அத்தியாயம்: 21, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2888

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَنْظَلَةُ بْنُ قَيْسٍ الْأَنْصَارِيُّ ‏ ‏قَالَ: ‏
سَأَلْتُ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ بِالذَّهَبِ وَالْوَرِقِ فَقَالَ ‏ ‏لَا بَأْسَ بِهِ إِنَّمَا كَانَ النَّاسُ يُؤَاجِرُونَ عَلَى عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏الْمَاذِيَانَاتِ ‏ ‏وَأَقْبَالِ ‏ ‏الْجَدَاوِلِ ‏ ‏وَأَشْيَاءَ مِنْ الزَّرْعِ فَيَهْلِكُ هَذَا وَيَسْلَمُ هَذَا وَيَسْلَمُ هَذَا وَيَهْلِكُ هَذَا فَلَمْ يَكُنْ لِلنَّاسِ كِرَاءٌ إِلَّا هَذَا فَلِذَلِكَ زُجِرَ عَنْهُ فَأَمَّا شَيْءٌ مَعْلُومٌ مَضْمُونٌ فَلَا بَأْسَ بِهِ

நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளிக்(காசுகளுக்)கு விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “குற்றமில்லை; நபி (ஸல்) காலத்தில் நீரோடை ஓரத்தில் விளைபவற்றை, அல்லது வாய்க்கால் முனையில் விளைபவற்றை, அல்லது விளைச்சலில் (குறிப்பிட்ட) சிலவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரிலேயே மக்கள் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தனர். அதில் இவர் பாதிப்படைவார்; அவர் தப்பித்துக்கொள்வார்; அல்லது இவர் தப்பித்துக்கொள்வார்; அவர் பாதிப்படைவார். இந்தக் குத்தகை முறையைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.

ஆதலால்தான், அது கண்டிக்கப்பட்டது. அறியப்பட்ட ஒரு பொருள் பிணையாக்கப்படுமானால் அ(தற்காக விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தில் குற்றமில்லை.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக ஹன்ழலா பின் கைஸ் அல் அன்ஸாரீ (ரஹ்)

Share this Hadith: