அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2850

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏أَنْ يَبِيعَ ثَمَرَ ‏ ‏حَائِطِهِ ‏ ‏إِنْ كَانَتْ نَخْلًا بِتَمْرٍ كَيْلًا وَإِنْ كَانَ كَرْمًا أَنْ يَبِيعَهُ بِزَبِيبٍ كَيْلًا وَإِنْ كَانَ زَرْعًا أَنْ يَبِيعَهُ بِكَيْلِ طَعَامٍ نَهَى عَنْ ذَلِكَ كُلِّهِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏أَوْ كَانَ زَرْعًا ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். (அதாவது):

  1. ஒருவரது தோட்டத்திலுள்ள பேரீச்ச மரங்களில் உள்ள செங்கனிகளை, அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்கும்,
  2. கொடியிலுள்ள திராட்சைப் பழங்களை, அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைகளுக்குப் பதிலாக விற்பதற்கும்,
  3. கதிர்களிலுள்ள தானியங்களை, அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதற்கும் தடை விதித்தார்கள்.

இவை அனைத்துக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2849

‏حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ الْمُزَابَنَةِ وَالْمُزَابَنَةُ أَنْ يُبَاعَ مَا فِي رُءُوسِ النَّخْلِ بِتَمْرٍ بِكَيْلٍ مُسَمَّى إِنْ زَادَ فَلِي وَإِنْ نَقَصَ فَعَلَيَّ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். ‘முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்தில் இருக்கும் செங்கனிகளை, குறிப்பிட்ட அளவைக் கொண்ட (பறிக்கப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். (அவ்வாறு) விற்கும்போது, (அளக்கப்பட்ட) “இந்தப் பழங்கள், (மரத்திலுள்ள பழங்களைவிட) அதிகமாக இருந்தால், அந்த அதிகம் எனக்குரியது. குறைவாக இருந்தால் (அதை ஏற்றுக்கொள்ளும்) பொறுப்பாளியும் நானாவேன்” என்று (விற்பவர்) கூறுவார்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2848

‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ مَعِينٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَحُسَيْنُ بْنُ عِيسَى ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْمُزَابَنَةِ وَالْمُزَابَنَةُ بَيْعُ ثَمَرِ النَّخْلِ بِالتَّمْرِ كَيْلًا وَبَيْعُ الزَّبِيبِ بِالْعِنَبِ كَيْلًا وَعَنْ كُلِّ ثَمَرٍ ‏ ‏بِخَرْصِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ’முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். ‘முஸாபனா’ என்பது, (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளை, அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைப் பழங்களை, அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், மரத்திலுள்ள எந்தக் கனியையும் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதும் ஆகும்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2847

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏أَخْبَرَهُ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ الْمُزَابَنَةِ بَيْعِ ثَمَرِ النَّخْلِ بِالتَّمْرِ كَيْلًا وَبَيْعِ الْعِنَبِ بِالزَّبِيبِ كَيْلًا وَبَيْعِ الزَّرْعِ بِالْحِنْطَةِ كَيْلًا ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்) ‘முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். (அதாவது:) (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளுக்குப் பதிலாக, அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களை விற்பதையும், உலர்ந்த அளக்கப்பட்ட திராட்சைக் கனிகளுக்குப் பதிலாக (கொடியிலுள்ள) உலராத திராட்சைக் கனிகளை விற்பதையும், அளக்கப்பட்ட தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குப் பதிலாக (அறுவடை செய்யப்படாத) கதிரிலுள்ள கோதுமையை விற்பதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர்

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2846

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُزَابَنَةُ بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ كَيْلًا وَبَيْعُ الْكَرْمِ بِالزَّبِيبِ كَيْلًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஸாபனா’ வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். ‘முஸாபனா’ என்பது (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளை, அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைக் கனிகளை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக் கனிகளுக்குப் பகரமாக விற்பதும் ஆகும்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2845

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، – وَاللَّفْظُ لَهُ – قَالَ قُلْتُ لِمَالِكٍ حَدَّثَكَ دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ، – مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ  عَنْ أَبِي هُرَيْرَة

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ أَوْ فِي خَمْسَةِ


يَشُكُّ دَاوُدُ قَالَ خَمْسَةٌ أَوْ دُونَ خَمْسَةٍ – قَالَ نَعَمْ ‏

 ‘அராயா’ வணிகத்தில், (பேரீச்ச மரத்தில் உள்ள) செங்கனிகளை, உலர்ந்த பேரீச்சங் கனிகளுக்குப் பதிலாக ஐந்து வஸ்குகளுக்காகவோ ஐந்து வஸ்குகளுக்கும் குறைவாகவோ விற்பனை செய்துகொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)


குறிப்பு :

மேற்கானும் ஹதீஸை, மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், ‘இப்னு அபீஅஹ்மத் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) உங்களுக்கு அறிவித்தார்களா?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள் என யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) கூறுகின்றார்.

“ஐந்து வஸ்குகளுக்கோ ஐந்து வஸ்குகளுக்குக் குறைவாகவோ…’’ என அறிவிப்பாளர் தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) ஐயப்பாட்டுடன் அறிவிக்கின்றார்.

முகத்தல் அளவை பற்றிய தோராயக் குறிப்புகள்:
1 முத் = 544 கிராம்
1 ஸாஉ = 4 முத்கள் * 544 = 2176 கிராம்
1 வஸக் = 60 ஸாஉகள் * 2176 = 130560 கிராம் (அ) 130கி. 560 கிராம்.

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2844

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بُشَيْرُ بْنُ يَسَارٍ ‏ ‏مَوْلَى ‏ ‏بَنِي حَارِثَةَ ‏ ‏أَنَّ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏وَسَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ ‏ ‏حَدَّثَاهُ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏الثَّمَرِ بِالتَّمْرِ إِلَّا أَصْحَابَ ‏ ‏الْعَرَايَا ‏ ‏فَإِنَّهُ قَدْ أَذِنَ لَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பேரீச்ச மரத்திலுள்ள செங்கனிகளை (மரத்திலிருந்து பறிக்கப்பட்ட) உலர்ந்த கனிகளுக்குப் பதிலாக விற்பனை செய்யும் முறையான ‘முஸாபனா’வைத் தடை செய்தார்கள். – ‘அராயா’க்காரர்களைத் தவிர்த்து. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அராயா’க்காரர்களுக்கு மட்டும் (முஸாபனா வியாபாரம் செய்துகொள்ள) அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) & ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2843

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏بُشَيْرِ بْنِ يَسَارٍ: ‏
عَنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُمْ قَالُوا ‏ ‏رَخَّصَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْعِ ‏ ‏الْعَرِيَّةِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏بُشَيْرُ بْنُ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏بَعْضِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ أَهْلِ دَارِهِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏إِسْحَقَ ‏ ‏وَابْنَ الْمُثَنَّى ‏ ‏جَعَلَا مَكَانَ الرِّبَا الزَّبْنَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏الرِّبَا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏بُشَيْرِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அராயா’வில் (மட்டும் பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைக் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள் என நபித்தோழர்கள் கூறினர்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) வழியாக புஷைர் பின் யஸார் (ரஹ்)


குறிப்பு :

ஹதீஸ் எண் 2842இல் இடம் பெறும் ‘வட்டி’ என்பதற்குப் பதிலாக இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘பண்டமாற்று’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இப்னு அபீஉமர் (ரஹ்) வழி அறிவிப்பில் ‘வட்டி’ என்றே காணப்படுகிறது.

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2842

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏بُشَيْرِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏بَعْضِ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏مِنْ أَهْلِ دَارِهِمْ مِنْهُمْ ‏ ‏سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ وَقَالَ ذَلِكَ الرِّبَا تِلْكَ ‏ ‏الْمُزَابَنَةُ ‏ ‏إِلَّا أَنَّهُ رَخَّصَ فِي بَيْعِ ‏ ‏الْعَرِيَّةِ ‏ ‏النَّخْلَةِ وَالنَّخْلَتَيْنِ يَأْخُذُهَا أَهْلُ الْبَيْتِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا يَأْكُلُونَهَا رُطَبًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்குத் தடை விதித்தார்கள். மேலும், ‘அது வட்டியாகும்; அதுவே ‘முஸாபனா’ ஆகும்’ என்றும் கூறினார்கள். ஆயினும், ‘அராயா’வில் மட்டும் அதற்கு அனுமதியளித்தார்கள்.

‘அராயா’ என்பது, (ஏழைகளுக்குக் கொடையளிக்கப்பட்ட) ஓரிரு பேரீச்ச மரங்களிலுள்ள செங்கனிகளை தோட்ட உரிமையாளர்கள் தோராயமாகக் கணக்கிட்டு எடுத்துக்கொண்டு, (ஈடாக) உலர்ந்த பழங்களை (ஏழைகளுக்குக்) கொடுத்துவிட்டு, மரத்திலுள்ள செங்கனிகளை(ப் பறித்து) உண்பதாகும்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை புஷைர் பின் யஸார் (ரஹ்), தமது தெருவில் வசித்த (பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த) சில நபித்தோழர்களிடமிருந்து பெற்று அறிவித்தார்கள். ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் அவர்களில் ஒருவர் ஆவார்கள்.

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2841

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ ثَابِتٍ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي ‏ ‏الْعَرَايَا ‏ ‏أَنْ تُبَاعَ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏كَيْلًا ‏


و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏أَنْ تُؤْخَذَ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي بَيْعِ ‏ ‏الْعَرَايَا ‏ ‏بِخَرْصِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அராயா’வில் (மட்டும் பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைக் தோராயமாகக் கணக்கிட்டு, அவற்றுக்குப் பதிலாக உலர்ந்த கனிகளை அளந்து பண்டமாற்றி / விற்றுக்கொள்ள அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


குறிப்புகள் :

யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘ … தோராயமாகக் கணக்கிட்டு எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்’ என இடம்பெற்றுள்ளது.

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்),‘அராயா’ வியாபாரத்தில் (மட்டும் பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைத் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது.