அத்தியாயம்: 33, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3464

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْهِجْرَةِ فَقَالَ ‏ “‏ لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மக்கா வெற்றியின்போது) ஹிஜ்ரத் (மக்காவைத்  துறப்பது) பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள், “மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் செய்வதற்கும் (பிற நற்செயல்கள் புரியவும்) எண்ணவுறுதி கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3463

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ فَتْحِ مَكَّةَ ‏ “‏ لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَابْنُ، رَافِعٍ عَنْ يَحْيَى بْنِ آدَمَ، حَدَّثَنَا مُفَضَّلٌ، – يَعْنِي ابْنَ مُهَلْهِلٍ – ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، كُلُّهُمْ عَنْ مَنْصُورٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றியின்போது, “ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது (இனி) கிடையாது. ஆயினும், அறப்போர் செய்வதற்கும் (பிற நற்செயல்கள் புரியவும்) உள்ளவுறுதி கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் அறப்போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால், போருக்குப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3462

وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي مُجَاشِعُ بْنُ مَسْعُودٍ السُّلَمِيُّ قَالَ :‏

جِئْتُ بِأَخِي أَبِي مَعْبَدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الْفَتْحِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ عَلَى الْهِجْرَةِ ‏.‏ قَالَ ‏”‏ قَدْ مَضَتِ الْهِجْرَةُ بِأَهْلِهَا ‏”‏ ‏.‏ قُلْتُ فَبِأَىِّ شَىْءٍ تُبَايِعُهُ قَالَ ‏”‏ عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ وَالْخَيْرِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عُثْمَانَ فَلَقِيتُ أَبَا مَعْبَدٍ فَأَخْبَرْتُهُ بِقَوْلِ مُجَاشِعٍ فَقَالَ صَدَقَ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ قَالَ فَلَقِيتُ أَخَاهُ فَقَالَ صَدَقَ مُجَاشِعٌ ‏.‏ وَلَمْ يَذْكُرْ أَبَا مَعْبَدٍ

மக்கா வெற்றிக்குப் பின் நான் என் சகோதரர் அபூமஅபத் (முஜாலித் பின் மஸ்ஊத்) அவர்களை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியை இவரிடமிருந்து பெறுங்கள்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஹிஜ்ரத் (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களோடு முடிந்துவிட்டது” என்று கூறினார்கள். நான், “அவ்வாறாயின் (இனி) எதற்காக உறுதிமொழி பெறுவீர்கள்?” என்று கேட்டேன். “இஸ்லாத்தின்படி (உறுதியுடன்) வாழ்ந்திடவும், (தேவைப்பட்டால்) அறப்போர் புரிந்திடவும், (பிற) நற்செயல்கள் செய்திடவும்தான் (உறுதிமொழி பெறுவேன்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : முஜாஷிஉ பின் மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி)


குறிப்புகள் :

பின்னர் நான் அபூமஅபத் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் முஜாஷிஉ (ரலி) சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். அதற்கு அபூமஅபத் “முஜாஷிஉ சொன்னது உண்மையே” என்றார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) கூறுகின்றார்.

முஹம்மது பின் ஃபுளைல் (ரஹ்) வழி அறிவிப்பில், “பின்னர் நான் முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரரைச் சந்தித்(து முஜாஷிஉ சொன்ன செய்தியைத் தெரிவித்)தபோது, ‘முஜாஷிஉ சொன்னது உண்மைதான்’ என்று அவர் கூறினார்” என இடம்பெற்றுள்ளது. ஆனால், ‘அபூமஅபத்’ எனும் அவருடைய பெயர் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 33, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3461

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَبُو جَعْفَرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، حَدَّثَنِي مُجَاشِعُ بْنُ مَسْعُودٍ السُّلَمِيُّ قَالَ :‏

أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أُبَايِعُهُ عَلَى الْهِجْرَةِ فَقَالَ ‏ “‏ إِنَّ الْهِجْرَةَ قَدْ مَضَتْ لأَهْلِهَا وَلَكِنْ عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ وَالْخَيْرِ ‏”‏

ஹிஜ்ரத் செய்தவற்கான உறுதிமொழி (பைஅத்) அளிப்பதற்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்), “ஹிஜ்ரத், (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி இஸ்லாத்தின்படி வாழவும், (தேவைப்பட்டால்) அறப்போருக்காகவும், (பிற) நற்செயல்களைச் செய்யவும் (உறுதி மொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : முஜாஷிஉ பின் மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 19, ஹதீஸ் எண்: 3460

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، – يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ – عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ :‏

أَنَّهُ دَخَلَ عَلَى الْحَجَّاجِ فَقَالَ يَا ابْنَ الأَكْوَعِ ارْتَدَدْتَ عَلَى عَقِبَيْكَ تَعَرَّبْتَ قَالَ لاَ وَلَكِنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَذِنَ لِي فِي الْبَدْوِ

