அத்தியாயம்: 32, பாடம்: 49, ஹதீஸ் எண்: 3382

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تِسْعَ عَشْرَةَ غَزْوَةً – قَالَ جَابِرٌ – لَمْ أَشْهَدْ بَدْرًا وَلاَ أُحُدًا مَنَعَنِي أَبِي فَلَمَّا قُتِلَ عَبْدُ اللَّهِ يَوْمَ أُحُدٍ لَمْ أَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ قَطُّ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்தொன்பது அறப்போர்களில் கலந்துகொண்டேன். நான் பத்ருப் போரிலும் உஹுதுப் போரிலும் கலந்துகொள்ளவில்லை. (அப்போருக்குச் செல்லவிடாமல்) என் தந்தை என்னைத் தடுத்துவிட்டார்கள்.

(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்டுவிட்ட பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஒருபோதும் எந்தப் போரிலும் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 49, ஹதீஸ் எண்: 3381

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، سَمِعَهُ مِنْهُ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَزَا تِسْعَ عَشْرَةَ غَزْوَةً وَحَجَّ بَعْدَ مَا هَاجَرَ حَجَّةً لَمْ يَحُجَّ غَيْرَهَا حَجَّةَ الْوَدَاعِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் நாடு துறந்து (மதீனாவுக்குச்) சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள். ‘விடைபெறும் ஹஜ்’ எனும் அந்த ஹஜ்ஜைத் தவிர வேறெந்த ஹஜ்ஜையும் அவர்கள் செய்யவில்லை.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 49, ஹதீஸ் எண்: 3380

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ :‏

خَرَجَ يَسْتَسْقِي بِالنَّاسِ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ اسْتَسْقَى قَالَ فَلَقِيتُ يَوْمَئِذٍ زَيْدَ بْنَ أَرْقَمَ – وَقَالَ – لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ غَيْرُ رَجُلٍ أَوْ بَيْنِي وَبَيْنَهُ رَجُلٌ – قَالَ – فَقُلْتُ لَهُ كَمْ غَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ تِسْعَ عَشْرَةَ فَقُلْتُ كَمْ غَزَوْتَ أَنْتَ مَعَهُ قَالَ سَبْعَ عَشْرَةَ غَزْوَةً – قَالَ – فَقُلْتُ فَمَا أَوَّلُ غَزْوَةٍ غَزَاهَا قَالَ ذَاتُ الْعُسَيْرِ أَوِ الْعُشَيْرِ ‏.‏

அப்துல்லாஹ் பின் யஸீத் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக மக்களுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு மழை வேண்டிப் பிரார்த்தித்தார்.

அப்போது நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒருவர் மட்டுமே இருந்தார். அப்போது நான் ஸைத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கலந்துகொண்ட போர்கள் எத்தனை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பத்தொன்பது“ என விடையளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?” என்று வினவியபோது, “பதினேழு“ என்றார்கள். “அவர்கள் கலந்துகொண்ட முதல் போர் எது?” என்று கேட்டதற்கு “தாத்துல் உஸைர் (அ) உஷைர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் (ரஹ்)


குறிப்பு :

இப்னு அஸ்ஸுபைர் (ரலி) ஆட்சியின் போது, அப்துல்லாஹ் பின் யஸீத் கூஃபாவின் ஆளுநராக இருந்தர்.

அத்தியாயம்: 32, பாடம்: 48, ஹதீஸ் எண்: 3379

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامٍ، عَنْ حَفْصَةَ، بِنْتِ سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، قَالَتْ :‏

غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ أَخْلُفُهُمْ فِي رِحَالِهِمْ فَأَصْنَعُ لَهُمُ الطَّعَامَ وَأُدَاوِي الْجَرْحَى وَأَقُومُ عَلَى الْمَرْضَى


وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். மக்கள் (போரிடச்) சென்ற பிறகு அவர்களின் இருப்பிடங்களில் அவர்களுக்கு உதவியாக இருந்து நான் செயல்படுவேன்; அவர்களுக்காக உணவு சமைப்பேன். போரில் காயமுற்றவர்களுக்கு மருந்திட்டுச் சிகிச்சை செய்வேன். நோயாளிகளைக் கவனித்துக்கொள்வேன்.

