அத்தியாயம்: 22, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2929

‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏زِيَادُ بْنُ سَعْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏هِلَالَ بْنَ أُسَامَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُبَاعُ ‏ ‏فَضْلُ ‏ ‏الْمَاءِ لِيُبَاعَ بِهِ الْكَلَأُ

“தேவைக்குப் போக எஞ்சியுள்ள நீரை விற்காதீர்கள். (அவ்வாறு விற்பது) சுற்றியுள்ள புற்பூண்டுகளை விற்றதாக ஆகிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2928

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِحَرْمَلَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَمْنَعُوا ‏ ‏فَضْلَ ‏ ‏الْمَاءِ لِتَمْنَعُوا بِهِ الْكَلَأَ

“தேவைக்குப் போக எஞ்சியுள்ள நீரைத் தடுத்து வைக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால்) அப்பகுதியில் எஞ்சியுள்ள புற்பூண்டுகளை (வளரவிடாமல்) தடுத்தவர்களாக ஆகிவிடுவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்): கூறினார்கள்.

.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2927

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يُمْنَعُ ‏ ‏فَضْلُ ‏ ‏الْمَاءِ لِيُمْنَعَ بِهِ الْكَلَأُ

“தேவைக்குப் போக எஞ்சியுள்ள நீரைத் தடுத்து வைக்கக் கூடாது. (அது அப்பகுதியின்) புற்பூண்டுகளை (வளரவிடாமல்) தடுத்ததாகிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2926

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ : ‏

نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ ‏ ‏ضِرَابِ الْجَمَلِ ‏ ‏وَعَنْ بَيْعِ الْمَاءِ وَالْأَرْضِ لِتُحْرَثَ فَعَنْ ذَلِكَ نَهَى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஆண் ஒட்டகத்தை (பெண் ஒட்டகம் கருத்தரிப்பதற்காக) வாடகைக்கு விடுவது; நீரையும் நிலத்தையும் விவசாயம் செய்வதற்காகக் குத்தகைக்கு விடுவது ஆகிய இரண்டுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2925

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ : ‏

نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ ‏ ‏فَضْلِ ‏ ‏الْمَاءِ

தேவைக்கு மேல் எஞ்சியுள்ள நீரை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2924

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ وَإِذَا ‏ ‏أُتْبِعَ ‏ ‏أَحَدُكُمْ عَلَى ‏ ‏مَلِيءٍ ‏ ‏فَلْيَتْبَعْ


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“வசதியுள்ளவர், கடனை அடைப்பதில் தாமதிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் வசதியுள்ள(மற்றொரு)வர் மீது மாற்றிவிடப்பட்டால், அவர் அதை ஏற்கட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2923

حَدَّثَنَا ‏ ‏أَبُو الْهَيْثَمِ خَالِدُ بْنُ خِدَاشِ بْنِ عَجْلَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ : ‏

أَنَّ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏طَلَبَ ‏ ‏غَرِيمًا ‏ ‏لَهُ فَتَوَارَى عَنْهُ ثُمَّ وَجَدَهُ فَقَالَ إِنِّي مُعْسِرٌ فَقَالَ ‏ ‏آللَّهِ قَالَ ‏ ‏آللَّهِ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ ‏ ‏كُرَبِ ‏ ‏يَوْمِ الْقِيَامَةِ ‏ ‏فَلْيُنَفِّسْ ‏ ‏عَنْ مُعْسِرٍ أَوْ ‏ ‏يَضَعْ ‏ ‏عَنْهُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏جَرِيرُ بْنُ حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

என் தந்தை அபூகத்தாதா (ரலி), தமக்குக் கடனைத் திருப்பித் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்” என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி), “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்” என்றார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று அபூகத்தாதா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2922

‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ ‏ ‏قَالَ ‏ ‏مَنْصُورٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِبْرَاهِيمُ وَهُوَ ابْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ كَانَ رَجُلٌ يُدَايِنُ النَّاسَ فَكَانَ يَقُولُ لِفَتَاهُ إِذَا أَتَيْتَ مُعْسِرًا ‏ ‏فَتَجَاوَزْ ‏ ‏عَنْهُ لَعَلَّ اللَّهَ ‏ ‏يَتَجَاوَزُ ‏ ‏عَنَّا فَلَقِيَ اللَّهَ ‏ ‏فَتَجَاوَزَ ‏ ‏عَنْهُ


حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بِمِثْلِهِ

ஒருவர் (முற்காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்லும்) தம் ஊழியரிடம், “சிரமப்படுபவரிடம் நீர் சென்றால் (அவரைக் கண்டுகொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து)விடு. அல்லாஹ்வும் நம்மை(க் கண்டுகொள்ளாமல்) மன்னித்துவிடக்கூடும்” என்று சொல்லி வந்தார். அவர் (இறந்த பின்) அல்லாஹ்வைச் சந்தித்தபோது (அவருடைய பிழைகளைப் பொறுத்து) அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2921

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُوسِبَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ فَلَمْ يُوجَدْ لَهُ مِنْ الْخَيْرِ شَيْءٌ إِلَّا أَنَّهُ كَانَ يُخَالِطُ النَّاسَ وَكَانَ مُوسِرًا فَكَانَ يَأْمُرُ غِلْمَانَهُ أَنْ ‏ ‏يَتَجَاوَزُوا ‏ ‏عَنْ الْمُعْسِرِ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏نَحْنُ أَحَقُّ بِذَلِكَ مِنْهُ ‏ ‏تَجَاوَزُوا ‏ ‏عَنْهُ

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவர் (இறந்த பின்) விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் (அவரது வினைச் சீட்டில், ஒன்றைத் தவிர வேறு) எந்த நற்செயலும் காணப்படவில்லை. அவர் மக்களுடன் கலந்துறவாடுபவராய் இருந்தார். அவர் வசதியுடையவராக இருந்தார். தம் பணியாட்களிடம், சிரமப்படுவோரின் கடனைத் தள்ளுபடி செய்துவிடுமாறு கூறிவந்தார். அல்லாஹ், “இ(வ்வாறு தள்ளுபடி செய்வ)தற்கு அவரைவிட நமக்கே அதிகத் தகுதியுள்ளது. (எனவே,) அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல் அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2920

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ : ‏

أُتِيَ اللَّهُ بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللَّهُ مَالًا فَقَالَ لَهُ مَاذَا عَمِلْتَ فِي الدُّنْيَا قَالَ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا قَالَ يَا رَبِّ آتَيْتَنِي مَالَكَ فَكُنْتُ أُبَايِعُ النَّاسَ وَكَانَ مِنْ خُلُقِي ‏ ‏الْجَوَازُ ‏ ‏فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى الْمُوسِرِ ‏ ‏وَأُنْظِرُ ‏ ‏الْمُعْسِرَ فَقَالَ اللَّهُ ‏ ‏أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ ‏ ‏تَجَاوَزُوا ‏ ‏عَنْ عَبْدِي ‏


فَقَالَ ‏ ‏عُقْبَةُ بْنُ عَامِرٍ الْجُهَنِيُّ ‏ ‏وَأَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ ‏ ‏هَكَذَا سَمِعْنَاهُ مِنْ ‏ ‏فِي رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், “உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்டான். அல்லாஹ்விடம் எவரும் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது. எனவே அந்த அடியார், “இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்துகொள்வேன்; சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ், “இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)


குறிப்பு :

உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் அல்அன்ஸாரி (ரலி) அவர்களும், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நாங்கள் செவியுற்றோம்” என்று கூறினர்.