَّ فَرَأَى ‏ ‏أُسَامَةَ ‏ ‏وَزَيْدًا ‏ ‏وَعَلَيْهِمَا ‏ ‏قَطِيفَةٌ ‏ ‏قَدْ غَطَّيَا رُءُوسَهُمَا وَبَدَتْ أَقْدَامُهُمَا فَقَالَ إِنَّ هَذِهِ الْأَقْدَامَ بَعْضُهَا مِنْ بَعْضٍ

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்தார்கள். அப்போது “ஆயிஷா! ‘பனூ முத்லிஜ்’ குலத்தைச் சேர்ந்த முஜஸ்ஸிஸ் என்பவர் என்னிடம் வந்தார். அப்போது உஸாமாவும் (அவருடைய தந்தை) ஸைதும் ஒரு துணியைப் போர்த்தி(க்கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தம் தலைகளை மூடியிருந்தனர்; (ஆனால்) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் ‘இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது’ என்று சொன்னார்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2647

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ : ‏

‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ عَلَيَّ مَسْرُورًا ‏ ‏تَبْرُقُ ‏ ‏أَسَارِيرُ وَجْهِهِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَلَمْ تَرَيْ أَنَّ ‏ ‏مُجَزِّزًا ‏ ‏نَظَرَ ‏ ‏آنِفًا ‏ ‏إِلَى ‏ ‏زَيْدِ بْنِ حَارِثَةَ ‏ ‏وَأُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏فَقَالَ إِنَّ بَعْضَ هَذِهِ الْأَقْدَامِ لَمِنْ بَعْضٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) தம் நெற்றிக் கோடுகள் ஒளிர்ந்த வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்தார்கள்! அப்போது, “உனக்குத் தெரியுமா? சற்று முன் முஜஸ்ஸிஸ் என்பார், ஸைத் பின் ஹாரிஸா, (அவருடைய மகன்) உஸாமா பின் ஸைது (ஆகிய) இருவரின் பாதங்களையும் (அவ்விருவரும் படுத்திருந்தபோது) பார்த்துவிட்டு, ‘இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது‘ என்று சொன்னார்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

முஜஸ்ஸிஸ் என்பவர், அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை-பிள்ளையைக் கண்டறியும் நிபுணர் ஆவார்.