அறிவிப்பாளர் : ‏.‏உம்மு அத்திய்யா அல்அன்ஸாரிய்யா (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 48, ஹதீஸ் எண்: 3378

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، حَدَّثَنِي أَبِي قَالَ سَمِعْتُ قَيْسًا، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، – وَاللَّفْظُ لَهُ – قَالَ حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنِي قَيْسُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، قَالَ كَتَبَ نَجْدَةُ بْنُ عَامِرٍ إِلَى ابْنِ عَبَّاسٍ قَالَ فَشَهِدْتُ ابْنَ عَبَّاسٍ حِينَ قَرَأَ كِتَابَهُ وَحِينَ كَتَبَ جَوَابَهُ وَقَالَ ابْنُ عَبَّاسٍ :‏

وَاللَّهِ لَوْلاَ أَنْ أَرُدَّهُ عَنْ نَتْنٍ يَقَعُ فِيهِ مَا كَتَبْتُ إِلَيْهِ وَلاَ نُعْمَةَ عَيْنٍ قَالَ فَكَتَبَ إِلَيْهِ إِنَّكَ سَأَلْتَ عَنْ سَهْمِ ذِي الْقُرْبَى الَّذِي ذَكَرَ اللَّهُ مَنْ هُمْ وَإِنَّا كُنَّا نَرَى أَنَّ قَرَابَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هُمْ نَحْنُ فَأَبَى ذَلِكَ عَلَيْنَا قَوْمُنَا وَسَأَلْتَ عَنِ الْيَتِيمِ مَتَى يَنْقَضِي يُتْمُهُ وَإِنَّهُ إِذَا بَلَغَ النِّكَاحَ وَأُونِسَ مِنْهُ رُشْدٌ وَدُفِعَ إِلَيْهِ مَالُهُ فَقَدِ انْقَضَى يُتْمُهُ وَسَأَلْتَ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْتُلُ مِنْ صِبْيَانِ الْمُشْرِكِينَ أَحَدًا فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَقْتُلُ مِنْهُمْ أَحَدًا وَأَنْتَ فَلاَ تَقْتُلْ مِنْهُمْ أَحَدًا إِلاَّ أَنْ تَكُونَ تَعْلَمُ مِنْهُمْ مَا عَلِمَ الْخَضِرُ مِنَ الْغُلاَمِ حِينَ قَتَلَهُ وَسَأَلْتَ عَنِ الْمَرْأَةِ وَالْعَبْدِ هَلْ كَانَ لَهُمَا سَهْمٌ مَعْلُومٌ إِذَا حَضَرُوا الْبَأْسَ فَإِنَّهُمْ لَمْ يَكُنْ لَهُمْ سَهْمٌ مَعْلُومٌ إِلاَّ أَنْ يُحْذَيَا مِنْ غَنَائِمِ الْقَوْمِ


وَحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا سُلَيْمَانُ الأَعْمَشُ، عَنِ الْمُخْتَارِ بْنِ صَيْفِيٍّ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، قَالَ كَتَبَ نَجْدَةُ إِلَى ابْنِ عَبَّاسٍ ‏.‏ فَذَكَرَ بَعْضَ الْحَدِيثِ وَلَمْ يُتِمَّ الْقِصَّةَ كَإِتْمَامِ مَنْ ذَكَرْنَا حَدِيثَهُمْ ‏.‏

நஜ்தா பின் ஆமிர் என்ற (காரிஜி) ஒருவர், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு(ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு)க் கடிதம் எழுதினார். அவரது கடிதத்தை இப்னு அப்பாஸ் (ரலி)  வாசித்தபோதும் பதில் எழுதியபோதும் நான் அவர்களுடன் இருந்தேன்.

