அத்தியாயம்: 32, பாடம்: 47, ஹதீஸ் எண்: 3373

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ أُمَّ سُلَيْمٍ، اتَّخَذَتْ يَوْمَ حُنَيْنٍ خِنْجَرًا فَكَانَ مَعَهَا فَرَآهَا أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ أُمُّ سُلَيْمٍ مَعَهَا خَنْجَرٌ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا هَذَا الْخَنْجَرُ ‏”‏ ‏.‏ قَالَتِ اتَّخَذْتُهُ إِنْ دَنَا مِنِّي أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ بَقَرْتُ بِهِ بَطْنَهُ ‏.‏ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضْحَكُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ اقْتُلْ مَنْ بَعْدَنَا مِنَ الطُّلَقَاءِ انْهَزَمُوا بِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا أُمَّ سُلَيْمٍ إِنَّ اللَّهَ قَدْ كَفَى وَأَحْسَنَ ‏”‏


وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، فِي قِصَّةِ أُمِّ سُلَيْمٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ حَدِيثِ ثَابِتٍ ‏.‏

உம்மு ஸுலைம் (ரலி) ஹுனைன் போர் தினத்தன்று குறுவாள்  ஒன்றைத் தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! உம்மு ஸுலைம் தம்முடன் குறுவாள் ஒன்றை வைத்திருக்கின்றார்” என்று கூறினார்கள்.

உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்தக் குறுவாள் எதற்கு?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் இதை வைத்துள்ளேன்” என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரிக்கலானார்கள்.

உம்மு ஸுலைம் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றியின்போது) தங்களிடம் சரணடைந்து உங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களை கொன்றுவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

உம்மு ஸுலைம் (ரலி), அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்களைத் தம் முன்னாள் கணவர் மாலிக் மூலமாகப் பெற்றெடுத்தவர். சிரியாவுக்குச் சென்ற மாலிக் மரணமடைந்த பின், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை அபூதல்ஹா (ரலி) மணந்துகொண்டார்.

அத்தியாயம்: 32, பாடம்: 46, ஹதீஸ் எண்: 3372

حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ ثَمَانِينَ، رَجُلاً مِنْ أَهْلِ مَكَّةَ هَبَطُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ جَبَلِ التَّنْعِيمِ مُتَسَلِّحِينَ يُرِيدُونَ غِرَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَصْحَابِهِ فَأَخَذَهُمْ سَلَمًا فَاسْتَحْيَاهُمْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ‏}‏

மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) மீதும் நபித்தோழர்கள் மீதும் திடீர்த் தாக்குதல் தொடுப்பதற்காக ‘தன்ஈம்’ மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கிவந்தனர். அப்போது (தாக்குதல் தொடுக்க முடியாமல்) சரணடைந்த அவர்களை நபி (ஸல்) பிடித்து, (அவர்களை மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், அவர்களைத் தாக்காமல் உங்கள் கைகளையும் உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளையும் அவனே தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)