அத்தியாயம்: 39, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4101

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرٍو وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ “‏ إِنَّ هَذَا الْوَجَعَ أَوِ السَّقَمَ رِجْزٌ عُذِّبَ بِهِ بَعْضُ الأُمَمِ قَبْلَكُمْ ثُمَّ بَقِيَ بَعْدُ بِالأَرْضِ فَيَذْهَبُ الْمَرَّةَ وَيَأْتِي الأُخْرَى فَمَنْ سَمِعَ بِهِ بِأَرْضٍ فَلاَ يَقْدَمَنَّ عَلَيْهِ وَمَنْ وَقَعَ بِأَرْضٍ وَهُوَ بِهَا فَلاَ يُخْرِجَنَّهُ الْفِرَارُ مِنْهُ ‏”‏


وَحَدَّثَنَاهُ أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، – يَعْنِي ابْنَ زِيَادٍ – حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِإِسْنَادِ يُونُسَ نَحْوَ حَدِيثِهِ

“இந்த (கொள்ளை) நோய் என்பது ஒரு தண்டனையாகும். அதன்மூலம் உங்களுக்கு முன்னிருந்த சில சமுதாயத்தார் வேதனை செய்யப்பட்டனர். பின்னர் அதில் சிறிதளவு பூமியில் எஞ்சிவிட்டது. எனவே, அது ஒரு முறை வரும், ஒரு முறை போகும். ஆகவே, அது ஓர் ஊரில் இருப்பதாகக் கேள்விப்படுபவர், அங்குச் செல்ல வேண்டாம். அது ஏற்பட்டிருக்கும் ஊரில் வசிப்பவர், அதிலிருந்து தப்பிப்பதற்காக (அங்கிருந்து) வெளியேற வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4100

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ أَنَّ عَامِرَ بْنَ سَعْدٍ، أَخْبَرَهُ أَنَّ رَجُلاً سَأَلَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ عَنِ الطَّاعُونِ، فَقَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ :‏

أَنَا أُخْبِرُكَ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ هُوَ عَذَابٌ أَوْ رِجْزٌ أَرْسَلَهُ اللَّهُ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ أَوْ نَاسٍ كَانُوا قَبْلَكُمْ فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلاَ تَدْخُلُوهَا عَلَيْهِ وَإِذَا دَخَلَهَا عَلَيْكُمْ فَلاَ تَخْرُجُوا مِنْهَا فِرَارًا ‏”‏


وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، وَهُوَ ابْنُ زَيْدٍ ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، كِلاَهُمَا عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ بِإِسْنَادِ ابْنِ جُرَيْجٍ نَحْوَ حَدِيثِهِ

கொள்ளைநோய் பற்றி (என் தந்தை) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார்.

அப்போது (அங்கிருந்த) உஸாமா பின் ஸைத் (ரலி) கூறினார்கள்:

அதைப் பற்றி உமக்கு நான் தெரிவிக்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார்மீது (அ) உங்களுக்கு முன்னர் இருந்த சிலர்மீது அல்லாஹ் அனுப்பிய வேதனை (அ) தண்டனை ஆகும். அது ஓர் ஊரில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். அது உங்களிடம் (உங்கள் ஊருக்குள்) வந்துவிட்டால் (அதிலிருந்து) தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறாதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா (ரலி) வழியாக ஆமிர் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்)

அத்தியாயம்: 39, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4099

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أُسَامَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ هَذَا الطَّاعُونَ رِجْزٌ سُلِّطَ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ أَوْ عَلَى بَنِي إِسْرَائِيلَ فَإِذَا كَانَ بِأَرْضٍ فَلاَ تَخْرُجُوا مِنْهَا فِرَارًا مِنْهُ وَإِذَا كَانَ بِأَرْضٍ فَلاَ تَدْخُلُوهَا ‏”‏

“கொள்ளைநோய் என்பது, உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது (அ) பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி(ல் ஒரு பிரிவினரி)ன் மீது சாட்டப்பட்ட தண்டனையாகும். (நீங்கள் வசிக்கும்) ஓர் ஊரில் அது ஏற்பட்டிருந்தால், அதிலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறாதீர்கள். ஓர் ஊரில் அது ஏற்பட்டிருந்தால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4098

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ أَخْبَرَنَا الْمُغِيرَةُ، – وَنَسَبَهُ ابْنُ قَعْنَبٍ فَقَالَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ – عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الطَّاعُونُ آيَةُ الرِّجْزِ ابْتَلَى اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ نَاسًا مِنْ عِبَادِهِ فَإِذَا سَمِعْتُمْ بِهِ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِ وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَفِرُّوا مِنْهُ ‏” هَذَا حَدِيثُ الْقَعْنَبِيِّ وَقُتَيْبَةَ نَحْوَهُ