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! முடைநாற்றத்தில் வீழ்ந்துவிடாமல் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்; அவருக்கு மனநிறைவைத் தரவும் மாட்டேன்” என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) அவருக்குக் கடிதம் எழுதச் சொன்னார்கள்:

அல்லாஹ் (8:41ஆவது வசனத்தில்) குறிப்பிட்டுள்ள (குமுஸில்) பங்கு பெறுகின்ற உறவினர்கள் யார்?’ என்பது குறித்து நீர் என்னிடம் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களாகிய நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கருதினோம். ஆனால், அதை மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

நீர் என்னிடம் ஓர் அநாதைக்கு, அநாதை எனும் பட்டம் எப்போது விலகும்? எனக் கேட்டிருந்தீர். அவன் திருமண வயதை அடைந்து, அவனிடம் பக்குவம் தென்பட்டு, அவனது செல்வம் அவனிடம் ஒப்படைக்கப்படும் பருவத்தை அவன் அடையும்போது அவனிடமிருந்து அநாதை எனும் பட்டம் அவனிடமிருந்து விலகும்.

நீர் என்னிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) இணைவைப்பாளர்களின் குழந்தைகளில் எதையேனும் (அறப்போரில்) கொன்றிருக்கின்றார்களா?’ என்று கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எதிரிகளின் குழந்தைகள் எவரையும் கொன்றதில்லை. நீரும் அவர்களின் குழந்தைகள் எவரையும் கொன்றுவிடாதீர்; களிர், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்துகொண்டதை நீரும் அறிந்துகொள்ள முடிந்தால் தவிர (ஆனால், அது உம்மால் முடியாது).

மேலும், நீர் என்னிடம் பெண்களும் அடிமைகளும் போரில் கலந்துகொண்டால் அவர்களுக்கும் போர் வெற்றிச் செல்வத்தில் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டா? எனக் கேட்டிருந்தீர். அவர்களுக்கு மக்களின் போர் வெற்றிச் செல்வங்களிலிருந்து சிறிதளவு (ஊக்கத் தொகையாக) வழங்கப்படுவதைத் தவிர குறிப்பிட்ட பங்கேதும் அவர்களுக்குக் கிடையாது – என்று இப்னு அப்பாஸ் (ரலி) பதில் அமைந்திருந்தது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 48, ஹதீஸ் எண்: 3377

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، قَالَ كَتَبَ نَجْدَةُ بْنُ عَامِرٍ الْحَرُورِيُّ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنِ الْعَبْدِ، وَالْمَرْأَةِ يَحْضُرَانِ الْمَغْنَمَ هَلْ يُقْسَمُ لَهُمَا وَعَنْ قَتْلِ الْوِلْدَانِ وَعَنِ الْيَتِيمِ مَتَى يَنْقَطِعُ عَنْهُ الْيُتْمُ وَعَنْ ذَوِي الْقُرْبَى مَنْ هُمْ فَقَالَ لِيَزِيدَ :‏

اكْتُبْ إِلَيْهِ فَلَوْلاَ أَنْ يَقَعَ فِي أُحْمُوقَةٍ مَا كَتَبْتُ إِلَيْهِ اكْتُبْ إِنَّكَ كَتَبْتَ تَسْأَلُنِي عَنِ الْمَرْأَةِ وَالْعَبْدِ يَحْضُرَانِ الْمَغْنَمَ هَلْ يُقْسَمُ لَهُمَا شَىْءٌ وَإِنَّهُ لَيْسَ لَهُمَا شَىْءٌ إِلاَّ أَنْ يُحْذَيَا وَكَتَبْتَ تَسْأَلُنِي عَنْ قَتْلِ الْوِلْدَانِ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَقْتُلْهُمْ وَأَنْتَ فَلاَ تَقْتُلْهُمْ إِلاَّ أَنْ تَعْلَمَ مِنْهُمْ مَا عَلِمَ صَاحِبُ مُوسَى مِنَ الْغُلاَمِ الَّذِي قَتَلَهُ وَكَتَبْتَ تَسْأَلُنِي عَنِ الْيَتِيمِ مَتَى يَنْقَطِعُ عَنْهُ اسْمُ الْيُتْمِ وَإِنَّهُ لاَ يَنْقَطِعُ عَنْهُ اسْمُ الْيُتْمِ حَتَّى يَبْلُغَ وَيُؤْنَسَ مِنْهُ رُشْدٌ وَكَتَبْتَ تَسْأَلُنِي عَنْ ذَوِي الْقُرْبَى مَنْ هُمْ وَإِنَّا زَعَمْنَا أَنَّا هُمْ فَأَبَى ذَلِكَ عَلَيْنَا قَوْمُنَا ‏.‏


وَحَدَّثَنَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، قَالَ كَتَبَ نَجْدَةُ إِلَى ابْنِ عَبَّاسٍ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ ‏.‏ قَالَ أَبُو إِسْحَاقَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الْحَدِيثِ بِطُولِهِ.

நஜ்தா பின் ஆமிர் அல்ஹரூரீ என்ற (காரிஜி) ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அடிமைகளும் பெண்களும் போர் வெற்றிச் செல்வங்கள் பங்கிடப்படும் இடத்திற்கு வந்தால் அவர்களுக்கும் போர் வெற்றிச் செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா?

(எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்லலாமா?

அநாதை எனும் பட்டம் எந்தப் பருவத்தோடு முற்றுப் பெறும்?

(குமுஸைப் பற்றிக் கூறும் 8:41ஆவது வசனத்திலுள்ள) உறவினர்கள் என்போர் யாவர்? என்று விளக்கம் கேட்டிருந்தார்.

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், “அவருக்காகப் பதில் கடிதம் எழுது” என்று கூறிவிட்டு, “அவர் முட்டாள்தனமான ஒரு முடிவை எடுத்துவிடுவார் என்ற அச்சம் எனக்கில்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்” என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு எழுதச் சொன்னார்கள்: “நீர் என்னிடம் போர் வெற்றிச் செல்வம் பங்கிடப்படும் இடத்திற்குப் பெண்களும் அடிமைகளும் வந்தால் அவர்களுக்கும் போர் வெற்றிச் செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா? எனக் கேட்டிருந்தீர். போர் வெற்றிச் செல்வத்தில் அந்த இரு பிரிவினருக்கும் ஏதேனும் (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டால் தவிர (குறிப்பிட்ட) பங்கேதும் இல்லை.

(போரில் எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்வதைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தீர். (போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் அவர்களைக் கொல்ல வேண்டாம். மூஸா (அலை) அவர்களின் வழித்தோழர் (களிர்), தாம் கொன்ற சிறுவனைப் பற்றி (இறைவன் மூலம்) அறிந்துகொண்டதைப் போன்று நீரும் அக்குழந்தைகளைப் பற்றி அறிந்தால் தவிர (அது உம்மால் இயலாது).

நீர் என்னிடம் அநாதைகளைப் பற்றி அநாதை எனும் பட்டம் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறும்? எனக் கேட்டிருந்தீர். அவன் பருவ வயதை அடைந்து, அவனிடம் பக்குவ நிலை தென்படாத வரை அநாதை எனும் பட்டம் அவனிடமிருந்து நீங்காது.

மேலும் நீர் என்னிடம், (8:41ஆவது வசனத்திலுள்ள) உறவினர் என்போர் யாவர்? எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் உறவி னர்களான) நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கூறினோம். ஆனால், அதை எங்கள் மக்கள் மறுத்துவிட்டனர் (எனவே ஆட்சியாளர்களின் உறவினர்களையும் அது குறிக்கும்) என்று அம்மடல் அமைந்திருந்தது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 48, ஹதீஸ் எண்: 3376

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ بِلاَلٍ – عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، أَنَّ نَجْدَةَ، كَتَبَ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ خَمْسِ، خِلاَلٍ ‏.‏ فَقَالَ ابْنُ عَبَّاسٍ:‏

لَوْلاَ أَنْ أَكْتُمَ، عِلْمًا مَا كَتَبْتُ إِلَيْهِ ‏.‏ كَتَبَ إِلَيْهِ نَجْدَةُ أَمَّا بَعْدُ فَأَخْبِرْنِي هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَغْزُو بِالنِّسَاءِ وَهَلْ كَانَ يَضْرِبُ لَهُنَّ بِسَهْمٍ وَهَلْ كَانَ يَقْتُلُ الصِّبْيَانَ وَمَتَى يَنْقَضِي يُتْمُ الْيَتِيمِ وَعَنِ الْخُمْسِ لِمَنْ هُوَ فَكَتَبَ إِلَيْهِ ابْنُ عَبَّاسٍ كَتَبْتَ تَسْأَلُنِي هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَغْزُو بِالنِّسَاءِ وَقَدْ كَانَ يَغْزُو بِهِنَّ فَيُدَاوِينَ الْجَرْحَى وَيُحْذَيْنَ مِنَ الْغَنِيمَةِ وَأَمَّا بِسَهْمٍ فَلَمْ يَضْرِبْ لَهُنَّ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَقْتُلُ الصِّبْيَانَ فَلاَ تَقْتُلِ الصِّبْيَانَ وَكَتَبْتَ تَسْأَلُنِي مَتَى يَنْقَضِي يُتْمُ الْيَتِيمِ فَلَعَمْرِي إِنَّ الرَّجُلَ لَتَنْبُتُ لِحْيَتُهُ وَإِنَّهُ لَضَعِيفُ الأَخْذِ لِنَفْسِهِ ضَعِيفُ الْعَطَاءِ مِنْهَا فَإِذَا أَخَذَ لِنَفْسِهِ مِنْ صَالِحِ مَا يَأْخُذُ النَّاسُ فَقَدْ ذَهَبَ عَنْهُ الْيُتْمُ وَكَتَبْتَ تَسْأَلُنِي عَنِ الْخُمْسِ لِمَنْ هُوَ وَإِنَّا كُنَّا نَقُولُ هُوَ لَنَا ‏.‏ فَأَبَى عَلَيْنَا قَوْمُنَا ذَاكَ ‏.‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ حَاتِمِ بْنِ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، أَنَّ نَجْدَةَ كَتَبَ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ خِلاَلٍ، ‏.‏ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِ حَاتِمٍ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَقْتُلُ الصِّبْيَانَ فَلاَ تَقْتُلِ الصِّبْيَانَ إِلاَّ أَنْ تَكُونَ تَعْلَمُ مَا عَلِمَ الْخَضِرُ مِنَ الصَّبِيِّ الَّذِي قَتَلَ ‏.‏ وَزَادَ إِسْحَاقُ فِي حَدِيثِهِ عَنْ حَاتِمٍ وَتُمَيِّزَ الْمُؤْمِنَ فَتَقْتُلَ الْكَافِرَ وَتَدَعَ الْمُؤْمِنَ ‏

நஜ்தா பின் ஆமிர் என்ற (காரிஜிய்யா) ஒருவர், ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்வருமாறு எழுதியிருந்தார்:

இறைவாழ்த்துக்குப் பின்! அறப்போர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் கலந்துகொண்டார்களா?

அவ்வாறு கலந்துகொண்ட பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) போர் வெற்றிச் செல்வத்தில் பங்கு கொடுத்தார்களா?

(போரில்) எதிரிகளின் குழந்தைகளைக் கொன்றார்களா?

அநாதை எனும் பட்டம் எந்தப் பருவத்தில் முற்றுப்பெறும்?

போரில் கைப்பற்றப்படும் செல்வங் களில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதி யாருக்குரியது? இந்த ஐந்து விஷயங்கள் குறித்து எனக்கு அறிவியுங்கள்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்” என்று கூறி(அவருக்குப் பின்வருமாறு பதில் எழுதி)னார்கள்.

நீர் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்துகொண்டார்களா? எனக் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர் வெற்றிச் செல்வத்திலிருந்து சிறிதளவு அப்பெண்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) போர் வெற்றிச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை.

போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.

மேலும் நீர், அநாதை எனும் பட்டம் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறுகிறது? எனக் கேட்டிருந்தீர். என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! சிலருக்குத் தாடிகூட முளைத்துவிடும். ஆனால், தமக்குரிய ஒன்றைப் பெறுவதிலும் தமக்குரிய ஒன்றைக் கொடுப்பதிலும் பலவீனத்துடனேயே அவர்கள் இருப்பர். (ஒன்றைப் பெறும்போது) மற்றவர்களைப் போன்று சரியான பொருளைப் பெறுகின்ற பக்குவத்தை ஒருவன் அடைந்துவிட்டால் அவனைவிட்டு அநாதை எனும் பட்டம் நீங்கிவிடும்.

மேலும் நீர் என்னிடம், போர் வெற்றிச் செல்வத்தில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) யாருக்குரியது? எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் குடும்பத்தாராகிய) நாங்கள் அது எங்களுக்கே உரியது எனக் கூறிவந்தோம். ஆனால், எங்கள் (பனூ உமைய்யா) மக்களே அதை எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர். (ஆகவே, குமுஸ் நிதி ஆட்சியாளராக வரும் அனைவரின் குடும்பத்தாருக்கும் உரியதாகும்) என்று அக்கடிதம் அமைந்திருந்தது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்)


குறிப்பு :

ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) வழி அறிவிப்பு, “நஜ்தா என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு(ஐந்து விஷயங்கள் குறித்துக் கேட்டு)க் கடிதம் எழுதினார்” என்று ஆரம்பமாகிறது.

மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். ‘களிர்’ (அலை), தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்துகொண்டதைப் போன்று நீரும் அறிந்தால் தவிர (அது உம்மால் இயலாத காரியமாகும்)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.

ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) வழியாக இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அறிவிப்பதில் “இறைநம்பிக்கையாளரை நீர் பாகுபடுத்தி அறிந்துகொள்ள முடிந்தால் தவிர. அப்போது தான் இறைமறுப்பாளனைக் கொல்வதற்கும் இறைநம்பிக்கையாளரை விட்டுவிடுவதற்கும் உமக்கு முடியும் (ஆனால், சிறுவன் பிற்காலத்தில் எப்படி மாறுவான் என்பதை, ‘களிரை’ப் போன்று அறிந்துகொள்ள உம்மால் முடியாது)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 47, ஹதீஸ் எண்: 3375

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، – وَهُوَ أَبُو مَعْمَرٍ الْمِنْقَرِيُّ – حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – وَهُوَ ابْنُ صُهَيْبٍ – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ انْهَزَمَ نَاسٌ مِنَ النَّاسِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبُو طَلْحَةَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُجَوِّبٌ عَلَيْهِ بِحَجَفَةٍ – قَالَ – وَكَانَ أَبُو طَلْحَةَ رَجُلاً رَامِيًا شَدِيدَ النَّزْعِ وَكَسَرَ يَوْمَئِذٍ قَوْسَيْنِ أَوْ ثَلاَثًا – قَالَ – فَكَانَ الرَّجُلُ يَمُرُّ مَعَهُ الْجَعْبَةُ مِنَ النَّبْلِ فَيَقُولُ انْثُرْهَا لأَبِي طَلْحَةَ ‏.‏ قَالَ وَيُشْرِفُ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ إِلَى الْقَوْمِ فَيَقُولُ أَبُو طَلْحَةَ يَا نَبِيَّ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي لاَ تُشْرِفْ لاَ يُصِبْكَ سَهْمٌ مِنْ سِهَامِ الْقَوْمِ نَحْرِي دُونَ نَحْرِكَ قَالَ وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُلاَنِ الْقِرَبَ عَلَى مُتُونِهِمَا ثُمَّ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِهِمْ ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلآنِهَا ثُمَّ تَجِيئَانِ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ وَلَقَدْ وَقَعَ السَّيْفُ مِنْ يَدَىْ أَبِي طَلْحَةَ إِمَّا مَرَّتَيْنِ وَإِمَّا ثَلاَثًا مِنَ النُّعَاسِ ‏.‏

உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் சிலர் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களை ஒரு தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

அபூதல்ஹா (ரலி) அதிவேகமாக அம்பெடுத்து எய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (வேக வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை உடைத்துவிட்டார்கள். யாரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்), “அதை அபூ தல்ஹாவிடம் தூக்கிப்போடு” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் நபி (ஸல்) (அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னாலிருந்து) தலையை உயர்த்தி எதிரிகளை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஓர் அம்பு தங்களைத் தாக்கிவிடலாம். என் மார்பு தங்கள் மார்ப்புக்குக் கீழே இருக்கும் (தாங்கள் எட்டிப் பார்க்காமல் இருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு நேராகக் கேடயம் போன்று இருக்கும்)” என்று சொன்னார்கள்.

நான் அபூபக்ரு (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களையும் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களையும் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு அன்றைய களத்தில் பணியாற்றியவர்களாகப் பார்த்தேன். அவர்கள் கால் கொலுசுகளைக் கண்டேன். அவர்கள் இருவரும் (நீர் உள்ள) தோல் பைகளை முதுகின் மீது சுமந்துவந்து, (காயம்பட்டுக் கிடந்த) வீரர்களின் வாயில் ஊற்றுவார்கள். பின்னர் திரும்பிப்போய், நீர் நிரப்பிக்கொண்டு வந்து, வீரர்களின் வாயில் ஊற்றுவார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் அசதியால் (அன்றைய களத்தில்) அவர்கள் கரங்களிலிருந்து இரண்டு, அல்லது மூன்று முறை வாள் (நழுவி) விழுந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 47, ஹதீஸ் எண்: 3374

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَغْزُو بِأُمِّ سُلَيْمٍ وَنِسْوَةٍ مِنَ الأَنْصَارِ مَعَهُ إِذَا غَزَا فَيَسْقِينَ الْمَاءَ وَيُدَاوِينَ الْجَرْحَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) போருக்குச் செல்லும்போது, அவர்களுடன் (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்ஸாரிப் பெண்மணிகளும் (போரில்) கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள்; காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 47, ஹதீஸ் எண்: 3373

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ أُمَّ سُلَيْمٍ، اتَّخَذَتْ يَوْمَ حُنَيْنٍ خِنْجَرًا فَكَانَ مَعَهَا فَرَآهَا أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ أُمُّ سُلَيْمٍ مَعَهَا خَنْجَرٌ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا هَذَا الْخَنْجَرُ ‏”‏ ‏.‏ قَالَتِ اتَّخَذْتُهُ إِنْ دَنَا مِنِّي أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ بَقَرْتُ بِهِ بَطْنَهُ ‏.‏ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضْحَكُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ اقْتُلْ مَنْ بَعْدَنَا مِنَ الطُّلَقَاءِ انْهَزَمُوا بِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا أُمَّ سُلَيْمٍ إِنَّ اللَّهَ قَدْ كَفَى وَأَحْسَنَ ‏”‏


وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، فِي قِصَّةِ أُمِّ سُلَيْمٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ حَدِيثِ ثَابِتٍ ‏.‏

உம்மு ஸுலைம் (ரலி) ஹுனைன் போர் தினத்தன்று குறுவாள்  ஒன்றைத் தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! உம்மு ஸுலைம் தம்முடன் குறுவாள் ஒன்றை வைத்திருக்கின்றார்” என்று கூறினார்கள்.

உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்தக் குறுவாள் எதற்கு?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் இதை வைத்துள்ளேன்” என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரிக்கலானார்கள்.

உம்மு ஸுலைம் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றியின்போது) தங்களிடம் சரணடைந்து உங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களை கொன்றுவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

உம்மு ஸுலைம் (ரலி), அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்களைத் தம் முன்னாள் கணவர் மாலிக் மூலமாகப் பெற்றெடுத்தவர். சிரியாவுக்குச் சென்ற மாலிக் மரணமடைந்த பின், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை அபூதல்ஹா (ரலி) மணந்துகொண்டார்.