நான் (ஒரு முறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃபிடம் சென்றேன். அவர், “இப்னுல் அக்வஉ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறி விட்டீர்களா?” என்று கேட்டார். நான், “இல்லை. ஆயினும்,  கிராமத்தில் வசிக்க எனக்கு (மட்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்தார்கள்” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3459

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ :‏

أَتَاهُ آتٍ فَقَالَ هَذَاكَ ابْنُ حَنْظَلَةَ يُبَايِعُ النَّاسَ فَقَالَ عَلَى مَاذَا قَالَ عَلَى الْمَوْتِ قَالَ لاَ أُبَايِعُ عَلَى هَذَا أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

என்னிடம் (‘அல்ஹர்ரா’ப் போரின்போது) ஒருவர் வந்து, “இதோ, அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), மக்களிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டிருக்கின்றார்” என்று கூறினார். அவரிடம் நான், “எதற்காக அவர் உறுதிமொழி வாங்குகின்றார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “மரணத்தைச் சந்திக்கவும் தயாராயிருக்கும்படி (உறுதிமொழி வாங்குகிறார்)” என்று கூறினார். அதற்கு நான், “இதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (பைஅத்துர் ரிள்வானில் உறுதிமொழி அளித்த) பின்னர் வேறு யாரிடமும் உறுதிமொழி அளிக்கமாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3458

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، – يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ – عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ قَالَ :‏

قُلْتُ لِسَلَمَةَ عَلَى أَىِّ شَىْءٍ بَايَعْتُمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ قَالَ عَلَى الْمَوْتِ


وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ سَلَمَةَ، بِمِثْلِهِ ‏.‏

நான் ஸலமா (ரலி) அவர்களிடம், “ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி) வழியாக யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்)


குறிப்பு :

யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள், ஸலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களின் அடிமையாக இருந்தவர்.

அத்தியாயம்: 33, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3457

وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالاَ حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ قَالَ :‏

لَقَدْ رَأَيْتُ الشَّجَرَةَ ثُمَّ أَتَيْتُهَا بَعْدُ فَلَمْ أَعْرِفْهَا

நாங்கள் அந்த(க் கருவேல) மரத்தை (உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) அந்த ஆண்டில் பார்த்திருந்தோம்; அடுத்த ஆண்டில் (சென்றபோது) அந்த இடத்தை நாங்கள் மறந்து விட்டோம்.

அறிவிப்பாளர் : முஸையப் பின் ஹஸன் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3456

وحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ وَقَرَأْتُهُ عَلَى نَصْرِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِي أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِيهِ,:‏

أَنَّهُمْ كَانُوا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الشَّجَرَةِ، قَالَ فَنَسُوهَا مِنَ الْعَامِ الْمُقْبِلِ

நாங்கள் அந்த(க் கருவேல)  மரத்தின் (கீழ் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் இருந்தோம். அடுத்த ஆண்டில் (அங்குச் சென்றபோது) அந்த இடத்தை நாங்கள் மறந்து விட்டோம்.

அறிவிப்பாளர் : முஸையப் பின் ஹஸன் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3455

وَحَدَّثَنَاهُ حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ طَارِقٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ :‏

كَانَ أَبِي مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ الشَّجَرَةِ ‏.‏ قَالَ فَانْطَلَقْنَا فِي قَابِلٍ حَاجِّينَ فَخَفِيَ عَلَيْنَا مَكَانُهَا فَإِنْ كَانَتْ تَبَيَّنَتْ لَكُمْ فَأَنْتُمْ أَعْلَمُ ‏.‏ وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، قَالَ وَقَرَأْتُهُ عَلَى نَصْرِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِي أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، أَنَّهُمْ كَانُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الشَّجَرَةِ قَالَ فَنَسُوهَا مِنَ الْعَامِ الْمُقْبِلِ

என் தந்தை (முஸையப் பின் ஹஸன் – ரலி) அந்த(க் கருவேல) மரத்தின் கீழ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவர் ஆவார்.

“அடுத்த ஆண்டில் நாங்கள் ஹஜ்ஜுக்குச் சென்றோம். அப்போது அந்த (மரம் இருந்த) இடம் எங்களுக்கே (அடையாளம்) தெரியாமல் போய்விட்டது. அப்படியிருக்க, உங்களுக்கு அந்த இடம் (தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு உங்களுக்குத்) தெளிவாகத் தெரிந்தால் நீங்களே மெத்தவும் அறிந்தவர்கள்” என்று என் தந்தை கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஸையப் பின் ஹஸன் (ரலி) வழியாக ஸயீத் பின் முஸையப் (ரஹ்)