“கொள்ளைநோய் என்பது தண்டனையின் அடையாளமாகும். அதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் அடியார்களில் (தான் நாடிய) சிலரைச் சோதிக்கின்றான். அது (ஓர் ஊரில் இருப்பது) குறித்து நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் அது ஏற்பட்டுவிட்டால், அங்கிருந்து வெருண்டோடாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4097

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَأَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ :‏

أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ مَاذَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الطَّاعُونِ فَقَالَ أُسَامَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ الطَّاعُونُ رِجْزٌ أَوْ عَذَابٌ أُرْسِلَ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا فِرَارًا مِنْهُ ‏”


وَقَالَ أَبُو النَّضْرِ ‏”‏ لاَ يُخْرِجُكُمْ إِلاَّ فِرَارٌ مِنْهُ ‏”‏

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் (என் தந்தை) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளைநோயைப் பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு உஸாமா (ரலி), “கொள்ளைநோய் என்பது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி(ல் ஒரு பிரிவினரி)ன் மீது (அ) உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது (அவர்களின் குற்றங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) தண்டனை (அ) வேதனை ஆகும். அது ஒரு பகுதியில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் அது ஏற்பட்டால் அதிலிருந்து தப்புவதற்காக அங்கிருந்து வெளியேறிச் செல்லாதீர்கள்’ என்று சொன்னார்கள்” எனப் பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவருடைய மகன் ஆமிர் (ரஹ்)


குறிப்பு :

“அந்நோயிலிருந்து தப்பியோடும் நோக்கத்துடன் நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (தவிர்க்க முடியாத காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் குற்றமில்லை)”  என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபுந்நள்ரு (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 39, பாடம்: 31, ஹதீஸ் எண்: 4096

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أَخِي اسْتَطْلَقَ بَطْنُهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اسْقِهِ عَسَلاً ‏” فَسَقَاهُ ثُمَّ جَاءَهُ فَقَالَ إِنِّي سَقَيْتُهُ عَسَلاً فَلَمْ يَزِدْهُ إِلاَّ اسْتِطْلاَقًا ‏.‏ فَقَالَ لَهُ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ جَاءَ الرَّابِعَةَ فَقَالَ ‏”‏ اسْقِهِ عَسَلاً ‏” فَقَالَ لَقَدْ سَقَيْتُهُ فَلَمْ يَزِدْهُ إِلاَّ اسْتِطْلاَقًا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ ‏” فَسَقَاهُ فَبَرَأَ ‏


وَحَدَّثَنِيهِ عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، – يَعْنِي ابْنَ عَطَاءٍ – عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أَخِي عَرِبَ بَطْنُهُ ‏.‏ فَقَالَ لَهُ ‏ “‏ اسْقِهِ عَسَلاً ‏” بِمَعْنَى حَدِيثِ شُعْبَةَ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் சகோதரருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார். நபி (ஸல்) “அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர் தேனூட்டிவிட்டுப் பிறகு (மீண்டும்) வந்து, “அவருக்கு நான் தேனூட்டினேன். ஆனால், வயிற்றுப்போக்கு அதிகரித்தது” என்று சொன்னார். இவ்வாறே (தேனூட்டுமாறு) மூன்று தடவை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

நான்காவது தடவை அவர் வந்தபோது, “அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். அப்போதும் அவர், “அவருக்கு நான் தேனூட்டினேன்; ஆனால், வயிற்றுப்போக்கு அதிகரித்தது” என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ், (தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. (அவருக்குத் தேன் ஊட்டுங்கள்)” என்று சொன்னார்கள். அவர் மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டியபோது அவர் குணமடைந்தார்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் சகோதரரின் இரைப்பை கெட்டுவிட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவருக்குத் தேன் ஊட்டுங்கள் என்று கூறினார்கள்” என ஆரம்பமாகின்றது.

அத்தியாயம்: 39, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4095

وَحَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم :‏

أَنَّهَا كَانَتْ إِذَا مَاتَ الْمَيِّتُ مِنْ أَهْلِهَا فَاجْتَمَعَ لِذَلِكَ النِّسَاءُ ثُمَّ تَفَرَّقْنَ إِلاَّ أَهْلَهَا وَخَاصَّتَهَا – أَمَرَتْ بِبُرْمَةٍ مِنْ تَلْبِينَةٍ فَطُبِخَتْ ثُمَّ صُنِعَ ثَرِيدٌ فَصُبَّتِ التَّلْبِينَةُ عَلَيْهَا ثُمَّ قَالَتْ كُلْنَ مِنْهَا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ التَّلْبِينَةُ مَجَمَّةٌ لِفُؤَادِ الْمَرِيضِ تُذْهِبُ بَعْضَ الْحُزْنِ ‏”‏

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி), அவர்களுடைய குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் ஒன்றுகூடுவர். பிறகு ஆயிஷா (ரலி) அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்றப் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள்.

