அத்தியாயம்: 39, பாடம்: 31, ஹதீஸ் எண்: 4096

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أَخِي اسْتَطْلَقَ بَطْنُهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اسْقِهِ عَسَلاً ‏” فَسَقَاهُ ثُمَّ جَاءَهُ فَقَالَ إِنِّي سَقَيْتُهُ عَسَلاً فَلَمْ يَزِدْهُ إِلاَّ اسْتِطْلاَقًا ‏.‏ فَقَالَ لَهُ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ جَاءَ الرَّابِعَةَ فَقَالَ ‏”‏ اسْقِهِ عَسَلاً ‏” فَقَالَ لَقَدْ سَقَيْتُهُ فَلَمْ يَزِدْهُ إِلاَّ اسْتِطْلاَقًا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ ‏” فَسَقَاهُ فَبَرَأَ ‏


وَحَدَّثَنِيهِ عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، – يَعْنِي ابْنَ عَطَاءٍ – عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أَخِي عَرِبَ بَطْنُهُ ‏.‏ فَقَالَ لَهُ ‏ “‏ اسْقِهِ عَسَلاً ‏” بِمَعْنَى حَدِيثِ شُعْبَةَ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் சகோதரருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார். நபி (ஸல்) “அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர் தேனூட்டிவிட்டுப் பிறகு (மீண்டும்) வந்து, “அவருக்கு நான் தேனூட்டினேன். ஆனால், வயிற்றுப்போக்கு அதிகரித்தது” என்று சொன்னார். இவ்வாறே (தேனூட்டுமாறு) மூன்று தடவை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

நான்காவது தடவை அவர் வந்தபோது, “அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். அப்போதும் அவர், “அவருக்கு நான் தேனூட்டினேன்; ஆனால், வயிற்றுப்போக்கு அதிகரித்தது” என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ், (தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. (அவருக்குத் தேன் ஊட்டுங்கள்)” என்று சொன்னார்கள். அவர் மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டியபோது அவர் குணமடைந்தார்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் சகோதரரின் இரைப்பை கெட்டுவிட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவருக்குத் தேன் ஊட்டுங்கள் என்று கூறினார்கள்” என ஆரம்பமாகின்றது.

Share this Hadith:

Leave a Comment