அத்தியாயம்: 43, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4321

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ رَوْحِ بْنِ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَكَثَ بِمَكَّةَ ثَلاَثَ عَشْرَةَ وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4320

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو قَالَ قُلْتُ لِعُرْوَةَ :‏

كَمْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ قَالَ عَشْرًا ‏.‏ قَالَ قُلْتُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ ثَلاَثَ عَشْرَةَ ‏


وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو قَالَ قُلْتُ لِعُرْوَةَ كَمْ لَبِثَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ قَالَ عَشْرًا ‏.‏ قُلْتُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ بِضْعَ عَشْرَةَ ‏.‏ قَالَ فَغَفَّرَهُ وَقَالَ إِنَّمَا أَخَذَهُ مِنْ قَوْلِ الشَّاعِرِ ‏

நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) (நபியாக்கப்பட்ட பின்னர்) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “பத்து ஆண்டுகள்” என்று பதிலளித்தார்கள். நான், “ஆனால், பதின்மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அம்ரு பின் தீனார் (ரஹ்)


குறிப்பு :

ஸுஃப்யான் வழி அறிவிப்பில், நான் உர்வா (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) (நபியாக்கப்பட்ட பின்பு) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பத்து ஆண்டுகள்’ என்று பதிலளித்தார்கள். “ஆனால், பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்களே?” என்று நான் கேட்டேன்.

அப்போது உர்வா (ரஹ்), “அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!” என்று பாவ மன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்துவிட்டு, “இப்னு அப்பாஸ், அந்த (அபூகைஸ் என்ற) கவிஞரின் வரிகளிலிருந்தே அதை எடுத்துரைக்கின்றார்” என்று சொன்னார்கள் என்று காணப்படுகின்றது.

அத்தியாயம்: 43, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4319

وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي قَالَ حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ سَنَةً ‏


وَقَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ بِمِثْلِ ذَلِكَ ‏

وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبَّادُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، بِالإِسْنَادَيْنِ جَمِيعًا مِثْلَ حَدِيثِ عُقَيْلٍ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4318

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الرَّازِيُّ، مُحَمَّدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا حَكَّامُ بْنُ سَلْمٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ زَائِدَةَ عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَعُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ரு (ரலி) அவர்களும் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 31, ஹதீஸ் எண்: 4317

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ وَلاَ بِالْقَصِيرِ وَلَيْسَ بِالأَبْيَضِ الأَمْهَقِ وَلاَ بِالآدَمِ وَلاَ بِالْجَعْدِ الْقَطَطِ وَلاَ بِالسَّبِطِ بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ وَتَوَفَّاهُ اللَّهُ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ


وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ ح وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ كِلاَهُمَا عَنْ رَبِيعَةَ، – يَعْنِي ابْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، ‏.‏ بِمِثْلِ حَدِيثِ مَالِكِ بْنِ أَنَسٍ وَزَادَ فِي حَدِيثِهِمَا كَانَ أَزْهَرَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பார்ப்பதற்கு மிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; அடர் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடிவுடையவர்களாகவும் இல்லை.

நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள்.

அறுபதுகளின் தொடக்கத்தில் அவர்களை இறைவன் இறக்கச் செய்தான். அப்போது அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் ஒளிரக்கூடியவர்களாக இருந்தார்கள்” என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 43, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4316

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ح وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، كِلاَهُمَا عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، ح وَحَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، – يَعْنِي ابْنَ زِيَادٍ – حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ قَالَ :‏

رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَكَلْتُ مَعَهُ خُبْزًا وَلَحْمًا – أَوْ قَالَ ثَرِيدًا – قَالَ فَقُلْتُ لَهُ أَسْتَغْفَرَ لَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ وَلَكَ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ ‏{‏وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ‏}‏ قَالَ ثُمَّ دُرْتُ خَلْفَهُ فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ عِنْدَ نَاغِضِ كَتِفِهِ الْيُسْرَى جُمْعًا عَلَيْهِ خِيلاَنٌ كَأَمْثَالِ الثَّآلِيلِ ‏

அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி), “நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அவர்களுடன் ரொட்டியும் இறைச்சியும் / தக்கடி உணவும் சாப்பிட்டேன்” என்று கூறினார்கள்.

அவர்களிடம் நான், “உங்களுக்காக நபி (ஸல்) பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி), “ஆம்; உங்களுக்கும்தான் (பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள்)” என்று கூறிவிட்டு, “(நபியே!) உம்முடைய பாவத்திற்காகவும் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் நீர் பாவமன்னிப்புக் கோருவீராக!” எனும் (47:19) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

மேலும் கூறினார்கள்: “பிறகு நான் நபி (ஸல்) அவர்க(ளுடைய முதுகு)க்குப் பின்னே சுற்றிவந்தேன். அப்போது அவர்களுடைய இரு தோள்பட்டைகளுக்கிடையே இடது தோளின் மேற்புறத்தில் கை முஷ்டியைப் போன்று (துருத்திக்கொண்டும்) கொப்புளங்களைப் போன்று தழும்பாகவும் உள்ள நபித்துவ முத்திரையைக் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி) வழியாக ஆஸிம் பின் ஸுலைமான் (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4315

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، قَالاَ حَدَّثَنَا حَاتِمٌ، – وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ – عَنِ الْجَعْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ يَقُولُ :‏

ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ ‏.‏ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى خَاتِمِهِ بَيْنَ كَتِفَيْهِ مِثْلَ زِرِّ الْحَجَلَةِ ‏

என்னை என் தாயின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் உளூச் செய்தார்கள். அவர்கள் உளூச் செய்(து மிச்சம் வைத்)த நீரில் நான் சிறிது குடித்தேன்.

பிறகு நான் அவர்களுடைய முதுகுக்குப் பின்னே நின்றேன். அப்போது அவர்களுடைய தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது.

அறிவிப்பாளர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4314

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ قَالَ :‏

رَأَيْتُ خَاتِمًا فِي ظَهْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّهُ بَيْضَةُ حَمَامٍ ‏


وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا حَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ سِمَاكٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முதுகில் (நபித்துவ) முத்திரை இருந்ததை நான் பார்த்தேன். அது புறா முட்டை போன்று இருந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4313

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ:‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ شَمِطَ مُقَدَّمُ رَأْسِهِ وَلِحْيَتِهِ وَكَانَ إِذَا ادَّهَنَ لَمْ يَتَبَيَّنْ وَإِذَا شَعِثَ رَأْسُهُ تَبَيَّنَ وَكَانَ كَثِيرَ شَعْرِ اللِّحْيَةِ فَقَالَ رَجُلٌ وَجْهُهُ مِثْلُ السَّيْفِ قَالَ لاَ بَلْ كَانَ مِثْلَ الشَّمْسِ وَالْقَمَرِ وَكَانَ مُسْتَدِيرًا وَرَأَيْتُ الْخَاتَمَ عِنْدَ كَتِفِهِ مِثْلَ بَيْضَةِ الْحَمَامَةِ يُشْبِهُ جَسَدَهُ

ஜாபிர் பின் ஸமுரா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலை மற்றும் தாடியின் முன்பகுதி பழுப்பேறி (வெண்மையாகி) இருந்தது. அவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்திருந்தால் அந்த வெண்மை தென்படாது. அவர்கள் (எண்ணெய் தேய்க்காமல்) பரட்டை தலையுடன் இருந்தால் அந்த வெண்மை தென்படும். அவர்களது தாடியில் அடர்த்தியான முடிகள் இருந்தன” என்று கூறினார்கள்.

அப்போது (அங்கிருந்த) ஒருவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் வாளைப் போன்று (மின்னிக்கொண்டு நீளமாக) இருந்ததா?” என்று கேட்டார். ஜாபிர் பின் ஸமுரா (ரலி) (அதை மறுத்து), “இல்லை; அவர்களது முகம் சூரியனைப் போன்றும் சந்திரனைப் போன்றும் இருந்தது; வட்டமானதாக இருந்தது. அவர்களது முதுகில் தோள்பட்டை அருகில் நபித்துவ முத்திரையை நான் கண்டேன். அது புறா முட்டை போன்று அவர்களது உடலின் நிறத்திலேயே இருந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4312

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ :‏

سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَىْءٌ وَإِذَا لَمْ يَدْهُنْ رُئِيَ مِنْهُ

ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒருசில நரைமுடிகூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடிகள் தென்படும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்)