அப்போது ஒரு பாத்திரத்தில் ‘தல்பீனா’ (எனும் பால் கஞ்சி) தயாரிக்கும்படி ஆயிஷா (ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு ‘ஸரீத்’ எனும் (ரொட்டித் துண்டுகளைக் கறிக்குழம்பில் இட்டுத் தயாரிக்கப்படும் ‘தக்கடி’) உணவு தயாரிக்கப்பட்டு, அதில் ‘தல்பீனா’ ஊற்றப்படும்.

அப்போது ஆயிஷா (ரலி), “இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், ‘தல்பீனா, நோயாளியின் மனத்துக்கு ஆறுதல் அளிக்கும்; சில கவலைகளைப் போக்கும்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறக் கேட்டுள்ளேன்” என்று சொல்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 39, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4094

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَا مِنْ دَاءٍ إِلاَّ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ مِنْهُ شِفَاءٌ إِلاَّ السَّامَ ‏”‏

“மரணத்தைத் தவிர, எந்த நோய்க்கும் கருஞ்சீரகத்தில் நிவாரணம் உண்டு” என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4093

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ :‏

أَخْبَرَهُمَا أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءً مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ ‏” وَالسَّامُ الْمَوْتُ ‏.‏ وَالْحَبَّةُ السَّوْدَاءُ الشُّونِيزُ


وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ح

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ عُقَيْلٍ وَفِي حَدِيثِ سُفْيَانَ وَيُونُسَ الْحَبَّةُ السَّوْدَاءُ ‏.‏ وَلَمْ يَقُلِ الشُّونِيزُ

“கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மரணம் என்பதைக் குறிக்க ‘அஸ்ஸாம்’ எனும் அரபுச் சொல்லும் கருஞ்சீரகத்தைக் குறிக்க ‘ஷூனீஸ்’ எனும் ஃபார்ஸிச் சொல்லும் இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்), யூனுஸ் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில் கருஞ்சீரகத்துக்கு (பாரசீக மொழியில் அளிக்கப்பட்டுள்ள) ‘ஷூனீஸ்’ எனும் விளக்கம் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 39, பாடம்: 28, ஹதீஸ் எண்: 4092

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ، – وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الأُوَلِ اللاَّتِي بَايَعْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ أُخْتُ عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ أَحَدِ بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ – قَالَ :‏

أَخْبَرَتْنِي أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِابْنٍ لَهَا لَمْ يَبْلُغْ أَنْ يَأْكُلَ الطَّعَامَ وَقَدْ أَعْلَقَتْ عَلَيْهِ مِنَ الْعُذْرَةِ – قَالَ يُونُسُ أَعْلَقَتْ غَمَزَتْ فَهِيَ تَخَافُ أَنْ يَكُونَ بِهِ عُذْرَةٌ – قَالَتْ – فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ عَلاَمَهْ تَدْغَرْنَ أَوْلاَدَكُنَّ بِهَذَا الإِعْلاَقِ عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ – يَعْنِي بِهِ الْكُسْتَ – فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ مِنْهَا ذَاتُ الْجَنْبِ ‏”‏


قَالَ عُبَيْدُ اللَّهِ وَأَخْبَرَتْنِي أَنَّ ابْنَهَا ذَاكَ بَالَ فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَاءٍ فَنَضَحَهُ عَلَى بَوْلِهِ وَلَمْ يَغْسِلْهُ غَسْلاً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தவரும், முதலாம் கட்ட ஹிஜ்ரத் மேற்கொண்டவர்களுள் ஒருவரும், பனூ அஸத் பின் குஸைமா குலத்தாரில் ஒருவரும், நபித்தோழர் உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரியுமான உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி) என்னிடம் கூறினார்கள்:

திடஉணவு சாப்பிடும் பருவத்தை அடையாத என்னுடைய ஆண் குழந்தையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன்.

(இதைக் கவனித்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்தச் சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை ஏன் துன்புறுத்துகின்றீர்கள்? இந்தியக் (கோஷ்டக் குச்சியைப்) பயன்படுத்துங்கள். அதில் ஏழு வகையான நிவாரணங்கள் உள்ளன. அவற்றுள் (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியும் ஒன்றாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்)


குறிப்புகள் :

“அந்த ஆண் குழந்தைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்தது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, அந்தச் சிறுநீர் பட்ட இடத்தின் மீது தெளித்துவிட்டார்கள். நன்கு (தண்ணீர் ஊற்றிக்) கழுவவில்லை” என்று உம்மு கைஸ் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்” என்று அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறுகின்றார்.

“குழந்தைக்கு அடிநாக்கு அழற்சி ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயத்தில் தொண்டையில் திரியை அழுத்திவைத்திருந்தார்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) கூறுகின்றார்.