அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2842

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏بُشَيْرِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏بَعْضِ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏مِنْ أَهْلِ دَارِهِمْ مِنْهُمْ ‏ ‏سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ وَقَالَ ذَلِكَ الرِّبَا تِلْكَ ‏ ‏الْمُزَابَنَةُ ‏ ‏إِلَّا أَنَّهُ رَخَّصَ فِي بَيْعِ ‏ ‏الْعَرِيَّةِ ‏ ‏النَّخْلَةِ وَالنَّخْلَتَيْنِ يَأْخُذُهَا أَهْلُ الْبَيْتِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا يَأْكُلُونَهَا رُطَبًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்குத் தடை விதித்தார்கள். மேலும், ‘அது வட்டியாகும்; அதுவே ‘முஸாபனா’ ஆகும்’ என்றும் கூறினார்கள். ஆயினும், ‘அராயா’வில் மட்டும் அதற்கு அனுமதியளித்தார்கள்.

‘அராயா’ என்பது, (ஏழைகளுக்குக் கொடையளிக்கப்பட்ட) ஓரிரு பேரீச்ச மரங்களிலுள்ள செங்கனிகளை தோட்ட உரிமையாளர்கள் தோராயமாகக் கணக்கிட்டு எடுத்துக்கொண்டு, (ஈடாக) உலர்ந்த பழங்களை (ஏழைகளுக்குக்) கொடுத்துவிட்டு, மரத்திலுள்ள செங்கனிகளை(ப் பறித்து) உண்பதாகும்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை புஷைர் பின் யஸார் (ரஹ்), தமது தெருவில் வசித்த (பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த) சில நபித்தோழர்களிடமிருந்து பெற்று அறிவித்தார்கள். ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் அவர்களில் ஒருவர் ஆவார்கள்.